பாக்கியலட்சுமி: ஈஸ்வரியின் திடீர் மன மாற்றம்.. அதிர்ச்சியில் குடும்பம்.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெயிலிலிருந்து வந்த ஈஸ்வரியை பார்ப்பதற்காக கோபி பாக்யா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி பாக்யாவின் வீட்டு வாசலில் தயக்கத்தோடு நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா தடபுடலாக விருந்து வைக்க அதை பார்த்து ஈஸ்வரி எதற்காக இவ்வளவு சாப்பாடு செஞ்சிருக்க என்று கேட்க, இனி நீங்க சந்தோஷமா இந்த வீட்டில் இருக்கணும்.

நடந்ததை எல்லாம் மறந்து நீங்க மகிழ்ச்சியாக இருக்கனும் அதற்காகத்தான் நான் உங்களுக்காக பார்த்து பார்த்து சமைச்சு இருக்கிறேன் என்று சொல்ல, பக்கத்தில் இருந்த செல்வி அம்மா ஜெயிலில் நாக்குக்கு ருசி இல்லாமல் சாப்பிட்டிருப்பாங்க அதனால் தான் எங்கே வாய்க்கு ருசியா சாப்பிடணும் என்று அக்கா இப்படி செஞ்சிருக்காங்க என்று சொல்ல ஈஸ்வரி நான் என்ன ஜெயிலில் வருஷகணக்காவா இருந்தேன் என்று கோபப்படுகிறார்.
அப்போது பாக்கியா இனி யாரும் அந்த விஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இனியா ஜெயிலில் உங்களை அடிச்சாங்களா? அங்கு என்னவெல்லாம் நடந்துச்சு சொல்லுங்க பாட்டி என்று கேட்க, பாக்கியா கோபப்பட்டு யாரும் இனி நடந்து முடிந்த விஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லி எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறி சாப்பிட சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் தயங்கி தயங்கி கோபி வீட்டிற்குள் வர கோபியை பார்த்ததும் ராமமூர்த்தி, எழில், செழியன் என எல்லோரும் கோபப்படுகின்றனர். எழிலும் ராமமூர்த்தியும் அவரை வெளியே போகுமாறு திட்டுகின்றனர். ஆனால் கோபி நான் என்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு தான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்க பாக்யா எழிலை விட்டு விடு என்று சொல்கிறார்.
இதனால் ஈஸ்வரி இடம் போன கோபி தன்னை மன்னிக்குமாறு கெஞ்சுகிறார். அதோடு நான் உங்களை நம்பி இருக்கணும் என்று நடந்ததை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார். அதுவரைக்கும் அமைதியாக இருந்த ஈஸ்வரி ஒரு கட்டத்தில் கோபமாகி ஹாலுக்கு வந்து நீ எதுக்கு இங்க வந்த உன்னால பட்டது போதும்.. உனக்கு உங்க மாமியார் கம்ப்ளைன்ட் கொடுக்கும் போது நான் உன் அம்மா என்று உனக்கு தெரியலையா?
என்ன நடுத்தெருவில் துரத்தும் போது உனக்கு தெரியலையா? அந்த வீட்டில் எல்லோரும் சுற்றி நின்று என்னை கொத்தி கொத்தி வார்த்தைகளால் கொன்னீங்களே அப்ப நான் உனக்கு அம்மா என்று தெரியலையா? அந்த நேரத்தில் நீ என்ன பற்றி நினைத்து கூட பார்த்தியா? நான் இந்த குடும்பத்தை விட்டுட்டு உன் தப்புக்கு எல்லாம் ஒவ்வொரு முறையும் துணையா நின்னேன் ஆனா அதற்கு சரியான தண்டனையை நீ தந்துட்ட..
உன்னை நம்பி வந்ததற்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு எனக்கு கொடுத்துட்டே... இனிமே எனக்கு ஒரே ஒரு மகள்தான், அது பாக்கியா மட்டும்தான். அவள் ஒரு அயோக்கியனை கல்யாணம் பண்ணினாள் இப்ப அவன் விட்டுட்டு போயிட்டான். நான் பாக்கியா கூட எப்பவுமே இருப்பேன். எனக்கு மகள் பாக்யா மட்டும்தான் நீ என் வயிற்றிலேயே பிறக்கவில்லை என்று தண்ணீரை தலையில் ஊற்றி தலை முழுகுகிறார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து எதுவும் பேச முடியாமல் கோபி நிற்க, நீ நான் செத்தா கூட என் பிணத்தை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதோடு வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் என் மேல உங்களுக்கு அன்பு இருந்தால் என் பிணத்தை கூட இவனை பார்க்க விடக்கூடாது என்று சொல்கிறார். கடைசியாக கோபி வாசலில் போய் அழுது கொண்டிருக்கிறார்.
பிறகு இதற்கெல்லாம் கமலாதானே காரணம் இன்று கோபத்தோடு வீட்டிற்கு வந்து கதவை திறக்க, அப்போது ராதிகா கமலாவை போய் கதவை திறக்க சொல்லி அவர் கேட்கிற கேள்விக்கு நீயே பதில் சொல்லு என்று சொல்ல கமலா எனக்கு பயமா இருக்கு நீயே போய் கதவை திற என்று எஸ்கேப் ஆகிறார்.

பிறகு ராதிகா கதவை திறக்க மயூ காதை மூடி கொள்கிறார். ஆனால் கோபி சோபாவில் வந்திருந்து அழுகிறார். இதை பார்த்த ராதிகா அம்மா சொன்னதை நம்பி நானும் செய்தேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications