அமிர்தாவை திட்டிய ஈஸ்வரி.. பாக்கியா கொடுத்த பதிலடி.. கோபிக்கு கிடைத்த அவமானம்..எழிலின் கடைசி முடிவு
கல்யாண மேடையில் கோபியை பாக்கியா அவமானப்படுத்தி உள்ளார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை தான் தனக்கு பிடிக்கும் என்று சொன்னதால் வர்ஷினியின் அப்பா வர்ஷினியை கூட்டிக் கொண்டு சென்று விட்டார்.
அதனால் கோபத்தில் ஈஸ்வரி அமிர்தா மற்றும் அவருடைய குடும்பத்தை திட்டுகிறார்.
பிடிக்காத திருமணத்தால் தான் இத்தனை வருடங்களாக பட்ட கஷ்டத்தை மேடையில் கூறி கோபியை பாக்கியா அவமானப்படுத்துகிறார்.

திருமணம் நின்னு போச்சு
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் பாக்யா கல்யாணத்தை நிறுத்தியதால் வர்ஷினியின் அப்பா மொத்த குடும்பமும் இனி தான் கஷ்டப்படுவீங்க என்று சாபம் விட்டு விட்டு தர்ஷினியை கூப்பிட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு கோபி இந்த கல்யாணம் நடந்திருந்தால் எழில் கேரியர் நல்லா இருந்திருக்கும் இப்போ அதுலேயும் மண்ணை வாரி போட்டுட்ட இப்ப என்ன பண்ண போற என்று கேட்க, ஈஸ்வரி நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் இந்த கல்யாணம் நடக்காது என்று அமிர்தாவை திட்டுகிறார்.

எல்லோரையும் மிரட்டும் ஈஸ்வரி
அமிர்தாவின் குடும்பத்தினரிடம் ஈஸ்வரி அன்னைக்கே உங்ககிட்ட சொன்னேன்ல இந்த கல்யாணம் செட்டாகாது எவனாவது உன்னை போல பொண்டாட்டி இல்லாத யாரையாவது ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே? எவனோ இளிச்சவாயன் கிடைச்சா அவன் தலையில உங்க பொண்ணை கட்டி வைக்கலாம்னு பார்த்தீங்களா? என்று அசிங்கமாக பேசுகிறார். பாக்கியா அவங்களை எதிர்த்து திட்டாதீங்க நான் தான் அவங்கள கூட்டிட்டு வந்தேன் என்று கூறுகிறார். அதற்கு நாங்களாக வரவில்லை பாக்யா வந்து கூப்பிட்டதால்தான் நாங்கள் வந்தோம் என்று அமிர்தாவின் குடும்பத்தினர் கூறி இதற்கு மேலும் எங்களுடைய பொண்ணுக்கு இந்த கல்யாணத்தை முடித்து வச்சா அவளுடைய வாழ்க்கை நல்லா இருக்காது நாங்க போயிட்றோம் என்று கூறுகின்றனர். அதற்கு பாக்யா அவர்களை சமாதானம் செய்கின்றார். அதை பார்த்த கோபி, இப்படி பேசி பேசி தான் எல்லா பிரச்சனையும் பண்ணுவா? இப்ப தெரிகிறதா நான் இவளை எதுக்கு திட்டுவேன் என்று, என பாக்யாவை பேச,எழில் நீங்க பேசாதீங்க என கோபியை திட்டுகிறார்.

பாக்யாவின் கேள்வி
அடுத்து ராமமூர்த்தி ஏன் இப்படி பண்ணுனா பாக்கியா? எடுத்தோம் கவுத்தோம்னு நீ இப்படியா பண்ணுவா? ஒரு அஞ்சு நிமிஷம் நீ பேசாம இருந்திருந்தா இந்த கல்யாணம் நடந்திருக்கும். இந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தால் எழில் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது. பெரியவங்க எல்லாம் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சு தானே உங்க பையனுக்கு பிடிக்காத இந்த திருமணத்தை செஞ்சு வச்சீங்க. ஆனா இந்த 25 வருஷமாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்.உங்களுக்கு தெரியுமா மாமா என்று கேட்டு பிறகு ஈஸ்வரிடம் உங்களுக்கு தெரியுமா அத்த என்று பாக்கியா கேட்கிறார்.

கோபி தாக்கப்பட்டார்
பிறகு உங்க பையன் என்கிட்ட சொன்னதெல்லாம் உன்ன புடிக்கல புடிக்கல என்பது மட்டும்தான். இப்போ எனக்கு 44 வயசு ஆகுது. என் வாழ்க்கையில் திரும்பி பார்த்தா புடிக்கலை என்ற வார்த்தையை மட்டும் தான் நிறைஞ்சிருக்கு. இந்த எட்டு மாசமாகத்தான் இந்த வார்த்தை கேட்காமல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வயசுலயும் உங்க பையனுக்கு அவர் புடிச்ச வாழ்க்கை தான் வாழ வேண்டும் என்று கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.இதே வாழ்க்கையை என் பையன் வாழக்கூடாது அவனுக்கு பிடிச்ச பொண்ணோட தான் கல்யாணம் நடக்கணும் என கூறுகிறார். அதற்கு ஈஸ்வரி நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது நடக்காது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

பாக்கியா எடுத்த சூப்பர் முடிவு
அடுத்து பாக்கியா நான் இப்போ என் பையன் பக்கம் தான் நிக்கணும். இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும். பணத்துக்காக என்னோட பையனுடைய வாழ்க்கையை அடமானம் வைக்க முடியாது என்று கூறுகிறார். நான் உங்களை மரியாதை குறைவாக பேசுறேன்னு நினைத்தாலும் பரவாயில்லை. இப்போ உங்களுக்கு மருமகளா இருக்கிறதை விட ,என் மகனுக்கு அம்மாவாக இருக்கிறது தான் முக்கியம் என்று உறுதியாக கூற, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். பிறகு எழிலை மணமேடையில் உட்கார சொல்ல, எழில் எப்படிமா என கேட்க? ராமமூர்த்தி இதெல்லாம் சரியா வருமா? என்று கேட்கிறார். தயவு செய்து இதுக்கு மேலையும் எதைப்பற்றி எதுவும் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று பாக்கியா சொல்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications