கடைசி நேரத்தில் மனம் மாறிய கண்ணம்மா... பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணமாவின் வீட்டில் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரைக்கும் பாரதியின் மீது கோபத்தில் இருந்த கண்ணம்மா தன்னுடைய மகளிடம் பாரதிக்காக கெஞ்சி முடிவை மாற்ற வைத்து இருக்கிறார்.

கண்ணம்மாவின் இந்த திடீர் மாற்றத்தால் பாரதி மகிழ்ச்சி அடைந்து மகளோடு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

புது துணியோடு கொண்டாட்டத்துக்கு ரெடி

புது துணியோடு கொண்டாட்டத்துக்கு ரெடி

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், காலையில் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் எழுந்து புது துணியுடன் ரெடியாகி காத்துக்கொண்டிருக்க கண்ணம்மாவும் குளித்து ரெடியாகி வர வாழ்த்துக்களை மாற்றி மாற்றிக்கொள்ள சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹேமா நேற்று செய்த குலோப் ஜாமுன் எப்படி இருக்கிறது பார்க்க வேண்டும் என அடம் பிடிக்க, இல்லை சாமி கும்பிடும்போது தான் பார்க்க வேண்டும் இப்போது பார்த்தால் நீங்கள் எடுத்து சாப்பிட வேண்டும் என்று கேட்பீர்கள் என்று கூறுகிறார். பிறகு குழந்தைகளின் ஆசைக்காக கண்ணம்மா எடுத்துக்காட்ட நான் ஒரு ஸ்வீட் செய்ய வேண்டும் என கெஞ்ச கேசரி செய்ய சொல்லிக் கொடுக்கிறார்.

வருத்தப்படும் சௌந்தர்யா

வருத்தப்படும் சௌந்தர்யா

அடுத்ததாக கண்ணம்மா வீட்டிற்கு சௌந்தர்யா, அகிலன், அஞ்சலி, வேணு என அனைவரும் வந்துவிட எல்லோரும் சேர்ந்து கூட்டாக தீபாவளி கொண்டாடுகிறார்கள் .பட்டாசு வெடித்து சந்தோஷமாக இருக்கும் போது பாரதி ரூமில் தனியாக சோகமாக உட்கார்ந்து ஹேமாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் .அதே நேரத்தில் சௌந்தர்யாவும், பாரதியை நினைத்து தனியாக நின்று பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் .அப்போது அங்கே வந்த கண்ணம்மா என்ன ஆச்சு அத்தை எதற்காக ஒரு மாதிரி நிக்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு அவர் பாரதியை நினைத்து மனதிற்கு கஷ்டமாக இருப்பதாக கூறுகிறார்.

கண்ணம்மா கொடுத்த வாக்கு

கண்ணம்மா கொடுத்த வாக்கு

என்னுடைய இரண்டு மகன்களில் ஒருவன் மட்டும் கஷ்டமாக இருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. என்னால் நிம்மதியாக இங்கே பண்டிகையை கொண்டாட முடியவில்லை. ஹேமா போன் பண்ணி ஹேப்பி தீபாவளி டாடி என ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவன் சந்தோஷப்படுவான் என சொல்ல கண்ணம்மா உங்களுடைய வார்த்தை எனக்கு புரியுது ஹேமாவை நான் நேரிலேயே அனுப்பி வைக்கிறேன் என வாக்கு கொடுத்து ஹேமாவிடம் பேசுகிறார்.

எதிர்பாராத கடைசி நேரம் மாற்றம்

எதிர்பாராத கடைசி நேரம் மாற்றம்

ஹேமாவிடம் கண்ணம்மா ஸ்கூலில் சிறந்த அப்பா எங்க அப்பா தான் என்று பேசியது பற்றி நினைவு படுத்த, எனக்கும் காலையிலிருந்து டாடி பற்றி ஞாபகம் இருந்துச்சி .நான் ஒன்னு சொல்லவா ?என ஹேமா சொல்ல கண்ணம்மா சொல்லு என கூற நான் நேரில் போய் அவர பாத்துட்டு வந்துரவா என கேட்க கண்ணம்மா சரி என சந்தோஷமாக சொல்ல ஹேமா நான் செஞ்ச கேசரியை கொடுங்க நான் எடுத்துட்டு போய் கொடுக்கிறேன் டாடிக்கு ரொம்ப பிடிக்கும் என கூறுகிறார். அடுத்ததாக ஹேமா பாரதியிடம் சென்று கேசரி கொடுத்து தீபாவளி வாழ்த்து சொல்ல, பாரதி சந்தோஷப்படுகிறார். கண்ணம்மாவின் திடீர் மனமாற்றத்தால் ஹேமாவும் மனம் மாறி பாரதியிடம் வந்து மீண்டும் சேர்ந்ததால் பாரதி மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+