வீட்டுக்கு பயந்து கோபியோடு சென்ற இனியா..அதிர்ச்சியான ராதிகா எடுத்த முடிவு.. எதிர்பாராத கதை திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் உள்ளவர்கள் அடிப்பார்கள் என பயந்து இனியா கோபியோடு வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.
இனியாவின் செயலை பார்த்து பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
எதிர்பாராமல் இனியா திடீரென வீட்டிற்குள் வந்ததால் ராதிகா குழப்பத்தில் இருக்கும் போது இனியாவின் செயலை பார்த்து கடுப்பாகி இருக்கிறார்.

பொறுப்பும் வேணும்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் இனியாவுக்காக வீட்டிற்குள் வந்து அனைவரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இனியாவுக்கு ஆதரவாக கோபி பேசுவதை கேட்டு சக குடும்பத்தினர் அனைவரும் கோபத்தில் இருக்க பாக்கியலட்சுமி, கோபியிடம் அப்பான்னா பேர்ல மட்டும் இருக்கக்கூடாது. பொறுப்பாகவும் இருக்க வேண்டும். இனியா ஸ்கூலுக்கு போய் இருந்த விஷயத்தை நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணும் என சொல்ல, நான் எதுக்கு சொல்லணும் ,நீ யாரு? என கேட்க ஈஸ்வரி அவளோட அம்மா என கூறுகிறார்.

குழந்தைகள் வேணாம்னு சொல்லலையே
இனியா டாடி என்னை இவங்க திட்டுறாங்க, அடிக்கிறாங்க இங்க இருக்கவே பயமா இருக்கு என்று கோபி இடம் கூறுவதை கேட்டு பாக்கியாவின் குடும்பத்தினரும் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர். அவா செஞ்ச சின்ன தப்பு அதுக்காக இப்படியா அவளை டார்ச்சர் பண்றது நல்லா இல்லை என்று கோபி கோபப்படுகிறார் ..நீ எல்லாரையும் விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிட்டு போனவன் தானே என ராமமூர்த்தி சொல்ல, நான் இவதான் வேணாம்னு போனேனா தவற என் குழந்தைகள் வேணாம்னு சொல்லல. இனியா இப்ப கூட என் கூட வரேன்னு சொன்னா நான் கூட்டிட்டு போக தயாராக இருக்கேன் என சொல்ல எல்லோரும் கோபப்படுகின்றனர்.

இனியாவின் முடிவு
வாக்குவாதம் முட்டிக் கொண்டிருக்கும்போது பாக்யா, இனியாவே சொல்லட்டும் நீயே சொல்லு இனியா கூறுகிறார். அப்போது இனியாவிற்கு பாக்கியலட்சுமி தன்னை அடித்ததும் அதே நேரத்தில் கோபி தனக்கு ஆதரவாக பேசியதையும் நினைத்து பார்க்கிறார். இங்கு இருந்தா நம்மள கொன்னுடுவாங்க, அப்பா வந்து பேசுனதுக்கு கூட அவர் போன பிறகு இதையே சொல்லி கூட அடிப்பாங்க, அதனால இங்கிருந்து எஸ்கேப் ஆயிருவோம். ஒரு வாரத்திற்கு அப்பா கூட போயிருவோம் என நினைத்து பார்த்துக் கொண்டு கோபியின் கையை பிடித்துக் கொள்கிறார்.

இனியாவை பார்த்து அதிர்ச்சியான ராதிகா
இனியாவின் செயலைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து எழில், செழியன் என அனைவரும் இனியா வந்துவிடு, இங்கே வந்துவிடு என கூறிக் கொண்டிருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் கோபி இனியாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போக முடிவு செய்து வெளியே வருகிறார் .எல்லோரும் தடுக்க நினைத்து பேசி பார்க்கின்றனர் ஆனால் இனியா அப்பாவுடன் செல்வதில் உறுதியாக இருந்து வெளியேறி விட்டார் .அடுத்ததாக கோபி இனியாவுடன் ராதிகா வீட்டிற்குள் வருகிறார். அங்கே ராதிகா வேலை செய்து கொண்டிருக்கிறார். இனியாவை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர் .பிறகு வீட்டில் நடந்ததை கோபி சொன்னதும் ராதிகா மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியாமல் சரி என சொல்கிறார் .பிறகு கோபி ராதிகாவிடம் இனியா இங்கே வந்ததில் உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே என்று கேட்க ,அப்படி ஒன்றும் இல்லை என ராதிகா கூறி, இனியா உக்காரு என தோளில் கைவைத்த இனியா கையைத் தட்டி விடுகிறார். பிறகு கோபி இனியாவுக்கு ஸ்நாக்ஸ் ஏதாவது எடுத்து வந்து கொடுக்க சொல்ல ,ராதிகா கிச்சனுக்கு போக கோபி இனியா மற்றும் மயூ என 2 மகள்களையும் உட்கார வைத்து பேசுகிறார் .இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications