வீட்டை வாங்க போகும் எழில்.. விஷயம் தெரிந்து கோபி செய்யும் செயல்.. வெளிவரும் செழியனின் உண்மை முகம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் வீட்டை வாங்குவதற்காக எழில் தன்னுடைய கதைகளை விற்று விட்டார்.
வீட்டை வாங்குவதற்கு எழில் பணத்தை புரட்டிய செய்தி அப்பாவின் மூலமாக கோபிக்கு தெரிந்திருக்கிறது.
வீடு வாங்கும் விஷயத்தில் பணம் தர முடியாது என்று செழியன் மறுத்துவிட்டார்.
செழியனின் உண்மை முகம் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

எழில் சொன்ன மகிழ்ச்சி செய்தி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் இரண்டு கதைகளையும் வாங்கி கொள்வதாக சொல்லி நாளைக்கு வாங்க, எவ்வளவு என்ன ஏது என்பதை பேசிக்கொள்ளலாம் என சொல்லி அனுப்புகிறார். அதே நேரத்தில் வீட்டில் ஈஸ்வரி எழிலால் தான் இந்தப் பிரச்சனை வந்தது என்று கூறிக் கொண்டிருக்க ராமமூர்த்தி உன் பையன் செய்யும் பிரச்சனை எல்லாம் பற்றி நீ பேசாமல் மற்றவர்களை குறை கூறிக்கொண்டு இருக்கும் விஷயத்தை மட்டும் செய்யாதே என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் எழில் இந்த வீட்டை நாம வாங்க தான் போறோம் என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர் .

கோபியின் சமாளிப்பு
ஆமாம் தன்னுடைய இரண்டு கதைகளையும் ஒரு தயாரிப்பாளர் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வதாக சொல்லி இருப்பதாக சொல்கிறார். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அடுத்ததாக ராதிகாவின் வீட்டில் ராதிகா அனைவரையும் சாப்பிட கூப்பிட இனியா படித்து முடித்ததும் சாப்பிடலாம் என கோபி சொல்ல, எனக்கு பசிக்குது என ராதிகா கோபியை பார்த்து முறைத்ததும் எனக்கும் லைட்டா பசிக்குது இனியா டைமுக்கு சாப்பிடலாம் என கூப்பிட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் தாத்தா ராமமூர்த்தி சிரித்துக்கொண்டே என்ட்ரி கொடுக்கிறார்.

போட்டுக் கொடுத்த தாத்தா
அதன் பிறகு நீ வீடு விற்கிறேன்னு சொன்னதும் அவங்க எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துருவாங்கன்னு நினைச்சியா? அந்த வீட்டை எழில்தான் வாங்கப் போறான் என்ன சொன்னதும், என்னது வீட்டை விற்க் போறீங்களா என இனியா கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். ஆமா உங்க அப்பன் தான் வீட்டை விற்க் போகிறான். வீட்டில் இருக்கிற எல்லாரையும் வெளியே போக சொல்லிட்டான் என ராமமூர்த்தி சொல்ல, இனியா ஏன் டாடி என கேட்க? கோபி என் பெயர் போர்டை எப்படி தூக்கி எறியலாம் அதனால் தான் இப்படி பண்ணினேன் என சொல்கிறார். அதற்கு தாத்தா ஸ்கூல் பிள்ளை மாதிரி பேசாதே என திட்டுகிறார்.

நல்லதே நடக்கும் பாக்கியா
பிறகு எழில் வீட்டை வாங்கப் போவதாக ராமமூர்த்தி கோபியிடம் சொல்கிறார். அதற்கு நடக்கிறதே பேசுங்க கனவு காணாதீர்கள் என கோபி சொல்லிவிட்டு சாப்பிட சென்று விடுகிறார். அடுத்து பாக்கியா வீட்டிற்கு வரும் சதீஷ் கதையை இப்படி விக்கிறது நல்லதில்லை என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா எழிலிடம் கதையை விற்க வேண்டாம் என சொல்ல, எழில் எதையும் நல்லதா நினைச்சு செய்தா நல்லதா நடக்கும் நீதானே சொல்லி இருக்க, நான் பார்த்துக்கிறேன் என்று கூறிக்கொண்டு கதையை விற்பதற்காக கிளம்பி செல்கிறார். அதற்கு பிறகு ஜெனி செழியனிடம் வீட்டை வாங்க உதவி செய்ய சொல்லி பேச செழியன் முடியாது என சண்டை ஈடுகிறார். இருவருடைய சத்தத்தையும் கேட்டு பாக்கியா ஈஸ்வரி என இருவரும் வந்துவிட செழியன் இந்த வீட்டை அப்பா வைக்கப் போறேன்னு சொல்லிட்டாரு, அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று கேட்க பாக்யா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications