விஜய் டிவி பிரைம் டைம் டாப் சீரியலுக்கு வந்த சோதனை.. அதிரடியாக மாற்றப்பட்ட நேரம்! காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒளிபரப்பாகும் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த சீரியலுக்கு பதிலாக 8:30 மணிக்கு வேற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஒரு சில சீரியல்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும். அந்த சீரியலில் குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகிறது அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். அதுபோல ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. அதிலும் இரவு நேரத்தில் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களுக்கு அதிகமான டிஆர்பி கிடைக்கிறது.

நெடுந்தொடர்
அந்த வரிசையில் விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இல்லத்தரசியின் அவமானம், துரோகம், கஷ்டம் அதனை எதிர்த்து முன்னேற்றம் அடைவது போன்றவற்றை மையப்படுத்தியே இந்த சீரியல் இருப்பதால் பல பெண் ரசிகைகள் இந்த சீரியலுக்கு ஃபாலோவராக இருக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் கதை
பாக்கியலட்சுமி சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இப்போது இந்த சீரியலில் முக்கிய கதை திருப்பம் வந்திருக்கிறது. அதாவது பாக்கியாவின் மகள் இனியாவும் பாக்யா வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் ஆகாஹும் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிந்து பஞ்சாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பாக்கியா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
பாக்கியாவின் மாஸ்டர் பிளான்
பாக்கியா ஏற்கனவே நேற்றைய எபிசோடில் இனியாவிடம் படிப்பில் தான் கவனம் செலுத்துவேன் படித்து நல்ல நிலைமைக்கு போன பிறகுதான் திருமணம் செய்வேன் என்னிடம் சத்தியம் செய் என்று சத்தியம் வாங்கியிருக்கிறார். அதுபோல இன்றைய எபிசோடில் செல்வி வீட்டிற்கு சென்று ஆகாஷிடம் நீ படித்து நல்ல வேலைக்கு போன பிறகுதான் இனியாவிடம் பேசுவேன், அதற்கு பிறகு தான் காதல் திருமணம் பற்றி யோசிப்பேன் என்று எனக்கு சத்தியம் செய் என்று ஆகாஷிடமும் சத்தியம் வாங்கி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் நேரம் மாற்றம்
அதுபோல செல்வி தன்னுடைய வீட்டில் வேலை பார்ப்பதால் குடும்பத்தினர் எல்லோரும் அவரை அவமானப்படுத்துகிறார்கள் என்று செல்விக்கு புதிய வேலையை தொடங்குகிறார். இப்படியான நிலையில் இந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி தான் வந்திருக்கிறது. அதாவது இந்த சீரியல் இனி நேரம் மாற்றப்படும் போகிறது இந்த சீரியல் வரும் திங்கள் முதல் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

அய்யனார் துணை சீரியல்
இதற்கு பதிலாக 8:30 மணிக்கு இனி அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. அய்யனார் துணை சீரியல் கடந்த மாதத்தில் தான் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை மதுமிதா ஹீரோயினியாக நடிக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை
அதுபோல அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் போன்ற பல சீரியல்களில் பிரபலமான நடிகர் நடிக்கிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த சீரியல் இனி பிரைம் டைமில் ஒளிபரப்பாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
சீரியல் விரைவில் முடிவு
அதே போல பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதற்காக கூட இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் நேரத்தை மாற்றியது நல்லது என்று யாரெல்லாம் சொல்றீங்க? அதுபோல அய்யனார் துணை சீரியல் இதுவரைக்கும் பாத்திருக்கீங்களா? இல்லையா? மக்களே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications