ராதிகாவுக்கு பிரச்சினை கொடுத்து, எழிலுக்கு வில்லனாக மாறிய தாத்தா..பாட்டியால் எதிர்பாராத திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் சமையலை குறை கூறி ராமமூர்த்தி மேலும் மேலும் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.

எழிலுக்கு எதிராக ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் திருமண விஷயத்தில் புது முடிவை எடுத்து இருக்கின்றனர்.

அமிர்தாவை தேடி எழில் அவருடைய சொந்த ஊரில் அலைந்து கொண்டிருக்கிறார்.

ராதிகாவை மட்டம் தட்டும் தாத்தா

ராதிகாவை மட்டம் தட்டும் தாத்தா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ராதிகா சமையல் செய்து முடித்துவிட்டு எல்லோரையும் சாப்பிட கூப்பிட, தாத்தா ராதிகா கூப்பிடுவது காதில் கேட்காதபடி பாட்டு பாடி கொண்டிருக்கிறார். பிறகு கோபி வந்து கூப்பிட செல்கிறார். அதன்பிறகு ராதிகா சப்பாத்தி பரிமாற கோபி வாவ் சூப்பர் என பாராட்ட வழக்கம் போல தாத்தா இது என்ன இவ்வளவு தடியா இருக்கு, கையே கீழே விழுந்திடும் போல இருக்கு ? என்ன குருமா உப்பு சப்பு இல்ல என நக்கல் அடிக்கிறார். பச்ச தண்ணி ஊற்றி சப்பாத்தி மாவு பிணைந்தியா? பாக்கியா இப்படி செய்ய மாட்டார் என்று பாக்கியாவின் புராணத்தை பாட கோபி கோபப்படுகிறார்.

பாக்கியாவிடம் உண்மையைக் கூறிய எழில்

பாக்கியாவிடம் உண்மையைக் கூறிய எழில்

ராதிகா இப்படி எல்லாம் செய்து கொண்டிருந்தால் என்னால் சமாளிக்க முடியாது என்று கோபத்தோடு பேச, என்ன செய்ய என்ன பெத்தவராக போய்விட்டார் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்ல முடியாது என கோபி ராதிகாவை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக எழில் அமிர்தாவை தேடி தச்சம்பட்டி என்ற ஊருக்கு செல்கிறார். இரவு நேரமாகிவிட்டதால் இப்போதைக்கு வீட்டுக்கு போக வேண்டாம் காலையில் தேடி பிடித்துக் கொள்ளலாம் என சொல்கிறார். அப்போது பாக்கியா போன் போட எழில், தான் அமிர்தாவை தேடி ஊருக்கு வந்த விஷயத்தை கூறுகிறார். முதலில் அதிர்ச்சியாகி பிறகு பத்திரமாக இரு என சொல்லி போனை வைக்கிறார்.

தாத்தா பாட்டியின் பிளான்

தாத்தா பாட்டியின் பிளான்

அடுத்ததாக வீட்டிற்கு வரும் ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி அமிர்தா வீட்டுக்கு சென்று இதெல்லாம் செட் ஆகாது என சொல்லி விட்டு வந்ததாக சொல்ல, நீ அங்கே சென்று சண்டை எதுவும் போட்டியா என ராமமூர்த்தி கேட்க? இல்லை ஊரில் எது சரியா வருமோ அதைத்தான் சொன்னேன் என கூறுகிறார். பின்பு வர்ஷினியின் வீட்டிற்கு சென்று தான் பெண் கேட்டதாகவும் விஷயத்தை சொல்ல அதிர்ச்சியாகும் தாத்தா, பிறகு சரி என சம்மதிக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது பாக்கியா மேலே இருந்து கீழே வர ஈஸ்வரி டக்கென்று பேச்சை நிறுத்தி பேச வேண்டாம் என ராமமூர்த்திக்கு சைகை கொடுக்கிறார்.

எழிலின் தேடல் படலம்

எழிலின் தேடல் படலம்

பாக்யா வந்ததும் எப்போ வந்தீங்க மாமா என கேட்க, ஈஸ்வரி நீ போய் காப்பி போட்டு எடுத்து வந்து கொடு என அனுப்பி வைக்கிறார். பாக்யாவிடம் ராமமூர்த்தியை சரியாக பேச விடாதபடி பாக்கியாவை ஈஸ்வரி துரத்திக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் அமிர்தாவை தேடி அவருடைய அப்பா அம்மாவின் பெயரை சொல்லி எழில் தேடிக் கொண்டிருக்கிறார். ஊரில் யாருமே அப்படி இங்கே யாரும் கிடையாது என்று சொல்ல தெரு தெருவாக எழில் அமிர்தாவை தேடிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+