ராஜூவின் சாப்பாட்டை சாப்பிட மாட்டேன் அடம் பிடித்த பாவனி.. அட்வைஸ் செய்து கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: ராஜுவின் மீது இருக்கும் கோபத்தை சாப்பாட்டின் மீது காட்டி இருக்கிறார் பாவனி.
பாவனியின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
பாவனியின் கருத்தை கேட்டதும் நிரூப், நமக்கு சாப்பாடு தான் முக்கியம் என்று தன்னுடைய நிலைப்பாட்டை கூறி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

தொடரும் சண்டை சச்சரவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களுக்கு மட்டுமல்லாமல் சண்டை சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் தான் இருந்துகொண்டிருக்கிறது. ஒருசில போட்டியாளர்கள் ஆரம்பத்திலிருந்தே முட்டி மோதி வருகின்றனர். இதில் யார் பக்கம் சரி என்று கூற முடியாமல் ரசிகர்களின் நிலைப்பாடும் இருந்து வருகிறது. அதிலும் பாவனி மற்றும் ராஜூவின் சண்டை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைப் பார்த்து இதில் யார் மீது சரி இருக்கிறது என்று ரசிகர்களின் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பரிச்சயமான போட்டியாளராக ராஜு மற்றும் பாவனி இருவரும் அறிமுகமாகியிருந்தாலும் ரசிகர்கள் ஆரம்பத்தில் பாவனியைத்தான் அதிகமாக ரசித்து வந்தனர். அவருக்கு தான் முதன்முதலில் ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களையும் தொடங்கினார். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அவர் மீது ஒரு சில செயல்களால் சில ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். அதே நேரத்தில் ராஜு முதல் நாளில் இருந்ததை விடவும் தற்போது வரைக்கும் அவருடைய பெயர் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று விட்டது. ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இவர் மீதும் சில நேரங்களில் குறை இருக்கத்தான் செய்கிறது என்று கூறி வருகின்றனர்.

பாவனியின் நடவடிக்கையில் மாற்றங்கள்
ராஜுவின் செய்கையை பிடிக்காத நெட்டிசன்கள் ஒருபக்கம் கலாய்த்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு சளைத்தவர் அல்ல என்று பாவனி சில நேரங்களில் நிரூபித்து வருகிறார். தாமரையுடன் காயின் டாஸ்க்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக ராஜூ மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் பாவனியை வெறுக்க தொடங்கி விட்டனர். ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கு பிறகு பாவனியின் நடவடிக்கையில் பல நடவடிக்கைகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.அதுவும் ராஜுவிடம் இவர் சென்று பேசுவது, அது மட்டுமல்லாமல் தன்னுடைய கேரக்டரை புரியவைக்க ஒவ்வொரு முறையும் முயற்சி செய்து வருகிறார். ஆனால் ராஜூ முகத்துக்கு நேராக உன்னிடம் என்னால் நடிக்க முடியாது என் மனம் எப்போது உன்னை நம்புகிறதோ அப்போ பேசுகிறேன் என்று கூறிவிட்டார்.

அறிவுரை கூறும் ரசிகர்கள்
இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் ராஜூ தான் சமையல் செய்து கொண்டிருப்பதால் அவர் சமைத்த சாப்பாடு எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று ராஜூ கூறிக் கொண்டிருக்கிறார். அதைக்கேட்டதும் அருகிலிருந்த நிரூப் எதுக்காக இப்படி சொன்னார்?? நமக்கெல்லாம் சோறு தான் முக்கியம். .இப்படி கோபத்தை எல்லாம் சாப்பாட்டு மீது காட்ட கூடாது என்று தத்துவத்தை உதிர்க்கிறார். அதை கேட்டதும் நெட்டிசன்கள் சாப்பாடு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும்போது கோபத்தால் சாப்பாடை இழக்கக் கூடாது என்று அறிவுரை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications