
ராதிகாவிடம் சவால் விட்டு இனியா செய்த செயல்..அதிர்ச்சியில் கோபி எடுத்த முடிவு..எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிடம் நேருக்கு நேராக இனியா சவால் விட்டு தன்னுடைய தந்தையான கோபியை பிரித்து கூட்டிட்டு போய் விடுவேன் என கூறி இருக்கிறார்.
பாக்கியா எதிர்பாராத நேரத்தில் இனியா மீண்டும் வீட்டிற்கு வந்து முதலில் மகிழ்ச்சி கொடுத்து கடைசியில் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.
"கையில் விஷப்பாட்டில்"பாரதி எடுத்த திடீர் முடிவு...கண்ணம்மாவின் பதிலால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இனியாவின் சவால்
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் இனியா ராதிகாவிடம் எங்க அப்பாவை இங்கிருந்து கூட்டிட்டு போய் விடுவேன் என சொல்ல, எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி, நடக்காத விஷயத்தை பத்தி பேசாத என ராதிகா சொன்னதற்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான் பிடிக்காது ஆனால் எங்களை அப்பாவுக்கு ரொம்பவே பிடிக்கும். நான் கூட்டிட்டு தான் போவேன். அதற்காகத்தான் இங்கே இருக்கிறேன். பாக்குறீங்களா என சவால் விடுகிறார். இனியா சொன்னதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பின்பு தாத்தா வீட்டுக்கு போகலாமா அம்மாவை பாக்கணும் என கூறுகிறார். இனியாவின் பேச்சை கேட்டு அதிர்ச்சியான ராதிகா, உங்க அப்பா இல்லாத நேரத்துல அங்க போகாத அது தப்பு என ராதிகா சொல்ல ,அப்படியே போயிடுவேன்னு மட்டும் நீங்க நினைக்காதீங்க திரும்பி வருவேன் எங்க அப்பாவோட தான் அந்த வீட்டுக்கு நான் போவேன் என்று சொல்லிவிட்டு போகிறார்.

பாக்கியாவுக்கு கிடைத்த மகிழ்ச்சி
இனியா பாக்கியாவின் வீட்டிற்கு போனதும் அங்கே அனைவரும் ஓடி வந்து ஆசையாக பேச, இனியா ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே நிற்கிறார். ராதிகா ஓடி வந்து இனியாவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க, எப்படி இருக்க இனியா உனக்கு எதுவும் அடிப்படலைல? என நலம் விசாரிக்க நல்லா இருக்கேன் என்று மட்டும் சொல்லிவிட்டு நான் என்னோட துணியை எடுத்துட்டு போக தான் வந்தேன் என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்குப் பிறகு இனியா ரூமுக்கு சென்று அழுது கொண்டிருக்க அப்போது ஜெனிவர கண்ணீரைத் துடைத்துக் கொண்டு துணி எடுப்பது போல சமாளித்துக் கொண்டு இருக்கிறார்.

இனியாவின் பிடிவாதம்
ஜெனி பேசுவதை இனியா கேட்காததால் ஜெனி அங்கே இருந்து கிளம்பி விடுகிறார். பிறகு எழில் ரூமுக்கு வந்து இனியாவை போக வேண்டாம் என சமாதானம் செய்ய நானும் எல்லாரையும் மிஸ் பண்றேன் ஆனா எனக்கு அம்மாவும் வேணும், அப்பாவும் வேணும் நான் டாடியோட தான் இந்த வீட்டுக்கு வந்து விடுவேன் என கூறுகிறார். அதற்கு எழில் அவர் வர மாட்டார் என சொல்கிறார். நான் கூட்டிட்டு வருவேன் என இனியா உறுதியாக கூறுகிறார். எழில் இனியாவை சமாதானப்படுத்தி கட்டி அணைத்து ஆறுதல் கூறுகிறார். நீ இங்கே இல்லாததால் எல்லோரும் உன்னை ரொம்பவே மிஸ் பண்றாங்க என்று கூறுகிறார். எனக்கும் எல்லாம் தெரியும் என்னை எல்லாரும் தேடுவாங்க என்பது புரியும் ஆனா அப்பாவோட சீக்கிரமா வந்துடுவேன் என்று கூறுகிறார்.

ராதிகாவிடம் கோபத்தை காட்டிய கோபி
அடுத்ததாக ராதிகாவின் வீட்டில் ராதிகா சோபாவில் அமர்ந்திருக்க, கோபி மயூவை கூட்டிக்கொண்டு வருகிறார். ராதிகா விடம் இனியா எங்கே என கோபி கேட்க அவள் அவங்க வீட்டுக்கு போய்விட்டார் என்று சொன்னதும், அதிர்ச்சியான கோபி நான் இல்லாத நேரத்தில் சண்டை போட்டு அனுப்பி வெச்சிட்டியா? என கோபமாக கேட்க ராதிகா கோபத்தில் என்னை பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரியா இருக்குது, என கேட்டு என்ன நடந்தது என தெரியாமல் இப்படி பேசாதீங்க என ராதிகா கோபத்தில் பேச, என்ன நடந்தது என கோபி கேட்கிறார். அதற்கு நடந்த விஷயத்தை ராதிகா சொன்னதும் அவள் ஒரு சின்ன குழந்தை அவள் பேசுவதை பெருசாக எடுத்துக்காத என கூறுகிறார். உங்களை எங்களிடம் இருந்து பிரித்து கூட்டிவிட்டு தான் அவள் அந்த வீட்டுக்கு போவாளாம். இப்போ போயிட்டு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் என்று ராதிகா கூறிக் கொண்டிருக்கிறார்.