பாக்கியலட்சுமி: இனியாவால் பாக்யாவிற்கு சந்தோஷம்.. அவமானப்படும் கோபி.‌. ராதிகா ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 26ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவும் கோபியும் இனி மீண்டும் திருமணம் செய்ய போகிறார்கள் என்று ஈஸ்வரி சொன்ன வார்த்தையை கேட்டு பாக்கியா கோபப்படுகிறார். அதே நேரத்தில் இனியா செய்த செயலால் மொத்த குடும்பத்தினரும் சந்தோஷப்படுகின்றனர்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவிற்காக இனியா எல்லோரிடமும் பேட்டி எடுத்து ஒரு வீடியோ வெளியிடுகிறார். அதில் முதலாவதாக இனியாவே பேசுகிறார். அதை தொடர்ந்து பாக்யாவின் ஸ்கூல் டீச்சர் பேசுகிறார்கள் பிறகு பாக்கியாவுடன் வேலை பார்த்தவர்கள், பாக்கியாவின் தெருவில் உள்ளவர்கள் என்று வரிசையாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Baakiyalakshmi Serial vijay TV

அப்போது ராதிகாவும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் நான் பாக்யாவை பார்த்து பல நேரங்களில் பொறாமைப்பட்டு இருக்கிறேன். பாக்யா எல்லா இடங்களிலும் சிறப்பாக இருக்கிறார்கள். அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையிலும் சரி அவங்களுடைய பிசினஸிலும் சரி அவங்க சிறப்பா செயல்படுறாங்க. அவங்க பலருக்கும் முன்மாதிரியா இருக்காங்க என்று சொல்ல பாக்கியா எமோஷனல் ஆகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு உறுதி.. ஆனால்! கோபி போட்ட போஸ்ட்! இவருக்கே இந்த நிலைமையா?
அதை தொடர்ந்து ஜெனி பேசுகிறார். அப்போது நான் செழியனை காதலிப்பதற்கு முக்கிய காரணமே பாக்கியா ஆன்ட்டிதான். அவங்களுடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சதால தான் அவங்களுடைய குடும்பத்தில் வரவேண்டும் என்று நினைத்தேன் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து அமிர்தா பேசுகிறார். அப்போது எனக்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்த போதும் பாக்கியா அம்மா தான் எனக்கு துணையா இருந்தாங்க.

Baakiyalakshmi Serial vijay TV

நீங்க இன்னும் பல வருஷம் நல்லா இருக்கணும் என்று சொல்கிறார். கடைசியாக செல்வி பேசுகிறார் அப்போது செல்வி நான் பல இடங்களில் அவமானப்பட்டு இருக்கிறேன். எனக்கு துணையாகவும் ஒரு நல்ல அக்காவாகவும் இருந்தது பாக்கியா தான். என் பையனால படிக்கவே முடியாது என்று நினைத்தேன் ஆனா இன்னைக்கு என் பையன் இவ்ளோ படிச்சிருக்கிறான் என்றால் அதற்கு காரணம் பாக்கியா அக்கா தான்.

நீ நல்லா இருக்கணும் அப்போதுதான் என்னை போல பலர் சந்தோஷமாய் வாழ முடியும் என்று அழுதபடி பேச அதை பார்த்து பாக்கியாவும் கண்கலங்கி அழுகிறார். அதை தொடர்ந்து ஈஸ்வரி பேசுகிறார். அப்போது நான் பாக்கியா பிறந்தநாள் கொண்டாட போறா என்று சொன்னபோது எதற்கு இப்போ என்று நினைத்தேன் ஆனால் அதோட முக்கியத்துவம் எனக்கு இப்போதுதான் தெரிகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

இங்கு எல்லாரும் பேசியதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா இருந்தது. நானும் பாக்கியாவிற்க்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன் என்று சொல்லி இருந்தேன் அது வேறு எதுவும் இல்லை கோபியும் பாக்கியாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான். பாக்கியாவும் கோபியும் சில காரணங்களால் வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டார்கள் ஆனால் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்நது வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று சொல்ல, இதை எதிர்பார்க்காத கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். பாக்கியாவும் கோபப்படுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

அப்போது ராதிகா இது எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்பது போல ரியாக்ஷன் கொடுத்து கொண்டு இருக்கிறார். ஈஸ்வரியை தொடர்ந்து பாக்யா பேசுகையில் அத்தை ஒரு பரிசு தரப் போறேன்னு சொன்னாங்க ஆனா அவங்க மனசில் இருப்பதை இப்போ சொல்லி இருக்காங்க. இது கனவில் கூட நடக்காத விஷயம். நாங்க பிரிந்தது பிரிந்தது தான்.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு! பாக்கியா வெளியிட்ட போஸ்ட்.. கோபி சொன்ன தகவல்.. இனி இதுதான் கதையா?
இனி என்னுடைய வாழ்க்கையில் யாருக்கும் இடம் இல்லை என்று பாக்கியா சொன்னதும் ஈஸ்வரி கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+