எழிலிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி.. சந்தேகத்தை துவங்கிய ராதிகா..பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மகா சங்கமம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
கோபியின் திருமணத்திற்கு பிறகு எழிலை பார்த்த கோபி குழப்பத்தில் இருப்பது ராதிகாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எழிலை சந்தித்த கோபி இனி என்ன நடக்குமோ என்று திணறி வருகிறார்.

சாப்பாடு நேரத்தில் போராட்டம்
இன்றைய எபிசோட்டில் கோபி பிரேக்பாஸ்ட் சாப்பிட போகலாம் என்று ராதிகாவிடம் கூறுகிறார். அதனால் ராதிகா அதற்கு ரெடியாகி வருகிறார். அதற்குள் மோகன் போன் செய்து சாப்பிட வாடா பசிக்குது என கோபியை கூப்பிடுகிறார். அதனால் வெளியே செல்லாமல் ரூம்குள்ளே இருந்து சாப்பிட்டு விடலாம் என்று ராதிகாவிடம் கோபி கூறுகிறார். ஆனால் தான் வெளியே சாப்பிட போவதற்காக தான் கிளம்பி இருக்கிறேன். அதனால் வெளியே போய் ஆக வேண்டும் என்று அடம் பிடித்து ராதிகா கோபியோடு வெளியே கிளம்புகிறார். அதே நேரத்தில் மூர்த்தி தனத்திடம் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று கண்ணன் ஐஸ்வர்யா வந்து இவர்களை டிஸ்டர்ப் செய்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து சாப்பிட போக வேண்டும் என்று கண்ணன் மூர்த்தி தனத்தை கூட்டிக்கொண்டு வருகிறார்.

சந்திக்க வைத்த போன் கால்
அதே வேதத்தில் பாக்கியலட்சுமி குடும்பம் சாப்பிட வருகிறார்கள். டைனிங் ஹாலில் அமர்ந்தபடி இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பக்கத்து அறையில் இருந்த மூர்த்தியின் குரலை கேட்டு எழில் சென்று பார்த்து மாமா, மச்சான் என்று சந்தோஷமாக அனைவரும் நலம் விசாரித்து கொண்டிருக்கின்றனர். பிறகு இரண்டு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தொடங்கி இருக்கின்றனர். அப்போது எழிலுக்கு போன் கால் வருகிறது. முக்கியமான கால் அதனால் இப்போதே பேச வேண்டும் என்று எழில் சாப்பிட்டு இருக்கும்போதே கிளம்பி வெளியே வருகிறார்.

எழில்க்கு கிடைத்த அதிர்ச்சி
இந்த நேரத்தில் கோபிக்கும் அவருடைய நண்பரான மோகன் போன் செய்து இருக்கிறார். அவரிடம் கோபி சமாளித்து பேசிக் கொண்டிருக்கிறார். அருகில் இருந்த ராதிகா தனியாக சென்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி எழிலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா? கல்யாணத்தில் வந்து வீட்டில் இருக்கிறவங்க எல்லாரும் பிரச்சனை பண்ணுனாங்க. நீ மட்டும் வரல ஆனா? இங்கு அமைதியா இருக்கலாம் என்று வந்தால் இங்கேயும் நீ வந்து விட்டாயா ?என்று திட்டுகிறார். சர்வர் வந்து நீங்க தானே ஹனிமூன் பேக்கேஜ் செலக்ட் செய்து இருக்கீங்க என்று கோபியிடம் கேட்க எழில் பயங்கரமாக அதிர்ச்சி அடைகிறார். இதுவெல்லாம் இந்த வயசுல தேவையா? என்கின்ற மாதிரி இருவரும் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ராதிகாவுக்கு வந்த சந்தேகம்
எழிலை பார்த்த பிறகு கோபி அவரையே நினைத்துக் கொண்டு சாப்பிட்டு கொண்டிருக்கிறார். எதற்காக எழில் இங்கே வந்தார் என்று இவர் யோசித்துக் கொண்டே சாப்பிடுவதால் கோபிக்கு புரை ஏறி விடுகிறது. அதை பார்த்த ராதிகா என்ன ஆனது? ஆபீஸில் ஏதும் பிரச்சனையா என்று கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்கிறார். ஒன்றும் இல்லை என கோபி சமாளித்தாலும், அவருடைய முகம் அவரை காட்டி கொடுத்து விடுகிறது. இதனால் ராதிகா சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் ராதிகாவும் கோபியும் அமர்ந்து சாப்பிடுவதை எழில் பார்த்து கடுங்கோபத்தில் முறைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரையும் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்த்தால் மேலும் பிரச்சனை ஆகி விடுமே என்று பயந்தபடியே எழில் அங்கு உள்ள நிலவரங்களை கவனித்து வருகிறார்.இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்து விடுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications