ஹேமாவால் பாரதிக்கு வந்த அடுத்த பிரச்சனை... ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தது வந்துவிட்டது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இதுவரைக்கும் என்னுடைய அம்மா யார் என்று தேடி அலைந்து வந்த ஹேமா இப்போது என்னுடைய அப்பா யார் என்ற கேள்வியை தொடங்கி இருக்கிறார்.
பாரதி இடமே அவருடைய மகள் ஹேமா என்னுடைய அப்பா யார் என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் என சொல்ல பாரதி என்ன பதில் சொல்ல என தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

பாரதியோடு தீபாவளி கொண்டாடிய ஹேமா
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் ஹேமா பாரதி வீட்டுக்கு சென்று ஸ்வீட் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன நிலையில் என்கூட சேர்ந்து தீபாவளி கொண்டாடுவியா? என பாரதி கேட்க, கொண்டாடுவேன் ஆனா ஒரு கண்டிஷன் இப்படி அழுக்கு டிரஸ் போட்டிருந்தால் கொண்டாட மாட்டேன் என சொல்ல பாரதி 5 நிமிடம் என சொல்லிவிட்டு குளித்து புது டிரஸ் உடுத்தி வருகிறார். பாரதியை பார்த்து சந்தோஷமடைந்த ஹேமாவும் அகிலனும் பாரதியோடு சேர்ந்து பட்டாசு வெடிந்து மகிழ்கின்றனர். ஹேமா நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என சொல்லம இன்று ஒரு நாள் மட்டும் என்கூடவே இரு என பாரதி கெஞ்சுகிறார். ஆனால் முடியாது வீட்டில் லட்சுமியும், அம்மாவும் என்னை தேடிக் கொண்டு இருப்பாங்க நான் கண்ணம்மா அம்மாவிடம் கொடுத்துவிட்டு உடனே வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு தான் வந்தேன் என சொல்லியபடி சித்தப்பா வாங்க வீட்டுக்கு போவோம் என அகிலனை அழைத்துக் கொண்டு பாரதிக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பி விடுகிறார்.

கண்ணம்மாவின் கேள்வி
அடுத்ததாக கண்ணம்மா மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கே இன்றைய பணிகளை குறித்து பாரதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாரதி ரொம்ப நன்றி என்று கூறுகிறார். இதைக் கேட்ட அதிர்ச்சியான கண்ணம்மா எதற்கு என்று கேட்கும் போது ஹேமா என்னிடம் பேசுவாளா இல்லையா என்றே தெரியாமல் நான் அனாதையாக அங்கே உட்கார்ந்து இருந்தேன். ஆனால் கடைசியில் எனக்காக ஸ்வீட் வந்து கொடுத்து என்னோடு இருந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வைத்து விட்டாள்.அது நீ சொல்லித்தான் ஹேமா அப்படி செய்தால் என்பது எனக்கு தெரியும். அதற்குத்தான் என்று சொல்ல ஹேமா, அது மட்டுமல்ல நம்ம எல்லாருமே சந்தோஷமாக எப்பவும் ஒன்றாக இருக்கலாம், நான் உங்களிடம் நாம் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வோமா என்று கேட்டேனே அதற்கு நீங்கள் பதிலை இன்னும் கூறவில்லையே என கேட்க அப்போது டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தால் தான் எதுவும் சொல்ல முடியும் என்று மனதிற்குள்ளே நினைத்தபடி இப்போதைக்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியாது என பாரதி கூறிவிடுகிறார். உடனே கண்ணம்மா அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார்.

வகுப்பில் டீச்சர் கேட்ட கேள்வி
அடுத்த நாள் ஸ்கூலுக்கு சென்ற ஹேமாவை அழைத்து அவரது மிஸ் இப்போ உங்க டாடி பாரதி எங்க இருப்பாரு வீட்டுலயா ஹாஸ்பிடலையா என கேட்கிறார். ஹேமா தெரியாது என சொல்ல உன்னை பற்றி கம்ப்ளைன்ட் பண்ண கேட்கல. நம்ம ஸ்கூல்ல நடக்கிற ஃபங்ஷனுக்கு அவரை சீப் கெஸ்டா கூப்பிடனும் என சொல்லி இருக்காங்க அதான் அதை பத்தி அவரிடம் பேச வேண்டும் என கேட்க ஹேமா அவரது போன் நம்பர் சொல்கிறார். நீயும் வீட்டுக்கு போய் உங்க டாடியை கண்டிப்பா வரணும்னு சொல்லு என சொல்ல நான் அவர்கிட்ட பேசுறது இல்லை. நான் அவர் வீட்டிலேயே இல்ல அவர் என்னோட அப்பா கிடையாது. லட்சுமி தான் என்னுடைய அக்கா அவங்க அம்மா கண்ணம்மா தான் என்னுடைய அம்மா இதுதான் உண்மை என சொல்ல இங்கே சாப்பாடு கொண்டு வருவாங்களா அவங்களா? உன்னுடைய அம்மா என்ன டீச்சர் அதிர்ச்சியாக கேட்க எனக்கு இப்போது தான் தெரிந்தது என ஹேமா கூறுகிறார்.

அப்பா யார்
சரி அப்போ பாரதி உன்னுடைய அப்பா இல்லன்னா உன்னுடைய அப்பா யார் என மிஸ் கேட்க தெரியல அதை பத்தி நான் இன்னும் எங்க அம்மா கிட்ட கேட்கல என கூறுகிறார். சரி ஓகே நான் பாரதி டாக்டரிடம் பேசிக் கொள்கிறேன் என மிஸ் சொன்னதும் ஹேமா வந்து விடுகிறார். அதற்குப் பிறகு நாம் இதைப் பற்றி எதுவும் யோசிக்கலையே என தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார் .அப்போது லட்சுமி வந்து இப்படி தனியாக இருந்து யோசிக்க கூடாது என்று அம்மா சொல்லி இருக்காங்க இல்லையா? என ஹேமாவிடம் கேட்க எனக்கு ஒரு உண்மை தெரியணும், எனக்கு அம்மா கண்ணம்மா அம்மா என்று தெரியும் அப்பா யாரு என கேட்க லட்சுமி இதற்கு முன்பு கண்ணம்மா அவரிடம் அப்பாவை பற்றி யார் கேட்டாலும் தெரியாது என்று மட்டும் சொல்ல வேண்டும் என சொன்னதை நினைத்துப் பார்க்கிறார்.

சொல்லுங்க பாரதி உண்மையை
மீண்டும் மீண்டும் துருவித் துருவி ஹேமா லட்சுமி இடம் அப்பாவை பற்றி உனக்கு தெரியுமா? நீ அப்பாவை பற்றி எப்பவாவது அம்மாவிடம் கேட்டிருக்கியா? என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார் .அதற்கு லட்சுமி நான் இதைப் பற்றி கேட்டாலும் அவங்க சொல்றது கிடையாது. எனக்கும் அப்பா யார் என்று தெரியாது என சொல்லி முடித்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஹேமா பாரதிக்கு போன் செய்து நான் உங்களிடம் ஒரு ஹெல்ப் கேப்பை செய்வீர்களா என கேட்க ,பாரதி என்ன உதவினாலும் கேளு என்று சொன்னதற்கு என்னுடைய அப்பா யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்னுடைய அப்பாவை பற்றி எனக்கு சொல்வீர்களா? என கேட்க பாரதி என்ன பதில் சொல்ல என தெரியாமல் முழிக்க இருக்கிறார். ஏற்கனவே ஹேமா அம்மா யார் என்று பல மாதங்கள் தேடிக் கொண்டிருந்தது போல அப்பா யார் என்று இப்போது தேடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அந்த நேரமும் வந்துவிட்டது.












Click it and Unblock the Notifications