மன்னிப்பு கேட்டு கதறும் பாரதி.. மொத்த பழியையும் அகிலன் மீது போட்ட வெண்பா.. எதிர்பாராத கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் dna டெஸ்ட் முடிவை தெரிந்து கொண்ட பாரதி கண்ணம்மா மற்றும் மொத்த குடும்பத்தினரிடமும் தான் இதுவரைக்கும் நடந்து கொண்டதை நினைத்து மன்னிப்பு கேட்டு அழுகிறார்.

பாரதிக்கு உண்மை தெரிந்து கொண்டதை புரிந்து கொண்ட வெண்பா கடைசியில் செய்த சூழ்ச்சியால் குடும்பமே நிலை குலைந்து போயிருக்கிறது.

ஹேமாவை காப்பாற்றிய அகிலன்

ஹேமாவை காப்பாற்றிய அகிலன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில், ஹேமா மொட்டை மாடியில் உச்சியில் நின்றபடி கீழே வருவதற்கு வழி தெரியாமல் அழுது கொண்டிருக்கிறார். பயமாக இருக்கிறது என்று கதரி அழுவதை பார்த்து கீழே மொத்த குடும்பமும் தவித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அகிலன் மாடி படியில் இருக்கும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கடைசியில் ஹேமாவை காப்பாற்றி விடுகிறார். ஹேமா கீழே வந்ததும் பாரதி எதற்காக இப்படி பேசினார் என்று குழப்பத்தோடு மொத்த குடும்பமும் இருக்கிறது.

மன்னிப்பு கேட்ட பாரதி

மன்னிப்பு கேட்ட பாரதி

சௌந்தர்யா பாரதியிடம் நீ எங்கே சென்றிருந்தாய், நீ மொத்த பிரச்சனைக்கும் தீர்வு தெரிந்துவிட்டது என்று சொன்னியே என்னது என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க நான் சில நாட்களுக்கு முன்பு எனக்கும் லட்சுமி, ஹேமாவுக்கும் டி என் ஏ டெஸ்ட் எடுப்பதற்காக ரத்த மாதிரிகளை கொடுத்து இருந்தேன். அந்த முடிவு ஆரம்பத்தில் இருந்து ஒரு சில நாட்கள் வராமல் இருந்தது. ஆனால் கடைசியாக வந்துவிட்டது என்று சொன்னதும் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். பிறகு அதில் இரண்டு பேரும் என்னுடைய குழந்தைகள்தான் என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது. நான் தெரியாமல் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு விட்டேன் என்று அழுதபடியே கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க, கண்ணம்மா எதுவும் பேசாமல் அமைதியாக முறைத்தபடியே நிற்கிறார்.

குட்டையை குழப்பும் வெண்பா

குட்டையை குழப்பும் வெண்பா

லட்சுமி மற்றும் ஹேமாவிடமும் பாரதி அழுது கொண்டே மன்னிப்பு கேட்க சௌந்தர்யா கண்ணம்மாவிடம் பார்த்தியா கண்ணம்மா பாரதி ஒரு வழியா எல்லா உண்மையும் தெரிஞ்சுகிட்டான். கடைசியில் உன்னையும் குழந்தைகளையும் புரிஞ்சுகிட்டான் இனி அவனை ஏற்றுக்கொள் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கும் கண்ணம்மா எந்த பதிலும் கூறாமல் இருக்கிறார். அப்போது வெண்பா குறுக்கிட்டு இதை நான் நம்பவே மாட்டேன். பாரதி உன்னை நல்ல ஏமாற்றுகிறார்கள். நீ 10 வருஷத்துக்கு முன்பு என்ன நடந்தது என்பதை மறந்து விட்டாயா? நீ இரண்டு தடவை உனக்கு டெஸ்ட் எடுத்து பார்த்திருக்கிறாய். அதிலும் நீ குழந்தை பெறுவதற்கு தகுதி இல்லாதவன் என்று தானே வந்தது. பிறகு எப்படி நீ டி என் ஏ டெஸ்டில் உன்னுடைய குழந்தைகள் ஆகும் என்று கேள்வி கேட்க பாரதி அமைதியாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அகிலன் மீது வீண்பழி

அகிலன் மீது வீண்பழி

வெண்பா பேசுவதை சௌந்தர்யா, ஷர்மிளா என அனைவரும் தடுக்க அனைவரையும் எதிர்த்து பேசி நான் என்னுடைய நண்பனை ஏமாற்றுவதை விட மாட்டேன் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். உனக்கு குழந்தை பெறுவதற்கு தகுதி இல்லை என்று தெரிந்த பிறகு தானே நீ கண்ணம்மா கர்ப்பமானதை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தின, இப்ப மட்டும் எப்படி டி என் ஏ டெஸ்ட் மேட்ச் ஆயிருக்கும். இந்த டிஎன்ஏ டெஸ்டில் யாரோ ஏதோ பண்ணி இருக்காங்க. நீ டெஸ்ட் எடுத்த விஷயம் வேறு யாருக்காவது தெரியுமா? என கேட்க ரொம்பவே யோசித்தபடி பாரதி அகிலனுக்கு மட்டும் தெரியும் என்று சொல்ல, போதுமே உன் அகிலன் தான் இந்த மாதிரி டெஸ்ட் ரிசல்ட்டை மாற்றி இருக்கிறார் என்று சொல்ல, பாரதி அப்படி முடியாது நான் நேரா டாக்டரை போய் பார்த்தேன் என்று சொல்ல, இல்லை இதை நான் நம்ப மாட்டேன் என அகிலனிடம் இந்த டெஸ்ட் ரிசல்ட்டை மாற்றுவதற்காக எவ்வளவு பணம் செலவழித்தாய் என்று கேட்டுக் கொண்டிருக்க, கண்ணம்மா முறைத்துக் கொண்டு இருக்கிறார். அகிலன் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+