பாக்கியாவின் வீட்டிற்குள் கெத்தாக வரும் ராதிகா.. ஆதரவாக மாறிய ஈஸ்வரி.. இனி நடக்கப்போவது இதுதான்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் வளைகாப்பு ஃபங்ஷனுக்கு கோபி ராதிகாவோடு பாக்கியா வீட்டிற்கு வருகிறார்.
கோபியின் மீது கோபத்தில் அவருடைய அப்பா கோபியை அடிக்கப் போகிறார்.
ஈஸ்வரி ராமமூர்த்தியை தடுத்து நிறுத்தி விடுகிறார்.

ஐந்தாவது மாத பங்க்ஷன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டை ஆரம்பத்தில் ஜெனிக்கு ஐந்தாவது மாத பூ முடிக்கும் பங்க்ஷன் நடத்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. அப்போது ஜெனியின் அம்மா தன்னுடைய உறவினர்களுடன் ஜெனி வீட்டிற்கு வருகிறார். பாட்டி ஜெனி இடம் பங்ஷனை தொடங்கலாமா? எனக் கேட்க அப்போது ஜெனியின் அம்மா பங்க்ஷன் எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல, சின்ன பிரேயர் தான் பாதர் வந்துகிட்டு இருக்காரு என சொல்லுகிறார்.

ஃபங்சனுக்கு கிளம்பும் இனியா
இனியா ராதிகா வீட்டில் இருந்து ஃபங்ஷனுக்கு கிளம்பி கோபி இடம் பங்க்ஷனுக்கு போவதாக சொல்ல, கோபி அங்கே போயிட்டு திரும்பி வந்து விடுவியா? அங்கே மனசு மாறி இருந்திட மாட்டாளா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு இனியா நான் கண்டிப்பாக வந்து விடுவேன் என்று சொன்னதும் கோபி ராதிகாவை அழைத்து பங்ஷனுக்கு போகலாம் வா என கூப்பிட, ராதிகா நான் அங்கே வரவில்லை என சொல்கிறார். பின்பு கோபி ராதிகாவை பல்வேறு காரணங்களை கூறி வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார்.

உறவினரின் கேள்வி
பாக்யாவின் வீட்டில் ஜெனி ஃபங்ஷனுக்கு வந்த அவருடைய உறவினர் ஜெனியின் மாமனார் எங்கே என்று கேட்க, அனைவரும் திணறுகின்றனர். பின்பு அவர் வேலை விஷயமாக வெளியே சென்று இருக்கிறார் என்று கூறுகின்றனர் பின்பு சிறிது நேரம் கழித்து ஜெனிக்கு நலங்கு வைத்து வளையல் போடும் வேலைகள் நடந்து முடிந்து குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அப்போது இனியா அங்கே வருகிறார். இனியா வந்ததும் ஜெனி சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஜெனியின் உறவினர் இது மாப்பிள்ளையின் தங்கச்சி தானே இவர் எங்கே போயிருந்தார் என கேட்டுக் கொண்டிருக்க அப்போது கோபி ராதிகாவோடு உள்ளே வருகிறார்.

அடிக்கப் பாய்ந்த அப்பா
கோபியை ராதிகாவோடு பார்த்த ஜெனியின் உறவினர் ஜெனியின் மாமனார் ஊருக்கு போயிருக்கிறார் என்று சொன்னீர்கள்? இவர் இங்கே வந்து நிற்கிறார். கூட வந்திருக்கும் பெண் யார் என்று கேட்க, கோபி என்னுடைய மனைவி ராதிகா என சொல்ல அனைவரும் அதிர்ச்சியடையனர். ராமமூர்த்தி கோபப்பட்டு கோபியை அடிக்க போக ஈஸ்வரி அவரை தடுத்து நிறுத்தி வேண்டாம். ஜெனி ஓட சொந்தக்காரங்க இருக்காங்க என கூறுகிறார். கோபி நான் பாக்கியாவை தான் டைவர்ஸ் செய்து இருக்கிறேன்.என்னுடைய குழந்தைகளை அல்ல அதனால் என்னுடன் குழந்தைகளுக்கு பங்க்ஷன் நடக்கும் போது நான் கண்டிப்பாக வருவேன் என்று கூறுகிறார்

அதிர்ச்சி கொடுத்த கோபி
பிறகு செழியன் ஜெனிக்கு கோபி வாழ்த்து சொல்லி விட்டு ஃபங்ஷன் நல்லபடியாக முடிந்ததா? என கேட்க செழியன் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு, நீங்க வாங்க என சொல்லி ஜெனியை அழைத்து வந்து நலங்கு வைக்க சேரில் உட்கார வைக்கிறார். அடுத்த கோபி ராதிகாவை நலங்கு வைக்க அழைக்க அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இத்துடன் என்று எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications