பாரதி கண்ணம்மா கல்யாணத்தையும் விட்டு வைக்காத பாக்கியா.. நிறைவான கிளைமாக்ஸ்.. அது மட்டும் மிஸ்ஸிங்?
பாரதி கண்ணம்மா சீரியலில் கிளைமாக்ஸில் பாக்கியா சமையல் செய்வதற்காக வந்து கண்ணம்மாவை பாராட்டுகிறார்.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணத்தில் சமைப்பதற்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து பாக்யா மற்றும் செல்வி வந்திருக்கின்றனர்.
பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணத்தில் ஆர் ஜே பாலாஜி தன்னுடைய ரன் பேபி ரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம் இது பெரிய திரில்லர் படம் என்று கூறி இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் கிளைமாக்ஸ் இன்று முடிவடைந்து இருக்கிறது.

இணை ஏற்ப உறுதிமொழி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா முதல் பாகத்தில் இன்றைய எபிசொட்டில் ஆரம்பத்தில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணம் நடைபெற்றதும் அம்மா அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். பின்பு சினேகன் இணை ஏற்பு உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறி உறுதிமொழி கூறுகிறார். சினேகன் கூறுவதை பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஏற்றுக் கொள்கின்றனர். பின்பு சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் வாழ்த்து கூறி விட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.

ஆர் ஜே பாலாஜியின் பரிசு
அடுத்து ஆர் ஜே பாலாஜி ஆயிரம் எபிசோடுகளை தாண்டி கல்யாணம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று கூறி கையில் ஒரு கவர் கொடுக்கிறார். என்னங்க மீண்டும் கவர் தறிங்க என்று பாரதி கேட்க, இதில் பெரிய அமௌன்ட மொய்யா வச்சிருக்கேன். இந்த அமௌண்டை வைத்து என்னுடைய ரன் பேபி ரன் கல்யாணத்துக்கு அப்புறம் ஃபர்ஸ்ட் படமா பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். அடுத்ததாக பிக் பாஸ் ஷிவின் மேடையில் வந்து பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்.

ஷிவினின் வாழ்த்து
ஷிவின் கண்ணம்மாவிடம் கண்ணம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி உங்க மேல அவ்ளோ பழி விழுந்த பிறகும் ஆனா நீங்க ஒரு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி இருக்கீங்க. உங்க மேல தப்பு இல்லன்னு கூட நீங்க நிரூபிச்சிட்டீங்க. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். பல போராட்டங்களை தாண்டி இரண்டு பேரும் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண போறீங்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூற எங்களுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிடித்த ஒரு போட்டியாளர் நீங்கள் தான் என்று பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கூறுகின்றனர். பிறகு ஷிவின் அவர்களிடமிருந்து விடை பெற்று கிளம்புகிறார். அடுத்ததாக வெண்பாவின் அம்மா மற்றும் கணவர் இருவரும் மேடைக்கு வந்து பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

சுபம்
பிறகு ஆர் ஜே பாலாஜி தன்னுடைய ரன் பேபி ரன் திரைப்படத்தின் டிரைலர் போட்டு காட்டி விட்டு அனைவருக்கும் வணக்கம் கூறி அங்கிருந்து கிளம்புகிறார். மொத்த குடும்பமும் அனைவருக்கும் வணக்கம் கூறுகின்றனர். பிறகு சௌந்தர்யா சமையல் யார் செய்கிறார்கள் சாப்பாடு ரெடி ஆகிவிட்டதா என்று கேட்க? தாமரை அது எல்லாம் ரெடியாகிவிட்டது, சென்னையில் இருந்து பாக்யா சமையல் செய்கிறார் என்று கூறி அனைவருக்கும் சமையல் பரிமாறுகின்றனர். சாப்பாடை பார்த்து பாரதி பாராட்ட பாக்கியலட்சுமி மற்றும் செல்வி இருவரும் கண்ணம்மா மற்றும் பாரதியை பாராட்டுகின்றனர். பாக்கியா கண்ணம்மாவை நீங்க எவ்வளவோ போராட்டங்களை தாண்டி வந்து இருக்கீங்க இனி நீங்க சந்தோஷமா இருக்கணும் என்று கூறுகிறார். அதற்கு தாமரை பாக்கி அக்காவும் உன்னை மாதிரி தான் ரொம்ப போராடி இருக்காங்க. வெளி உலகமே தெரியாமல் தான் வீட்டுக்குள்ளே இருந்தாங்க, பல போராட்டங்களுக்குப் பிறகு இப்பதான் அவங்க சாதிச்சிட்டு வராங்க என்று கூற, கண்ணம்மா பாக்யாவை பாராட்டுகிறார். பிறகு கண்ணம்மாவும் பாரதியும் ஒருவருக்கு ஒருவர் சாப்பாடு ஊட்டி விடுகின்றனர். அங்கிருந்து அனைவரும் கைத்தட்டி மகிழ்கின்றனர். பிறகு பாரதியின் காதலியே கண்ணம்மா என்கிற பாடல் ஒளிபரப்பாகிறது. பாடல் முடிவில் அனைவரும் வணக்கம் போட்டு சுபம் என சீரியலை முடிக்கின்றனர். ஆனால் கடைசி வரைக்கும் வெண்பா மட்டும் எங்கே போனார் என்று தெரியவில்லை வெண்பா மட்டும் இறுதியிலும் வரவில்லை.












Click it and Unblock the Notifications