பாரதிராஜா இப்போது எப்படி இருக்கிறார்? மருத்துவமனையில் ஒன்று கூடிய பிரபலங்கள்! ஆர்.கே செல்வமணி ஆதங்கம்
சென்னை: (Bharathiraja health update) தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்தி செய்திகள் பரவி வருகின்றன. அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல்வேறு ஊகங்களும் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல பிரபல இயக்குநர்கள் ஒன்றாக இணைந்து மருத்துவமனைக்கு சென்று விளக்கம் அளித்துள்ளனர்.

ஒன்றுகூடிய திரையுலக நண்பர்கள்
பாரதிராஜா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை நேரில் சந்திக்க இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பல இயக்குநர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் பாரதிராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து நேரடியாக விசாரித்துள்ளனர்.
ஆர்.கே. செல்வமணி பேட்டி
மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, "தொடர்ந்து சில நாட்களாக சோசியல் மீடியாவில் பாரதிராஜா உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் நாங்கள் இந்த விளக்கத்தை கொடுக்க வந்தோம். திரை உலகைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் அவரை நேரில் சந்திக்க வந்திருந்தோம். ஆனால் அவர் தற்போது ஐ.சி.யூவில் இருப்பதால் எங்களால் நேரில் சந்திக்க முடியவில்லை" என்று கூறினார்.
பாரதிராஜா நலமாக இருக்கிறார்
தொடர்ந்து பேசிய ஆர்.கே. செல்வமணி, "அவருடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினோம். பாரதிராஜா இப்போதுவரை நலமாகவே இருக்கிறார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை குறித்து மருத்துவமனை தினமும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதற்கு முன்பாக யாரும் தவறான செய்திகள் பரப்ப வேண்டாம்" என்று தெளிவாக கூறினார்.
வதந்திகள்
பாரதிராஜா குறித்து பரவும் செய்திகள் சிலருக்கு தேவையற்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், "சிலர் உண்மையிலேயே என்ன நடந்தது என்று குழப்பத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். இதை உடனே நிறுத்த வேண்டும்" என்று ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.
பாரதிராஜாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய துயரமாக அமைந்தது அவருடைய மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணம். அந்த இழப்பு அவரை மனதளவில் மிகவும் பாதித்தது. அதன்பிறகு பொதுவெளியில் குறைவாகவே தோன்றிய பாரதிராஜா, சினிமா நிகழ்ச்சிகளிலும் தேர்ந்தெடுத்தே கலந்து வந்தார்.
தற்போது நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவமனை நிர்வாகம் தினசரி அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சகாப்தம்
பாரதிராஜா என்றாலே தமிழ் சினிமாவில் கிராமிய கதைகள், இயல்பான மனித உணர்வுகள், புதிய முகங்களுக்கு வாய்ப்பு என்பதற்கான அடையாளம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்களின் வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை உருவாக்கியவர். இன்றைய பல முன்னணி இயக்குநர்களுக்கும் அவர் ஒரு வழிகாட்டியாக இருந்து வந்தவர்.
இந்த நிலையில், பல இயக்குநர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஒன்றாக இணைந்து மருத்துவமனையில் பேட்டி கொடுத்தது, பாரதிராஜாவுக்கு திரையுலகில் உள்ள மரியாதையையும், அவரை சுற்றியுள்ள அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications