மேடையில் இனியா சொன்ன வார்த்தை..வெளிச்சத்துக்கு வந்த கோபியின் பொய்..இனி ராதிகா முடிவு?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலுக்கான மே 16 முதல் 20ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இனியா தன்னுடைய படிப்பிற்கு காரணம் என்னுடைய அம்மா தான் என்று மேடையில் பெருமைப்படுத்துகிறார்.
கோபி ராதிகாவிடம் பொய் சொல்லி ஸ்கூலுக்கு வந்த நிலையில் ராதிகாவிடம் மாட்டிக் கொள்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி இனியா பள்ளியில் பெருமைப்படுவதை பார்ப்பதற்காக பள்ளிக்கு வந்திருக்கிறார். மொத்த கூட்டத்திற்கு நடுவில் நின்று மேடையில் இனியா பேசப்போகிறார் என்று ஆர்வத்தோடு சந்தோஷமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மேடையில் இனியாவின் டீச்சர் ஆரம்பத்தில் இனியா சரியாக படிக்க மாட்டா, அடிக்கடி பேரன்ஸ் ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும். சேட்டை செய்து கொண்டுதான் இருந்தா, ஆனா இப்போதான் இப்படி படிக்க ஆரம்பித்து இருக்கா என்று கூறி நீ ஏதாவது பேசு என இனியாவிடம் மைக் கொடுக்கப்படுகிறது.
நான் இப்படி மாறியதற்கும், நான் நன்றாக படிப்பதற்கும் காரணம் என்னுடைய அம்மா தான். என்னுடைய அம்மா தான் எனக்கு ரோல் மாடல். என்னோட அம்மா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க என்று கூற, மேடையில் பாக்கியாவையும் வர வைத்து அவருக்கு பொன்னாடை வழங்கப்படுகிறது. அதை வீடியோவாக கோபி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் ராதிகாவும் மயூவை ஸ்கூலில் விடுவதற்காக அதே ஸ்கூலுக்கு வந்திருக்கிறார். அப்போது ஃபங்ஷன் முடிந்து கோபி வெளியே வரும்போது போனில் இனியா பேசியதை பார்த்து சந்தோஷப்பட்ட படியே நடந்து வந்து கொண்டிருக்க ராதிகாவின் கண்ணில் பட்டு மாட்டி விடுகிறார். இதனால் கோபமான ராதிகா ஸ்கூல் என்று பார்க்காமல் அனைவரும் முன்னிலையிலும் கோபப்பட்டு திட்டுகிறார்.

அப்போது ராதிகா பொய் பொய் வாய தொறந்தாலே எல்லாம் பொய் இப்படியெல்லாம் ஒரு பொய் சொல்ற ஆள நான் பார்த்ததே இல்லை என்று கத்துகிறார். பிறகு கோபி ராதிகாவை காருக்கு கூட்டிட்டு வர உங்க மேல பாசமே இல்லாம உங்கள அவமானப்படுத்துற இனியாவுக்கு இவ்வளவு பண்ண முடியுது. ஆனால் மயூவை கூட்டிக்கொண்டு ஸ்கூலில் விட முடியல இல்ல என்று கேட்கிறார். இனி கோபி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றும், ராதிகா என்ன முடிவெடுக்க போகிறார் என்றும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications