கோபியின் திருமணத்தை தடுப்பதற்காக அவருடைய அப்பா செய்த செயல்... இனிதான் ஆட்டம் ஆரம்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருமணத்தை தடுப்பதற்காக அவருடைய அப்பா எடுத்து இருக்கும் அதிரடி முடிவால் திருமணம் தடைபடுமா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.
கோபியின் காதலுக்கு அன்றும் இன்றும் எப்போதுமே தடையாக அவருடைய அப்பாவே இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
கோபியின் அப்பா அவருடைய மனைவியிடம் எப்படியும் கோபியின் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று சத்தியம் செய்து இருப்பதால் இனி எதிர்பாராத திருப்பங்கள் வரும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

டிஆர்பி யில் முன்னிலை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் கோபி திருமணம் முடிந்து அவருடைய குழந்தைகளுக்கு திருமணம் நடந்து கொண்டிருக்கும்போது அவரும் திருமணம் செய்யும் ஆசையில் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் பலவாறு கலாய்த்து வந்தாலும் இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனாலயே டிஆர்பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது.

பிடிக்காத திருமணம்
கோபி பாக்கியாவை வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலினால் தனக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு அவரோடு மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு தனது மனதுக்கு பிடித்த ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் கோபியின் கேரக்டரை நெட்டிசன்கள் நன்றாக ரசித்து மீம்ஸ்களால் கலாய்த்து வருகிறார்கள்.

கோபியின் அம்மாவின் செயல்
பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் தான் தற்போது கூட சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு விளம்பரத்தை எடுத்திருந்தனர். அதில் பாக்கியலட்சுமி மற்றும் கோபி இருவரும் நடித்து ரசிகர்களை குழம்ப வைத்திருந்தனர். இந்த நிலையில் கதையின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக தற்போது கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதை தன்னுடைய அம்மாவிடம் கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அம்மா ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என்று வேறு ஆசைப்படுவதாக கண்ணீர் விட்டு கதறி நாடகம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கோபி அம்மாவான ஈஸ்வரி முதல் முறையாக பையனுக்கு சப்போர்ட் செய்யாமல் அவரை திட்டி அனுப்பி இருந்தார்.

தாத்தா எடுக்க போக முடிவு
தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதை ஈஸ்வரி தன்னுடைய கணவரிடம் கூறுகிறார். அதற்கு கோபியின் அப்பா நான் உன் மீது ஆணையாக சத்தியமாக சொல்கிறேன் கோபியின் திருமணத்தை நடத்த விட மாட்டேன் என்று கூறிக்கொண்டு கோபியை பார்த்ததற்கு கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கே திருமணத்தை நிறுத்தி விடு இந்த திருமணத்தால் குடும்பமே நிலை குலைந்து போய்விடும் என்று டயலாக் பேசி இருக்கிறார். அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத கோபி, இனி என் வாழ்க்கையில் பாக்யாவே இல்லை. அவளுடைய சாப்டர் முடிந்துவிட்டது. இனி நான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு கோபியின் அப்பா இனியாவை கொஞ்சம் நினைச்சு பாரு கோபி என்று சென்டிமென்ட் ஆக பேசி பார்க்கிறார். ஆனாலும் அதற்கெல்லாம் அசராத கோபி நான் இந்த செண்டிமெண்ட் சீனுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று பேசிவிட்டு கிளம்பி விடுகிறார். இதற்கடுத்து இனி கோபியின் அப்பா என்ன மாதிரி முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications