பாரதி கண்ணம்மாவின் 2வது பாகம் இதுதான் கதையா? கசிந்த தகவல்கள்..பிரமோவிலே இப்படியா?ரசிகர்களின் கேள்வி
பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசனின் அடுத்த பகுதியாக இரண்டாவது பாகம் வரும் திங்கள்கிழமையிலிருந்து ஒளிபரப்பாகும் என ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா 2 சீரியலில் கதாநாயகன் சிபு சூரியன் பாரதியாக நடிக்க இருக்கிறார்.
கண்ணமாவாக ஏற்கனவே நடித்து வந்த வினுஷா தேவி மீண்டும் நடிக்க இருக்கிறார்.
தற்போது வெளியான ப்ரோமோ இரண்டாவது பாகம் முதல் பாகத்தை போன்று இல்லை என்று தெரியப்படுத்தி இருக்கிறது.

புதிய கதாநாயகன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நான்கரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றோடு முடிவடைய இருக்கும் நிலையில் இதன் இரண்டாவது பாகம் வரும் பிப்ரவரி ஆறாம் தேதி வரும் திங்கள்கிழமையிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலுக்கான முதல் பிரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பாரதியாக சிபு சூரியன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ரோஜா சீரியலில் அர்ஜுன் ஆக நடித்தவர் தான். அதுபோல பாரதியின் அம்மாவாக சௌந்தர்யாவாக நடித்து வந்த ரூபாஸ்ரீ பாரதியின் அம்மாவாகவே இப்போதும் நடித்து இருக்கிறார்.

கிராமத்து பாரதி
அதுபோல கண்ணம்மாவின் குடும்பத்தில் கண்ணம்மாவின் அம்மாவாக ஏற்கனவே முதல் பாகத்தில் நடிகை தீபா இறந்து விட்டதாக காண்பித்த நிலையில், தற்போது மீண்டும் அவர் தான் எந்த இரண்டாவது சீசனின் அம்மாவாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் கிராமத்து பின்னனியில் பாரதி கண்ணம்மா 2 இருக்க இருக்கிறது என்ற தகவல்கள் தற்போது பிரமோ மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் டாக்டராக இருந்த பாரதி இப்போது கிராமத்து இளைஞராக அதுவும் படிக்காத ஒரு கேரக்டராக தான் இருக்கப் போகிறார். ஏனென்றால் அவருடைய பாடி லாங்குவேஜ் பார்க்கும்போது ரசிகர்கள் கணிக்க தொடங்கி விட்டனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் முதல் சீசனில் படிக்காத பெண்ணாக இருந்த கண்ணம்மா இந்த சீசனில் கிராமத்திலே அதிகமாக படித்த பெண்ணாக இருக்கப் போகிறார். இதில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகள் பிறகு வரும் காதல் மோதல் என கதை சுவாரசியமாக செல்லுமா? அல்லது இதுவும் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு கிரன்ஞ் செய்ய போகிறதா? என்று இப்போதே ரசிகர்கள் விவாதங்களை தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே ரோஜா சீரியல் கதாநாயகன் இந்த சீரியலில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் அந்த சீரியல் ரசிகர்கள் சிபு சூரியனுக்கு இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பிரமோ வெளியானதும் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. அதை ப்ரோமோவில் வரும் கமாண்டுகளிலே காண முடிகிறது.

முடிந்த இடத்தில் தொடக்கம்
முதல் பாகத்தை ரசிகர்கள் அதிகமாக கழுவி ஊற்றினாலும் அது நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான நிலையில் இரண்டாவது பாகம் இனி என்ன மாதிரி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு இருக்கையில், நெட்டிசன்கள் இப்போதே இந்த சீரியலை அதிகமாக கலாய்க்க தொடங்கி விட்டனர். அதனால் தான் இந்த சீரியல் ப்ரோமோ வெளியாகி சில மணி நேரங்களுக்குள் கமெண்டுகள் ஆயிரங்களை தாண்டி குவிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் கடைசி முடிவு கிராமத்தில் முடிவடைய இருப்பதால் இரண்டாவது பாகத்தின் தொடக்கமும் அதே கிராமத்தில் மக்களோடு தொடங்க இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications