கடவுளே என்னைக்கொண்டு இப்படி விட்டுட்டீங்களே புலம்பும் தாமரை...காண்டான போட்டியாளர்கள்
சென்னை: தாமரை சக போட்டியாளர்களை பார்த்து பேசியதுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுவரைக்கும் ஜாலியாக இருந்த பெண் போட்டியாளர்கள் தற்போது தடித்த வார்த்தைகளால் மன உளைச்சலில் இருக்கின்றனர்.
வெகுளித்தனமான தாமரை பேசியது சுருதியை காயப்படுத்தி விட்டது.

பரபரப்பானது பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாலி மட்டுமல்ல பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் தான் ஒவ்வொரு சீசனிலும் இருந்துகொண்டிருக்கிறது. அதில் தற்போது ஐந்தாவது சீசனும் சளைத்ததல்ல என்று நிரூபித்து வருகிறது. நேற்றைய எபிசோட்டில் கலகலப்பாக இருந்த பெண் போட்டியாளர்கள் இன்று பிரச்சனையை தொடங்க ஆரம்பித்து விட்டார்கள். ஒன்றாக இருந்தால் ரசிகர்களுக்கும் பிடிக்காது என்று பிக் பாஸ் இப்படி வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா என பலர் புலம்பி வருகின்றனர்.

குழப்பத்தை ஏற்படுத்தும் டாஸ்க்
காயின் டாஸ்க் என்பதை போன வாரத்தில் தொடங்கி இந்த வாரம் வரைக்கும் ஜவ்வு போல இழுத்து வருகின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லையா?? அல்லது இப்படியே நாட்களை கடத்தி விடலாம் என்று பிக்பாஸ் நினைத்து இருக்கிறதா? ? என பல ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். எதை செய்தாலும் இரண்டு வாரங்களுக்கு ஒரே டாஸ்க் அல்லது கண்டென்ட் கொடுத்து, பார்க்கும் ரசிகர்களுக்கும் போரடிக்க வைத்து வருகிறது என ரசிகர்கள் மீது ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காயினை கைப்பற்றிய சுருதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கில் ஜெயித்த போட்டியாளர்கள் தங்களுடைய காயின்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தவறினால் சக போட்டியாளர்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது டாஸ்க் ஆக இருந்தாலும் தாமரையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் இதுவரைக்கும் பாதுகாத்து வைத்திருந்த காயினை அவர் குளிக்கும்போது அவரிடமிருந்து சுருதி எடுத்துவிட்டார். இதைப் பார்த்ததும் பதறிப் போன தாமரை சுருதி தனக்கு துரோகம் செய்து விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.

தாமரையின் கதறல்
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் சின்னப்பிள்ளை தனமாக இவர்கள் போடும் சண்டையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தாமரை பேசும் வார்த்தை பலருடைய மனதை புண்படுத்தி விட்டது என சுருதிக்கு ஆதரவாக பெண் போட்டியாளர்கள் பலர் தாமரையிடம் பஞ்சாயத்து தொடங்கியிருக்கின்றனர். இதை பார்த்ததும் விரக்தியில் தாமரை கடவுளே என்னைக்கொண்டு இப்படி விட்டுட்டீங்களே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications