
பாரதிக்கு தெரிந்த மொத்த உண்மை.. ஹேமாவால் கதறி அழும் குடும்பம்..கடைசி நேரத்தில் இப்படி ஒரு திருப்பமா?
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து இருந்த டிஎன்ஏ டெஸ்ட் முடிவு தற்போது பாரதிக்கு தெரிய வந்திருக்கிறது.
மொத்த உண்மையையும் தெரிந்து கொண்ட பாரதி கதறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரைப் பற்றிய சந்தேகங்கள் கண்ணம்மாவிற்கு தொடங்கி இருக்கிறது.
கோபியை பிரிக்க இனியா செய்த சூழ்ச்சி..தெரிந்து கொண்ட ராதிகா.. கதறி அழும் பாக்யா.. திடீர் திருப்பங்கள்

கதறி அழும் குடும்பத்தினர்
பாரதிகண்ணம்மா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ஹேமாவை மருத்துவமனையில் சேர்த்து இருக்க, கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வெளியே கண்ணீரோடு புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மா கதறி அழுவதை பார்த்து சௌந்தர்யா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கே சௌந்தர்யாவின் கணவர் வருகிறார். அவரிடமும் நடந்த நிகழ்வுகளை பற்றி கூறிக் கொண்டிருக்கின்றனர். ஹேமா கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருந்த எனக்கு இப்படி ஒரு ஆபத்து வந்து விட்டது. நான் யாருக்கு என்ன பாவம் செய்தனோ என சௌந்தர்யா அழுது கொண்டிருக்க அவருடைய கணவர் ஆறுதல் கூறுகிறார். அப்போது லட்சுமியும் அங்கே வந்து விடுகிறார் அவரும் ஹேமாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்.

அகிலன் நினைப்பது சரி தான்
கடவுள் அருளால் தான் ஹேமா நம்மிடம் மீண்டும் கிடைத்திருக்கிறார். செய்திகளில் எப்படி எல்லாம் நடப்பதாக பார்த்திருப்போம், அப்படி எதுவும் நடக்காமல் நம்மிடம் ஹேமா வந்து சேர்ந்ததே பெரிய விஷயம் தான் என்று சௌந்தர்யாவின் கணவர் பேசிக்கொண்டு இருக்கும் போது, டாக்டர் வந்து எல்லா ஸ்கேனும் செஞ்சி பார்த்தாச்சி ஹேமாவுக்கு பயப்படுற மாதிரி எந்த பிரச்சனையும் இல்லை. வெளியே மட்டும் தான் காயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போ மயக்கத்தில் இருக்கிறதால் கொஞ்ச நேரம் கழித்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு செல்கிறார். அதற்குப் பிறகு நிம்மதி பெருமூச்சு விட்ட குடும்பத்தினர் பாரதிக்கு போன் செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாரதி போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருப்பதால் எங்கே சென்றார் என அனைவரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அகிலனுக்கு மட்டும் பாரதி ஏற்கனவே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கொடுத்திருப்பது பற்றி சொன்னது நினைவிற்கு வருகிறது. ஒரு வேலை டெல்லிக்கு தான் பாரதி சென்று இருப்பாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பாரதி யோசிப்பது தவறு
அகிலனிடம் பாரதி எங்கே சென்றான் என்று உன்னிடம் ஏதாவது சொன்னானா? என சௌந்தர்யா கேட்க, உங்களிடமே எதுவும் சொல்லலையே என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று கூறுகிறார். நாமாக எதுவும் சொல்ல வேண்டாம் பாரதியே வந்து மொத்த உண்மையையும் சொல்லட்டும் என்று அகிலன் முடிவெடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் டெல்லியில் பாரதி ரூம்பில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறார் .விஷ மருந்து பாட்டிலை பார்த்தபடியே ரிசல்டில் பாசிடிவ் என வந்துச்சுன்னா, கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து விட வேண்டும். இல்லை என்றால் என்னுடைய சாவுக்கு கண்ணம்மாவின் பொய்யும், ஏமாற்றம் தான் காரணம் என நான் இந்த உலகத்தை விட்டு போய்விட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்கிறார்.

கடைசியில் தெரிந்த உண்மை
டாக்டர் ஆரம்பத்தில் நலம் விசாரித்து கொண்டு டெஸ்ட் ரிசல்ட்டை ஓபன் செய்து பார்க்கிறார். பார்த்த பிறகு எதற்காக நீங்கள் இந்த டெஸ்ட் எடுக்கிறீர்கள் என்று பாரதியிடம் கேட்க பாரதி, இதுவரைக்கும் நடந்த நிகழ்வுகளையும் தனக்கு திருமணத்திற்கு முன்பு ஆக்ஸிடண்ட் ஆன விஷயத்தையும், அப்போது எனக்கு குழந்தை பிறக்கும் திறன் இல்லை என ரிசல்ட் வந்தது .இதை நான் யாரிடமும் சொல்லவில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் .அதனால் தான் அந்த குழந்தைகளுக்கும் எனக்கும் இப்போது டெஸ்ட் எடுக்க கொடுத்திருக்கிறேன் என்று சொல்ல, டாக்டர் பாரதி மற்றும் ஹேமா, லட்சுமியின் டி என் ஏ டெஸ்ட் பர்ஃபெக்டாக மேட்ச் ஆகி இருக்கிறது என்று சொல்ல, பாரதிக்கு சந்தோஷமும் அழுகையும் சேர்ந்து வருகிறது. வெளியே வந்த பாரதி ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தன்னுடைய குழந்தைகள் என்பதை தெரிந்து கொண்டு கதறி அழுது கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.