தாலியைப் பற்றி பேசாதீங்க...அவ்ளோ அழகா வாங்கி வைத்திருந்தேன்..பாவனி உருக்கம்
சென்னை: திடீரென்று பாவனி உருக்கமாக பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்னுடைய சோகத்தையும் மறைத்து வெளியே சிரித்தபடியே சோக வார்த்தைகளைப் பேசி இருப்பதை பார்க்கும்போதே தெரிகிறது எவ்வளவு வேதனை இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தாலியைப்பற்றி உருக்கமாக பேசிய பாவனியின் செயல்கள்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாவனியின் சோகக்கதை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை கூறி ரசிகர்களை பீல் பண்ண வைத்திருக்கின்றனர். ஏற்கனவே ரசிகர்களுக்கு பரிச்சயமான போட்டியாளராக இருக்கும் பாவனி ரெட்டி பேசிய கதைதான் ரசிகர்கள் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மனக்கவலையையும் அடைய வைத்திருக்கிறது. அவருடைய சிரித்த முகத்துக்குள் இவ்வளவு வேதனைகள் இருக்கிறதா என்று பலர் பேசி வருகின்றனர்.

சின்னத்திரை கதாநாயகி
சின்னத்திரையில் கதாநாயகியாக தமிழ் சீரியல்களில் அறிமுகமாகி வெள்ளித்திரை கதாநாயகிகளை போல ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருக்கும் பாவனியை எப்போதுமே கலகலப்பான மற்றும் அமைதியான கேரக்டர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவர் ஜாலியான கேரக்டராக இருந்தாலும் இவருடைய மனதுக்குள் இருக்கும் ஆழமான காதல் மற்றும் அதனால் ஏற்பட்ட மன காயங்கள் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு செயல்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய கைகளில் இவர் போட்டிருக்கும் டாட்டுவாக இருந்தாலும் சரி தனது காதலை நிரூபிக்கும் இடங்களாக இருந்தாலும் சரி அதில் ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
Recommended Video

ரசிகர்களின் அன்பு மழை
ரசிகர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சியில் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்யும் செயல்களை எல்லாம் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். ரசிகர்கள் அவருக்காகத்தான் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறோம் என்று கூறியிருந்தனர். அதுமட்டுமல்லாமல் ப்ரோமோவில் எப்படியாவது என் செல்லத்தை காட்டி விடுங்கள் என்று இவர் மீது அன்பு மழைகளையும் பொழிகின்றனர். இவருக்காக ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாக பேன்ஸ் பேஜ்களை ஓபன் பண்ணி கொண்டிருக்கின்றனர். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருந்த பாலோவர்ஸ்களை விட தற்போது அதிகரித்து வருகின்றனர்.

வார்த்தைகளால் கலங்க வைத்துவிட்டார்
இவர் எந்த எபிசோடுகளில் வந்தாலும் அதனை மறக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் இவருடைய ரசிகர்கள் நேற்றைய எபிசோட்டில் இவரும் தாமரையும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துதான் பலருக்கும் மனதை கலங்கி இருக்கிறதாம். அதில் தாமரை தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை கூறிக் கொண்டிருக்கும் போது எனக்கு ஆசை 10 பவுன் தாலிச் செயின் போட வேண்டும் என்று ஆனால் அதற்கு நான் கொடுத்து வைக்கவில்லை என்று அவர் கூறவும் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று இவர் அறிவுரையை கூறிக்கொண்டு இருந்தார். தாலியை பற்றி பேசாதீங்க அம்மா, நான் 'தாலியை பார்த்து பார்த்து வாங்கி வைத்திருந்தேன்' என்று உருக்கமாக இவர் பேசியது பல ரசிகர்களின் மனதை கலங்க வைத்திருக்கிறது. இந்த மாதிரி நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று பலர் இவருக்கு ஆதரவு கூறி வருகின்றனர்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications