நான் ஏமாந்துட்டேன்..எதிர்பார்ப்பு..!விலகல் குறித்து கோபி கொடுத்த விளக்கம்..இதுதான் காரணமா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷ், கோபி கேரக்டரில் நடித்து வருகிறார்.
நேற்று தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள் நான் ரொம்பவே ஏமாற்றம் அடைந்து விட்டேன் என உருக்கமாக பல தகவல்களை பேசி இருக்கிறார் அதை விரிவாக பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனாலையே இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கோபியாக இப்ப வரைக்கும் நடித்து வரும் சதீஷ் திடீரென்று தான் விலகப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ஏற்கனவே சதீஷ் இந்த சீரியல் குறித்தும் இனிவரும் எபிசோடுகள் குறித்தும் அடிக்கடி அப்டேட் கொடுத்து கொண்டிருப்பார். இந்த நிலையில் திடீரென்று இவர் வெளியிட்ட வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இவர் இந்த சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வந்தாலும் அதிகமான ரசிகர்கள் பாராட்டி வந்தனர். தற்போதைய சூழ்நிலையில் பலரும் இதே மாதிரி முடிவு எடுக்கக் கூடாது என்பதை இவர் வலியுறுத்தி பல நேரங்களில் வீடியோக்களும் வெளியிட்டு இருக்கிறார்.
தொடர்ந்து தனக்கு இந்த சீரியலின் மூலமாக அதிகமான ஆதரவு கிடைத்து வருவதாகவும் அடிக்கடி சதீஷ் வீடியோவில் பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தான் எதனால் வெளியேறுகிறேன் என்பதை நேற்றைய வீடியோவில் கூறவில்லை இந்த நிலையில் இன்றைய வீடியோவில் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் வந்தால் ரொம்ப கஷ்டம். அது ஏமாற்றத்தில் தான் முடியும்
என்று கூறியிருக்கிறார்.

அதைவிட ஒரு பெட்டர் விஷயம் நான் நேற்று கத்துக் கொண்டேன். நேற்றைக்கு வரைக்கும் நான் நிறைய படிச்சு பெரிய புத்திசாலி, மேதாவி உலகத்தையே மாத்தலாம் என்றெல்லாம் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா அது எல்லாம் இல்லை நான் ஒரு முட்டாள் அதை நான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ நான் ஒரு அறிவாளி, இப்போ என்னை பற்றி தெரிந்துகொண்டு என்னை நான் மாத்தி விட்டேன்.
உலகத்தை மாற்ற முடியாது ஆனால் நம்மள பாதுகாத்துக் கொள்ள முடியும். நம்மளை மாத்திக்க முடியும் அதை மட்டும் தான் நம்மளால முடியும். அதை நான் செய்கிறேன். முயற்சி திரு வினையாக்கும் என்று கூறி இருக்கிறார். இதைக் குறித்து அதிகமான ரசிகர்கள் உங்களுக்கு டெலிவிஷன் விருது கிடைக்கவில்லையா? அதற்காகத்தான் நீங்கள் சீரியலை விட்டு விலகுகிறீர்களா? இதுதான் காரணம் என்றால், தயவு செய்து அதை செய்ய வேண்டாம். நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள். பதிலுக்கு எதையும் எதிர்பாராதீர்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications