கல்யாண விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. கதறி அழும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத முடிவு

பாக்கியலட்சுமி சீரியலில் வர்ஷினியை திருமணம் செய்வதற்கு எழில் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி எழிலின் காலில் விழுந்து வர்ஷினியை திருமணம் செய்ய வேண்டி கெஞ்சுகிறார்.

இந்த வீட்டில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் நான் தான் அதனால் இனி நீங்கள் சொல்வதற்கு சரி, யாரை திருமணம் செய்ய சொன்னாலும் செய்கிறேன் என்று எழில் பதில் கூறியிருக்கிறார்.

அமிர்தாவுக்கு செய்து கொடுத்து சத்தியத்தை நினைத்து எழில் கண்கலங்கி கதறி அழுகிறார்.

வாடகைக்கு வீடு தேடும் பாக்கியா

வாடகைக்கு வீடு தேடும் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்கியா செல்வியிடம் பக்கத்திலேயே வாடகைக்கு வீடு பார்க்க சொல்கிறார் அதற்கு செல்வி இந்த நேரத்திற்கு இந்த மாதிரி வேறு வீட்டில் பிரச்சனை நடந்திருந்தால் பிள்ளைங்க குடும்பத்தை பார்க்க ஆரம்பிச்சிருப்பாங்க என கூறுகிறார். அதற்கு பாக்கியா எழில் பாவம் அவன் படம் பண்ணனும் என கூறுகிறார். இதை எல்லாம் கேட்ட எழில் வருத்தப்படுகிறார்.
அடுத்ததாக வீட்டிற்கு வரும் ராமமூர்த்தி இடம் ஈஸ்வரி கோபி கிட்ட சண்டை போட்டிங்களா? வீட்டை காலி பண்ண சொல்லுவானா? என கேட்கிறார். அதற்கு அவர் கண்டிப்பா சொல்லுவான் எனக் கூறுகிறார்.

மிரட்டும் ஈஸ்வரி

மிரட்டும் ஈஸ்வரி

இதற்கெல்லாம் ஒரே தீர்வு எழில் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கிறது தான் என ஈஸ்வரி கூற, அவனுக்கு தான் அந்த பொண்ணை பிடிக்கவில்லையே என ராமமூர்த்தி கூறுகிறார். அதற்கு அந்த பொண்ணு பிடிக்கலைன்னு எல்லாம் இல்லை அந்த அமிர்தாவை பிடிச்சிருக்கு, இப்போ விட்டா ஒரு நாள் அவன் அமிர்தாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடுவான். அப்படி மட்டும் நடந்தால் நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று கூறுகிறார். அதோடு அப்படி ஒரு விஷயம் நடக்கவே கூடாது என ஈஸ்வரி சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்த ராமமூர்த்தி எழிலை கூப்பிடுகிறார்.

காலில் விழும் ஈஸ்வரி

காலில் விழும் ஈஸ்வரி

தாத்தா எழிலிடம் வீட்டு பிரச்சனையைப் பற்றி பேசுகிறார். அதற்கு எழில் இதுக்கு எல்லாத்துக்கும் நான் தான் காரணம். இதை முடித்து வைக்கவும் முயற்சி பண்றேன். ஆனா முடியலை என்னென்னவோ பிரச்சனை வந்துகிட்டே இருக்குது என்று எழில் அழுகிறார். அப்போது ஈஸ்வரி இது எல்லாத்துக்கும் தீர்வு இருக்குன்னு தெரிஞ்சு அதை செய்ய மாட்டேன்னு நீ தான் அடம் பிடிக்கிற, வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோ என சொல்கிறார் அதற்கு எழில் சத்தியமா என்னால அது மட்டும் முடியாது என்று கூற, உன் காலில் கூட விழுகிறேன் என்று காலில் விழுந்து இந்த குடும்பம் உடைகிறதை என்னால பார்க்க முடியாது. அப்படி ஒரு நிலைமை வந்தால் நான் கண்டிப்பா உயிரோடு இருக்க மாட்டேன் என்று அழுகிறார்.

திருமணத்திற்கு சம்மதித்த எழில்

திருமணத்திற்கு சம்மதித்த எழில்

அதற்கு எழில் யாரும் கஷ்டப்பட வேண்டாம் உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் பண்ணிக்கிறேன் என்று கூறுகிறார். இதை கேட்டு ஈஸ்வரி சந்தோஷப்பட எழில் கதறி அழுது கொண்டிருக்கிறார். ராமமூர்த்தி நாங்க உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்லுவோம். இன்னைக்கு ஒரு நாள் அழுகிறது ஒரு வாழ்க்கை முழுக்க சிரிக்கிற மாதிரி பண்ணலாம் என சொல்கிறார். அடுத்து ஈஸ்வரி எல்லாரிடமும் இந்த விஷயத்தை சொல்லலாம் என அனைவரையும் கூப்பிட்டு நிற்கவைக்க, தனியாக நிற்கும் எழில் அமிர்தாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நினைத்து வருத்தத்தோடு கண்கலங்கி கொண்டிருக்கிறார் .இத்தொடர் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+