கடைசி நேரத்தில் தயாரிப்பாளரின் சூழ்ச்சி.. வில்லியாகி மிரட்டும் ஈஸ்வரி..எழில் எடுக்கப் போகும் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழிலிடம் கதையை வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறியிருந்த தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டார்.

வர்ஷினியின் அப்பாவின் சூழ்ச்சியால் எழில் மீண்டும் வர்ஷினியின் அப்பாவிடம் உதவிக்கு வந்து நிற்கிறார்.

வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எழிலிடம் வர்ஷினியின் அப்பா டீல் பேசுகிறார்.

ஈஸ்வரி எழிலிடம் நான் உயிரோடு இருக்கும் வரை அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மிரட்டுகிறார்.

கோபப்படும் செழியன்

கோபப்படும் செழியன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் ஜெனி பாக்யாவுக்கு பண விஷயத்தில் உதவி செய்ய சொல்ல, அதனால் கடுப்பான செழியன் சண்டை போட ஈஸ்வரி பாக்யா என இருவரும் வந்துவிட அப்பா இந்த வீட்டை விக்கிறேன்னு சொன்னாரு அதுக்கு நான் என்ன பண்ணனும்? நானா எழிலை வீட்டை வாங்கிக்கிறேன்னு வாக்கு கொடுக்க சொன்னேன். நீங்க பண்ற தப்புக்கு நான் என்ன பண்ண முடியும் என கோபப்பட்டு பேசிவிட்டு சென்று விடுகிறார். பிறகு பாக்யா நீ எதுக்கு அவன் கிட்ட இதையெல்லாம் கேட்கிற என ஜெனியை திட்டுகிறார்.

ஏமாற்றும் தயாரிப்பாளர்

ஏமாற்றும் தயாரிப்பாளர்

அடுத்து எழில் தயாரிப்பாளரை பார்க்க வருகிறார். அவர் இந்த கதையை இனி நான் படம் பண்ண மாட்டேன் என சொல்லி உன்னுடைய பழைய தயாரிப்பாளர் இடம் ஒரு லெட்டர் வாங்கி விட்டு வா நான் இந்த கதையை வாங்கிக் கொள்கிறேன் என சொல்ல, எழில் தயாரிப்பாளரை பார்க்க செல்கிறார். புது தயாரிப்பாளர் ராஜேந்தர் வர்ஷினியின் அப்பாவிற்கு ஃபோன் செய்து நீங்கள் சொன்ன மாதிரியே செய்துவிட்டேன் என்று கூறுகிறார். பின்பு வர்ஷினியின் அப்பா எழிலை வேண்டுமென்றே காக்க வைத்து கொண்டிருக்கிறார்.

வர்ஷினி அப்பாவின் டீல்

வர்ஷினி அப்பாவின் டீல்

எழில் காத்துக் கொண்டு இருப்பதை பார்த்து வர்ஷினி அவருடைய அப்பாவிடம் கெஞ்சிய பிறகு உள்ளே வரவைத்து பேச ஆரம்பிக்கிறார். எழில் இந்த கதையை நான் வேற ஒருத்தருக்கு விற்க போகிறேன் அதற்காக நீங்க ஒரு லெட்டர் தரணும் என கேட்கிறார். உடனே தயாரிப்பாளர் அப்படியெல்லாம் நான் தர முடியாது நான் உனக்கு அட்வான்ஸ் தந்த பிறகு இந்த கதை எனக்கு என்று ஆகிவிட்டது என்று முதலில் கூறுகிறார். பிறகு எழில் பேசியதும் சமாதானம் ஆகின மாதிரி, இந்த கதையை நீ எதுக்கு வேற ஒருத்தனுக்கு விற்கணும், நானே வச்சிக்கிறேன். நீயே இந்த படத்தை டைரக்ட் பண்ணி உனக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது நான் கொடுக்கிறேன். இந்த படத்தோட சம்பளமா வச்சிக்கோ என சொல்ல எழில் அதற்கு நான் என்ன பண்ணனும் என கேட்கிறார்.

ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மை

ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மை

உடனே தயாரிப்பாளர் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோ என சொல்ல அது முடியவே முடியாது அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்கிறேன். நான் ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேனு வாக்கு கொடுத்து இருக்கேன். அவங்க எனக்காக காத்துட்டு இருக்காங்க என சொல்ல,அப்போ இந்த கதையை நீ யாருக்கும் விற்க முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார். அதன் பிறகு எழில் வீட்டிற்கு வர செழியன் பணம் கிடைத்து விட்டதா? என கேட்க, இல்லை என எழில் சொல்கிறார். உடனே ஈஸ்வரி எப்போ இருந்து பொய் சொல்ல ஆரம்பிச்சா? என கேட்க, நடந்த விஷயங்களை சொல்ல, எழில் அதிர்ச்சியாகி இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது என கேட்க? வர்ஷினி தான் சொன்னா என சொல்கின்றனர்.

எழிலை மிரட்டும் பாட்டி

எழிலை மிரட்டும் பாட்டி

பிறகு வர்ஷினி அப்பா தான் உனக்கு தேவையான பணத்தை கொடுத்து படத்தையும் நீயே பண்ணுன்னு சொல்றாங்க இல்ல, நீ எதற்கு பண்ண மாட்டேன் என்கிற, உனக்கு என்ன பிரச்சனை என கேட்க? அவர் கேட்கிறதெல்லாம் செய்ய முடியாது என எழில் சொல்கிறார். மேலும் செழியனும் பாட்டியும் அப்படி என்ன சொன்னாரு என கேட்க? வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க சொல்றாரு என சொல்ல, பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். ஈஸ்வரி சரி அவ்வளவு தானே பண்ணிக்க வேண்டியது தானே என சொல்ல, எழில் என்னால முடியாது என சொல்ல, ஏன் முடியாது என ஈஸ்வரி கேட்கிறார். அதற்கு கோபத்தோடு நான் அமிர்தாவை காதலிக்கிறேன் அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என சொல்ல, அனைவரும் அடைகின்றனர். யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவெடுத்த? நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது, என ஈஸ்வரி பதில் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+