கோபியின் திருமணத்தில் அவ்ளோ ரகளை செஞ்சிகிட்டு... கடைசியில் பாக்கியா செய்த சேட்டையை பார்த்தீங்களா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா செய்த செயலை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

கோபியின் திருமணத்தில் மணவறையில் இருந்த கோபியிடம் அவ்ளோ பேசிய பாக்கியவா இப்படி செய்கிறார் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

தன் புருஷனுக்கு திருமணம் முடிந்தாலும் பரவாயில்லை எனக்கு காண்ட்ராக்ட் மட்டும் விட்டு போகக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த பாக்யா, கடைசியில் இப்படி செய்யலாமா? என்று பார்ப்பவர்கள் எல்லாம் கேள்விகளால் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இருதரப்பட்ட கருத்துக்கள்

இருதரப்பட்ட கருத்துக்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் இரண்டாம் திருமணம் நடைபெறுமா? பெறாதா? என்று பல்வேறு எதிர்பார்ப்புகளும், திருப்பங்களும் ரசிகர்களுக்கு குழப்பத்தை கொண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில ரசிகர்கள் கோபியின் இரண்டாம் திருமணம் நடைபெறக்கூடாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சிலர் இவர் பாக்கியவோடு சந்தோஷமாகத்தான் வாழவில்லையே..!! இருவருக்கும் டைவர்ஸ் கிடைத்து விட்டது அதனால் ராதிகாவோடு சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போகட்டும் என்று பெருந்தன்மையாக பேசி வருகிறார்கள்.

மணவறையில் கோபி

மணவறையில் கோபி

தற்போது ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் இந்த மாதிரி தான் இரண்டு பொண்டாட்டி கதைகள் வந்து கொண்டே இருக்கிறது. இது ஆரம்பத்தில் பலருக்கும் சலிப்பைத் தட்டி இருந்தாலும் இது இப்போது பிடித்து விட்டது போல!? அதனால் தான் எல்லா சீரியல்களிலும் இப்படி கதாநாயகனுக்கு இரண்டு பொண்டாட்டி இருப்பது போன்று எடுத்து வருகிறார்கள் என்று சில ரசிகர்கள் நொந்து போய் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகன் கோபிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. அதுவும் மூத்த பையனுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாம் திருமணத்திற்கு மணவறை வரை கோபி வந்துள்ளார்.

நீதிமன்றமே சொல்லிடுச்சாம்

நீதிமன்றமே சொல்லிடுச்சாம்

கோபியின் திருமணத்தை எப்படியாவது நான் நிறுத்தி விடுவேன் என்று அவருடைய தந்தை சத்தியம் செய்து சீரியலுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தார். கோபியின் தந்தையான சத்தியமூர்த்தி சத்தியம் செய்ததால் எப்படியும் திருமணம் நின்று விடும் என்று பலர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போதைய எபிசோடில் கோபியின் திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து சத்தியமூர்த்தி ரகளை செய்து இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத கோபி எனக்கும் பாக்யாவுக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது. நான் இப்போ "சிங்கிள்" என்னுடைய மனைவி இனி ராதிகா தான். இனி மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்று சத்தியமூர்த்தியையும், பாக்கியாவையும் திட்டி தீர்க்கிறார்.

ரசிகர்களின் அதட்டல்கள்

ரசிகர்களின் அதட்டல்கள்

பெரிய அளவில் சமையல் காண்ட்ராக்ட் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி இருந்த பாக்கியாவிற்கு தான் சமையல் செய்வது தன்னுடைய கணவரின் திருமணத்திற்கு என்பது தெரிந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு நான் இந்த இடத்தை விட்டு வரமாட்டேன் எனக்கு வேலை தான் முக்கியம் என்று வஞ்சனை இல்லாமல் பேசி வந்தார். சீரியலில் இவர் செய்ததை பார்த்து தற்போது சமூக வலைத்தளத்தில் இவரை கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறதாம். காரணம் சீரியல் சூட்டிங் முடிந்த பிறகு இவரும் இவரிடம் வேலை செய்யும் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனாவும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலாக ஆட்டம் போட்டிருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் கோபியின் திருமணத்தில் வேலை செய்து கொண்டு இப்படியா ஆட்டம் போடுகிறீர்கள்?? என்று செல்லமாக அதட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+