பாக்கியலட்சுமி சீரியலில் ஹாஸ்பிடல் ட்ராக்.. இனி நடக்கப்போவது இதுதானா? முடிவு வந்தாச்சு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் ராதிகா, பாக்கியா உட்பட பாக்யாவின் குழந்தைகளும் ஹாஸ்பிடலில் இருக்கின்றனர். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியல் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஒரு பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் எப்படி போராடுகிறார் என்பதை மையப்படுத்தி தான் கதை பயணித்து வருகிறது.

ஆரம்பத்தில் கோபி மற்றும் ஈஸ்வரி அவமானப்படுத்தினாலும் அதை தாங்கிக் கொண்டு பாக்கியா வாழ்ந்து வந்தார். ஆனால் கோபி பாக்யாவை விவாகரத்து செய்த பிறகு பாக்கியா அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார். ஆனாலும் இந்த சீரியலில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோபியின் பிள்ளைகள் கோபியை ஒருமுறை வெறுத்து பாக்கியா தான் நல்லவங்க. எங்க அம்மா போல இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று பெருமையாக பேசி சீன் போடுகிறார்கள். அடுத்த சில வாரங்களில் உங்களுக்கு வேணும்னா எங்க அப்பா தேவை இல்லாமல் இருக்கலாம், ஆனா எங்களுக்கு அவங்க தேவை என்று கோபி பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.

பிள்ளைகள் மட்டுமல்லாமல் ஈஸ்வரியும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் கோபியோடு சென்று அவமானப்படுகிறார். பிறகு பாக்யாவை புரிந்து கொள்கிறார். மீண்டும் ரிப்பீட் மோடில் பாக்கியாவை எதிர்த்து பேசி கோபி தான் நல்லவன் என்று சொல்கிறார். இது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது.
அந்த சீரியலில் கதையை வேறு விதமாக பயணிக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டை மூட வைப்பதற்காக கோபி செய்த சதி வேலைகள் எல்லாம் பாக்கியாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதற்காக பாக்யா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.

கேஸை வாபஸ் வாங்க சொல்லி மொத்தம் குடும்பத்தினரும் பாக்யாவிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் பாக்கியா நான் செய்ய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் பாக்கியா, ஈஸ்வரி, இனியா, ராதிகா, செழியன், எழில் என எல்லோரும் ஹாஸ்பிடலில் வெளியே காத்திருக்கிறார்கள். இந்த காட்சிகளை பார்க்கும்போது கோபிக்கு தான் ஏதாவது உடம்புக்கு சரியில்லாமல் போகப்போகிறதா? அதனால் மொத்த குடும்பத்தினரும் ஹாஸ்பிடலில் காத்திருக்கிறார்களா என்ற கேள்விகள் வருகிறது.

வந்த கதையே திரும்ப வருவதால் சீரியல் முடிவுக்கு வருவதே சிறப்பு என்பது பலருடைய கருத்தாக இருக்கும் நிலையில் பாக்கியா மீது இருக்கும் கோபத்தில் கோபி குடித்துவிட்டு கார் ஓட்டி வரும்போது ஆக்சிடென்ட் ஏதாவது ஏற்பட்டு அவரை பாக்கியா தான் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கப் போகிறாரா? பிறகு கோபி பாக்யாவை பற்றி புரிந்துகொண்டு மனம் மாறப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications