வெண்பா செய்த வேலையால் குழப்பத்தில் கண்ணம்மா... அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ஹேமா.. இன்றைய எபிசோட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அவருடைய மகள் ஹேமா அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய திருமணத்திற்காக வெண்பா செய்த செயலை நினைத்து கண்ணம்மா குழப்பத்தில் இருக்கிறார்.
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசொட்டில் பாரதியின் உண்மை வெளிப்பட்டு இருக்கிறது.

திருமண பத்திரிக்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ஷர்மிளா, வெண்பா மற்றும் ரோஹித் கல்யாணத்திற்காக பத்திரிக்கை கொடுக்க பாரதி வீட்டிற்கு வந்திருக்கிறார் .அங்கே அனைவரும் அமர்ந்திருக்கும் போது இவர் வந்த விஷயத்தை சொன்னதும் பாரதி அதிர்ச்சி அடைகிறார். உடனே வெண்பாவுக்கு போன் போட்டு பத்திரிக்கை கொடுக்க வந்த விஷயத்தைப் பற்றி கூறுகிறார். அதற்கு வெண்பா அதுக்கெல்லாம் நீ எதுக்கு கவலைப்படுற பத்திரிக்கை கொடுக்கட்டும் ,பந்தல் கால் நடட்டும் ஆனால் என் கழுத்துல தாலி கட்ட வேண்டியது யார் என்பதை முடிவு செய்ய வேண்டியது நான் தான் என்று கூறுகிறார்.

வெண்பா செய்த செயல்
அது மட்டுமல்லாமல் சொன்னபடி சொன்ன தேதியில் நமக்கு கல்யாணம் நடக்கும். நீ என் கழுத்துல தாலி கட்டினால் மட்டும் போதும். அடுத்து வர்ற பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என சொல்லி வெண்பா முடிக்கிறார். வெண்பாவின் பேச்சைக் கேட்டு பாரதி குழப்பத்தோடு போனை கட் செய்கிறார். அடுத்ததாக கண்ணம்மா ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வெண்பா திடீரென காரில் வந்து இறங்கி கண்ணம்மா முன்பு நிற்கிறார். கண்ணம்மா குழப்பத்தோடு வெண்பாவை பார்க்கும்போது தன்னுடைய கல்யாணத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என சொல்லி பத்திரிக்கையை கொடுக்கிறார்.

காத்திருக்கும் ஹேமா
வெண்பாவோட கேரக்டர் இது கிடையாதே, ஏதோ திட்டம் வச்சிருக்கா? என கண்ணம்மாவுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அப்படியே யோசித்தபடி நிற்கிறார். அதே நேரத்தில் பாரதியின் வீட்டில் அனைவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹேமா ஒரு போட்டோவை எடுத்து வந்து உட்காருகிறார் .எல்லோரும் ஹேமாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஹேமா அடிக்கடி படிக்கட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்
அப்போது ஹேமா காப்பாற்றிய பாட்டி அங்கே வருகிறார். ஹேமா அவரை வரவேற்று இவர்கள் எல்லோரையும் உங்களுக்கு யாருன்னு தெரியுதா? என கேட்கிறார். அதற்கு அந்த பாட்டி தெரியவில்லையே என்று கூறுகிறார். பின்னர் இவரையாவது தெரியுதா?என பாரதியை காட்டி கேட்க அதுவும் தெரியவில்லை என சொல்ல, ஹேமாவிடம் யார் இவங்க எதற்காக கூட்டி வந்தாய் என்று பாரதியின் அம்மா சௌந்தர்யா கேட்கிறார். அதற்க்கு அந்த பாட்டி ஹேமா தன்னை காப்பாற்றிய விஷயத்தை சொல்லி அதோடு உங்களிடம் ஏதோ பேசணும் என சொல்லி வர சொன்னாள் என சொல்லுகிறார். அப்போது, அதுவரைக்கும் ஹேமா தனது கையில் வைத்திருந்த போட்டோ எடுத்து காட்ட, அந்தப் பாட்டி கதறி அழுகிறார். இதை பார்த்து பாரதியும் குடும்பமும் அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.இதோடு இன்றைய எபிசோட் முடிந்திருக்கின்றது.












Click it and Unblock the Notifications