"கையில் விஷப்பாட்டில்”பாரதி எடுத்த திடீர் முடிவு...கண்ணம்மாவின் பதிலால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் dna டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் கையில் விஷப்பாட்டிலோடு அமர்ந்து பாரதி அழுது கொண்டிருக்கிறார்.
ஹேமா தன்னுடைய அப்பா யார் என்று கேட்டு மீண்டும் அடம் பிடித்து கொண்டிருக்கும்போது சௌந்தர்யா உண்மையை சொல்ல போக கண்ணம்மா தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

பாரதிக்கு தெரிந்த உண்மை
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில், டாக்டர் பாரதியிடம் உங்க மூன்று பேரோட டி என் ஏ பர்ஃபெக்ட்டா மேட்ச் ஆகுது என சொல்ல, இதைக் கேட்டு பாரதி அதிர்ச்சடைகிறார். உங்கள் மனைவி மேல எந்த தப்பும் இல்ல உங்க மனதுக்குள்ள இருக்க சந்தேகங்களை தூக்கிப்போட்டுவிட்டு சந்தோஷமாக சென்று வாழ்கிற வழியை பாருங்க, இதற்கு முன்பு நடந்ததெல்லாம் அதை மறந்து விடுங்கள். அதைப்பற்றி மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள் என்று சொல்கிறார். பாரதி கண்ணம்மாவை எவ்வளவு தர குறைவா பேசி இருக்கிறேன் என வெளியே வந்து தரையில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

தையல் விஷப்பாட்டில்
இதற்கு முன்பு கண்ணம்மாவை எத்தனை முறை அவமானப்படுத்தி இருக்கிறேன். கண்ணம்மாவே வந்து மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று சொன்னதற்கு கூட நான் பதில் சொல்லவில்லையே, இனி எப்படி பேசுவேன் என்று ஒரு நிமிடம் தயங்கிந ஊருக்கு போய் ஹேமா, லட்சுமி ரெண்டு பேரும் எனக்கு பிறந்த குழந்தைகள் என்று கண்ணம்மா சுத்தமானவள் என சத்தம் போட்டு சொல்லி அவளுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டிருக்கிறார். கையில் வைத்திருந்த விஷப்பாட்டில் இனி இதற்கு தேவையே இல்லை. நான் எவ்வளவு பெரிய தப்பான முடிவை எடுக்க இருந்திருக்கிறேன். இத்தனை வருடங்களாக என்னுடைய வாழ்க்கையை நானே நாசமாக்கி விட்டேனே என்று தனக்குத்தானே நொந்து கொண்டிருக்கிறார்.

தடுத்து நிறுத்திய கண்ணம்மா
அதே நேரத்தில் மயக்கத்தில் இருந்த ஹேமா கண்விழிக்க, எல்லோரும் அவளை பார்க்க போக ஹேமா நடந்த விஷயங்களை சொல்லி என்னுடைய அப்பா யாரு சொல்லுங்க என கேட்க, சௌந்தர்யா பாரதி தான் உன்னுடைய அப்பா என்ன சொல்ல தொடங்குகிறார். அப்போது கண்ணம்மா அவளுடைய அப்பாவை பத்தி நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார். உனக்கு அம்மா அப்பா எல்லாமே நான் தான். நான் மட்டும் தான். உங்க அப்பாவ பத்தி யாரு கேட்டாலும் என் அம்மா தான் என்னுடைய அப்பா என்று தைரியமா சொல்லு என்று கண்ணம்மா வீரமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

கண்ணம்மாவின் விளக்கம்
கண்ணம்மாவின் திடீர் செயலால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஏற்கனவே அப்பா யாரு என தெரியாததால் தான் ஹேமா எடுத்த முடிவால் குடும்பத்தினர் அனைவரும் இவ்வளவு துடித்து போய் விட்டோம். ஹேமா எவ்வளவு பெரிய ஏமாற்றத்தில் இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்து, கடவுள் புண்ணியத்தில் நம்மிடம் வந்து சேர்ந்திருந்தாள். மீண்டும் மீண்டும் அவளிடம் உண்மையை மறைக்க வேண்டாம் என வேணு, அஞ்சலி என அனைவரும் கண்ணம்மாவை தனியாக அழைத்து சென்று ஹேமா கிட்ட உண்மையை சொல்லிடலாம் என கூறுகின்றனர். கண்ணம்மா சொன்னா என்ன நடக்கும்? இவ நீங்கதான் என்னுடைய அப்பாவான்னு உங்க பிள்ளையை போய் கட்டிப்பிடிப்பா, அவர் நான் உன்னை வளர்த்த அப்பா தான். உன்னை பெத்த அப்பா கிடையாது என்று சொல்வார் என கண்ணம்மா கூறுகிறார்.

காலம் நெருங்கி விட்டது
அது மட்டுமில்லாமல் உங்க அம்மா நடத்தை கெட்டவள் என்று சொன்னா கஷ்டம் யாருக்கு? ஏற்கனவே அப்பா பாரதி தான் என தெரிந்தும் அப்பா தன்னை ஏத்துக்கணும்னு லட்சுமி தவிக்கிற தவிப்பே போதும். எனக்கு உண்மை தெரிகிறபோது அதை உங்க பிள்ளை ஏத்துக்கிற மனநிலையில் இருக்கணும் என ஷாக் கொடுக்கிறார். இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது லட்சுமி ரெஸ்ட் ரூம் போய் லேட் ஆகுது நான் போய் பார்க்க போகிறேன் என கண்ணம்மா அந்த இடத்தை விட்டு கிளம்பி போய்விட, சௌந்தர்யா நான் என்ன செய்வேன் என்று அழுது கொண்டே இருக்கிறார். வேணு அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications