ரகசியமாய் வீட்டில் நடக்கும் சூழ்ச்சி.. ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி..இனி பாக்கியா எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பற்றி ராமமூர்த்தி இடம் கோபி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா கோபப்படுகிறார்.

ராதிகா மற்றும் கோபிக்கு இடையே பிரச்சனை ஏற்படுவதற்காக ராமமூர்த்தி புது பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்.

எழில் திருமண விஷயத்தில் ஈஸ்வரி மற்றும் செழியன் யாருக்கும் தெரியாமல் புது பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அமிர்தாவுக்கு போன் செய்த பாக்கியா

அமிர்தாவுக்கு போன் செய்த பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த எழில் பாக்கியாவிடம் அமிர்தா வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி அழுது கொண்டிருக்கிறார். பாக்யா அமிர்தாவுக்கு போன் போட போன் சுவிட்ச் ஆப் என வருகிறது. அவ்ளோதான் அம்மா இனி முடிந்து விட்டதா? எதற்காக அமிர்தா என்னிடம் பேசாமல் இப்படி செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லையே என்று புலம்பி கொண்டிருக்க, எனக்காக அமிர்தா வீட்ல வந்து பேசுவியா? என கேட்க பாக்யா சரி நான் வந்து பேசுகிறேன் என சொல்லி சமாதானம் செய்கிறார்.

பாக்கியா பற்றி குறை கூறும் கோபி

பாக்கியா பற்றி குறை கூறும் கோபி

அடுத்ததாக வீட்டுக்கு வரும் கோபி அப்பாவிடம் பாக்கியாவை வெளியில் பார்த்தேன் யார் கூடயோ உட்கார்ந்து சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தா, இதெல்லாம் என்ன போது பழக்கம், என கேட்க, கோபியின் அப்பா என் மருமகளை சந்தேகப்படுறியா? ஏன சத்தம் போடுகிறார். நான் அப்படியெல்லாம் சொல்லல. இது என்ன புது பழக்கம் என்று தான் கேட்டேன். பாக்கியா வெளியே இப்படி சுற்றிக் கொண்டிருப்பதை வேறு யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று கோபத்தோடு பேசிக் கொண்டிருக்க, ராமமூர்த்தி நீதான் அவளை விட்டுட்டு வந்து ராதிகா கூட கல்யாணம் ஆயிடுச்சு. அப்புறம் அவளை பத்தி உனக்கு என்ன கவலை என கேட்க, எனக்கு என்ன கவலையா? அவன் என் வீட்டுல தான் இருக்கா, என் அம்மா குழந்தைகள் எல்லோரும் அவ வீட்ல தான் இருக்காங்க என கோபமாக பேச அதற்கு ராமமூர்த்தி பதிலடி கொடுக்கிறார்.

ராதிகாவிடம் மாட்டிக் கொண்டாரே

ராதிகாவிடம் மாட்டிக் கொண்டாரே

ஏற்கனவே காரில் ராதிகாவிடம் இதை பேசி அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டது போதாது என்று வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, பின்னாடி வந்த ராதிகா, கோபி பாக்கியா பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு கோபத்தில் நிற்கிறார். ராதிகாவை பார்த்து கோபி பயந்து விடுகிறார். பிறகு வர்ஷினி தன்னுடைய அப்பாவிடம் எழில் மீது காதல் இருக்கும் விஷயத்தை சொல்ல அவர் அவங்க வீட்ல இருக்கவங்க வந்து பேச சொல்லு அப்புறம் முடிவு எடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அடுத்த பிரச்சனை ரெடி

அடுத்த பிரச்சனை ரெடி

அடுத்ததாக கோபியின் அப்பா ராதிகா வீட்டில் கொடிகட்டி துணி காய போட ராதிகாவும், கோபியும் என்ன இது வீட்டுக்குள்ளே துணி காய போட்டுக்கிட்டு இருக்கீங்க? என கேட்க வெளியில் மழை பெய்கிறது என சொல்லி வெறுப்பேற்றுகிறார். கோபி திட்டுவதால் ராமமூர்த்தி என் மகன் என்னை கொடுமைப்படுத்துகிறான் என்று போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என மிரட்டுகிறார். ராதிகா இதெல்லாம் நல்லாவே இல்லை என மேலும் கோபத்தோடு கத்தி பேச, நான் ஒன்னும் யாருடைய ஆர்டரையும் கேன்சல் செய்யல என ராமமூர்த்தி பேச அவர் கோபித்துக் கொண்டு செல்கிறார். அடுத்ததாக பாக்யாவும் எழிலும் அமிர்தா வீட்டுக்கு செல்வதற்காக செல்கின்றனர் .பிறகு ஈஸ்வரி மற்றும் செழியன் வர்ஷினி வீட்டுக்கு சென்று கல்யாணம் பற்றி பேச தயாராகின்றனர். இவர்களின் நடவடிக்கையில் ஜெனி மற்றும் செல்விக்கு இருவருக்கும் சந்தேகம் ஏற்பட இவர்கள் இருவரும் ஈஸ்வரி மற்றும் செழியனின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+