கானா பாடலால் சிபியை கடைந்தெடுத்த பிரியங்கா..சிபி கொடுத்த பதில்.. இது வேற லெவலில் இருக்கே
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசன் கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.
தன்னுடைய மனதில் இருப்பதை காணாபாடலோடு அசத்தலான டான்ஸால் பிரியங்கா, சிபியை பார்த்து கலாய்த்து தள்ளியுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
வெற்றிகரமாக நடந்துமுடிந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் விஜய் டிவியில் ஒரே நிகழ்ச்சியில் இணைந்து இருக்கின்றனர். ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை ரசிகர்கள் அதிகமாக மிஸ் பண்ணி வந்துள்ளார்கள். அதனால் இவர்கள் மீண்டும் எப்போது ஒன்றாக கூடுவார்கள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர் அதுமட்டுமல்லாமல் வழக்கமாக ஒவ்வொரு சீசன் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதற்குப் பிறகு கொண்டாடப்படும் பிக்பாஸ் கொண்டாட்டம் தற்போது எப்போது இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

வரும் ஞாயிறு கொண்டாட்டம்
பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் கொண்டாட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் நேரத்தில் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் வேற லெவல் பர்ஃபாமென்ஸ் பண்ண காத்து இருக்கிறார்கள். இவர்களுடைய அசத்தலான ஆக்டிவிட்டியை பார்ப்பதற்காக பலர் காத்திருக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சில ஃபுட்டேஜ் வெளியாகியிருக்கிறது.

புது கானா பாடல்
யாரும் எதிர்பார்க்காத வகையில் தர லோக்கல் ஆன லுங்கி கெட்டப்பில் பியங்கா மாஸ் காட்டியபடி டான்ஸில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பிரியங்காவின் டான்ஸ் போட்டோஸ்கள் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவர் டான்ஸ் ஆடிய வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் அவர் சிபியை வஞ்சனையில்லாமல் கலாய்த்து தள்ளியுள்ளார். சிபி ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது இருந்ததற்கும், திடீர் முடிவு எடுத்து வீட்டை விட்டு விலகியதற்கும் என்ன காரணம் என்று பிரியங்கா கானா பாடலில் கேள்வி கேட்டுள்ளார்.

மாஸான பெர்பாமன்ஸ்
'எல்லா டாஸ்க்களையும் நான் தான் பெஸ்ட் னு சொன்ன...12 லட்சத்தை பார்த்ததும் தூக்கிட்டு போயிட்ட என்ன..!??,அவ்வளோ பணத்த வச்சுட்டு என்னதான் பண்ண..!!??'என்று கலக்கலான கெட்டப்போடு இவர் போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்து அங்கே அமர்ந்திருந்த சிபி வயிறு வலிக்க சிரித்த படியே என்ன பண்ணேன்னு தெரியவில்லையே என்று இரண்டு கையையும் மேலே தூக்கி விரித்து காட்டி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு மாஸ் பர்பாமன்ஸ் பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வெயிட்டிங் என்றும் கூறிவருகிறார்கள்.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications