பாக்கியலட்சுமி: மீண்டும் வந்த ராதிகா சொன்ன வார்த்தை.. ஈஸ்வரி எடுத்த முடிவு! மகிழ்ச்சியில் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் 2025 பிப்ரவரி 25ஆம் தேதி எபிசோடு பாக்கியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. அப்போது ராதிகாவும் வந்திருக்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரி முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் நடந்து கொண்டே பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்போது நாளைக்கு ஆன்டி பர்த்டேக்கு என்ன சர்ப்பிரைஸ் வச்சிருக்க என்று ஆகாஷ் கேட்க, அவங்க கூட வேலை செஞ்சவங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க என எல்லாரையும் பேச வச்சு வீடியோ ரெடி பண்ணி வச்சிருக்கேன்.

ஆனால் இன்னும் எடிட்டிங் பண்ணல. நீ செல்வி ஆன்ட்டி பேசுறதை வீடியோ எடுத்து எனக்கு எடிட் பண்ணி கொடுக்கணும் என்று சொல்ல, ஆகாஷ் சரி பண்ணுறேன் என்று சொல்லி இருக்கிறார். பிறகு நீயும் வருவதானே என்று கேட்க கண்டிப்பாக வருவேன் என்று ஆகாஷ் சொல்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியாவும், இனியாவும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது இனியாவிற்கு ஃபோன் வருகிறது. உடனே முழித்த இனியா போனை எடுத்துக் கொண்டு கீழே வந்து பார்க்க அங்கு செழியன் மற்றும் எழில் இருவரும் கேக்குடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சாரி அண்ணா முழிக்கனும்னு நினைச்சேன் தூங்கிட்டேன் என்று சொல்ல, நீ போய் பாட்டியை எழுப்பு நான் கேக் எடுத்துட்டு வரேன் என்று சொல்ல செழியன் நான் போய் அப்பாவை எழுப்பறேன் என்று சொல்கிறார்.
பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்கு செருப்படி கொடுத்த பாக்யா.. கோபி சொன்ன சரியான விஷயம்
முதலில் எழில் மறுக்கிறார். பிறகு சரி என்று சொல்லிவிடுகிறார். பிறகு எல்லோரும் சேர்ந்து பாக்யாவை எழுப்பி வாழ்த்து சொல்லி கேக் வெட்ட சொல்கின்றனர். கேக் வெட்டும் சமயத்தில் கோபி வெளியே வெயிட் பண்ணிக் கொண்டிருக்க செழியன் எல்லோரையும் ரூமிற்கு கூப்பிடுகின்றார். பாக்கியா கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விடுகிறார்.

அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி பூஜை செய்து பாக்கியாவிற்கு பொட்டு வைத்து விடுகிறார். பாக்யா ஆசீர்வாதம் வாங்குகிறார். அப்போது ஈஸ்வரி நான் உனக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன் என்று சொல்ல, இனியாவும் நானும் சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் என்று சொல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவு உறுதி.. ஆனால்! கோபி போட்ட போஸ்ட்! இவருக்கே இந்த நிலைமையா?
பாக்கியா என்ன சர்ப்ரைஸ் என்று கேட்க, இருவரும் சொல்ல மறுக்கிறார்கள். பிறகு நான் சமைக்கப் போறேன் என்று பாக்கியா கிளம்பவும் கோபி எதிரில் வந்து பாக்கியாவிற்கு வாழ்த்து சொல்லி ஒரு கிப்ட் கொடுக்கிறார். முதலில் அதை வேண்டாம் என்று சொல்லும் பாக்கியா பிறகு வாங்கிக் கொள்கிறார்.

அடுத்ததாக செல்வி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அது என்ன கிப்ட் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் பாக்கியா அதைப் பிரித்து பார்க்காமலேயே செல்பில் வைத்து மூடி விடுகிறார். அடுத்ததாக பாக்கியா புது புடவை கட்டி மேக்கப் போட்டு பிறந்தநாள் கொண்டாட தயாராக இருக்கும்போது ஜெனி அமிர்தா இருவரும் வருகிறார்கள்.

அவர்கள் கட்டிபிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்து சொல்கிறார்கள். அப்போது ராதிகாவும் பொக்கே உடன் வந்து வாழ்த்து சொல்கிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் எல்லோரிடமும் ராதிகா நலம் விசாரித்து கொண்டிருக்கிறார். பிறகு எல்லோரும் கேக் வெட்ட வருகின்றனர். அப்போது கோபியிடம் உடம்பு எப்படி இருக்கு பிசினஸ் எப்படி போகுது என்று ராதிகா நலம் விசாரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications