தாத்தாவிடம் திருமணத்திற்கு சம்மதம்,அமிர்தாவின் கேள்வியால் கதறி அழும் எழில்.. பாக்யாவின் கடைசி முடிவு

எழில் வர்ஷினியை திருமணம் செய்வதற்கு ஈஸ்வரியிடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் எழிலை பிளாக் மெயில் செய்து வர்ஷினியை திருமணம் செய்வதற்கு சம்மதிக்க வைத்திருக்கின்றனர்.

வர்ஷினியின் அப்பாவிற்கு எழில் சம்மதித்தது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எழிலுடைய எதிர்பாராத முடிவை கேட்டு பாக்யா அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அமிர்தா எழிலிடம் பாட்டி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையா என்று கண் கலங்கியபடி கேட்க எழில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

ஒன்று கூடும் குடும்பத்தினர்

ஒன்று கூடும் குடும்பத்தினர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்று எபிசோட்டில் நீங்கள் என்ன வேணாலும் செய்யுங்கள் நீங்கள் யாரை சொல்கிறீர்களோ அவர்களையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று எழில் கூறியதால் முக்கியமான விஷயம் சொல்லப் போவதாக எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைக்க எழில் மட்டும் அந்த இடத்தில் இல்லை என்பதால் ஜெனியை அனுப்பி எழிலை கூப்பிட சொல்கின்றனர். பிறகு எழிலும் கீழே வந்து விடுகிறார்.

பாக்கியாவுக்கு கிடைக்கும் அதிர்ச்சி

பாக்கியாவுக்கு கிடைக்கும் அதிர்ச்சி

அனைவரும் வந்து சேர்ந்ததும் ராமமூர்த்தி எழிலுக்கு கல்யாணம் பண்ண முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியாகும் பாக்கியா இப்ப என்ன மாமா அவசரம் எனக் கேட்க, ஈஸ்வரி அவனுக்கு கல்யாண வயசு ஆகுது இல்ல என கூறுகிறார். மேலும் ஈஸ்வரி சீக்கிரம் அவனுக்கு வர்ஷினிக்கும் கல்யாணம் என சொல்ல பாக்கியா இன்னும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு அனைவரும் முன்னிலையிலும் எழிலிடம் சம்மதம் கேட்க எழிலும் அதற்கு சம்மதம் என சொல்லி கண்ணீரோடு எழுந்து செல்கிறார்.

பாக்கியாவை பேச தடுக்கும் மாமனார்

பாக்கியாவை பேச தடுக்கும் மாமனார்

பாக்கியா எழில் கையைப் பிடித்து நிறுத்த எழில் வெளியே சென்று விடுகிறார். பிறகு ராமமூர்த்தி வந்து எது பண்ணினாலும் நல்லதுக்காக தான் இருக்கும் என் மேல் நம்பிக்கை வைத்து எதுவும் பேசாதே என்று பாக்கியாவிடம் கூற பாக்யாவும் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். அடுத்து ஈஸ்வரி, ராமமூர்த்தி, செழியன் என மூவரும் வர்ஷினியின் அப்பாவை பார்க்க செல்கின்றனர்.

வாக்கு கொடுக்கும் ராமமூர்த்தி

வாக்கு கொடுக்கும் ராமமூர்த்தி

வர்ஷினியின் அப்பாவிடம் எழில் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்கின்றனர். அவர் எழில் பணத்துக்காக சம்மதம் சொல்லலையே எனக்கேட்ட ராமமூர்த்தி எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது உண்மைதான். அதுபோல எழில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புனதும் உண்மைதான். அது எந்த மாற்றமும் இல்லை ஆனால் அவன் என்னைக்குமே பையன், பேரன் என்று கடமையிலிருந்து பின்வாங்கியதில்லை. அதே மாதிரி ஒரு புருஷன் ஆகவும் நல்லபடியா நடந்துக்குவான் என்று வர்ஷினியின் அப்பாவிற்கு வாக்கு கொடுக்கிறார்.

கதறி அழும் எழில்

கதறி அழும் எழில்

பிறகு அவர்கள் அனைவரும் அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வைக்க பேசி முடிகின்றனர். இந்த பக்கம் அமிர்தாவை தேடி எழில் வந்திருக்கிறார். அமிர்தாவை பார்த்ததும் கண் கலங்கி அழ பாட்டி என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? என கேட்கிறார். அதற்கு எழில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+