அமிர்தா வீட்டில் பாக்யாவிற்கு கிடைத்த ஏமாற்றம்.. ஈஸ்வரியின் சூழ்ச்சியால் எழிலுக்கு வரும் பிரச்சனை
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா அமிர்தாவின் வீட்டிற்கு சென்று எழிலுக்காக பேசுவதற்காக அமிர்தா வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கே வீடு பூட்டி இருக்கிறது.
செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் வர்ஷினியின் வீட்டிற்கு அவருடைய அப்பாவை சந்திக்க சென்றிருக்கின்றனர்.
செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் ரகசியமாக செய்யும் வேலை என்ன என்று ஜெனிக்கு சந்தேகம் தோன்றியிருக்கிறது.

பொய் காரணங்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் எழில் மற்றும் பாக்யா இருவரும் அமிர்தாவின் வீட்டிற்கு செல்வதற்காக எழிலின் பிரண்டோட பாட்டி இறந்து விட்டதாக பொய் சொல்லி கிளம்புகின்றனர். இவர்கள் வெளியே சென்றதும் செழியன் மற்றும் ஈஸ்வரி கோயிலுக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு வர்ஷினி வீட்டுக்கு செல்கின்றனர். செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் ரகசியமாக பேசுவதை கேட்டு ஜெனி மற்றும் செல்விக்கு இருவருக்கும் சந்தேகம் தோன்றுகிறது.

கதறி அழும் எழில்
அடுத்ததாக பாக்யா மற்றும் எழில் இருவரும் அமிர்தா வீட்டிற்கு வரும்போது அங்கே வீடு பூட்டி இருக்கிறது. அதைப்பற்றி பக்கத்தில் விசாரிக்க அவர்கள் இருவரும் ஊருக்கு சென்று விட்டதாக சொல்கின்றனர். இதை கேட்டு எழில் அதிர்ச்சி அடைகிறார். என்னுடைய காதல் அவ்வளவுதானா என கதறி அழ பாக்யா அவரை சமாதானம் செய்கிறார். நம்மிடம் போன் நம்பர் இருக்கிறது. நாம் போன் செய்து பார்க்கலாம் நீ மனசை போட்டு குழப்பிக்காத என எழிலுக்கு ஆறுதல் கூறிவிட்டு எழிலை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

வர்ஷினியின் அப்பா சம்மதம்
அதே நேரத்தில் செழியன் மற்றும் ஈஸ்வரி வர்ஷினியின் வீட்டுக்கு செல்கின்றனர். அங்கே வர்ஷினியின் அப்பாவிடம் பேச அவர் என் பொண்ணு எது கேட்டாலும் மறுப்பு சொல்ல மாட்டேன். இதில் நல்ல பையன் என்பதால் தான் நான் இன்னும் சொல்லல ஆனா எழிலுக்கு இதில் சம்மதம்தானா என கேட்க அதெல்லாம் அவன் சம்மதிப்பான். எங்க குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்கிறோம் என்று கூறியபடியே தன் குடும்பத்தை பற்றி விலாவாரியாக ஈஸ்வரி எடுத்துக் கூறுகிறார். அப்போது கோபியை பற்றி பேசபோக வர்ஷினி தடுக்கவே அவர் பிசினஸ் பண்ணுவதாக கூறி முடித்து விடுகிறார்.

நம்ப மறுக்கும் பாக்கியா
பின்பு பாக்கியா வீட்டிற்கு வந்ததும் எழில் நான் வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூற, பாக்யா பயந்தபடியே வீட்டிற்கு வா என்று அழைக்கும் போது இல்லை என எழில் மறுக்க பார்த்து போய்விட்டு வா என கூறி அனுப்பி வைக்கிறார். பின்பு பாக்யாவிடம் உன் மாமியார் ஏதோ சதி திட்டம் போடுறாங்க என்று செல்வி சொல்ல ஜெனியும் ,பாட்டியும் செழியனும் ஏதோ ரகசியமாக பேசுகிறார்கள் என்று சொல்ல, அதை பாக்யா நம்ப மறுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications