Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்னிடம் சண்டை போட்ட தனலட்சுமிக்காக கண்ணீர் விட்டு அழுத ஜி.பி முத்து.. மனசு வேற லெவல் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் தனலட்சுமி கதையை கேட்டு ஜி பி முத்து கண்கலங்கி அழுது இருக்கிறார்.

கடந்த வாரம் ஜி பி முத்துவை நடிக்கிறார் என்று சொல்லி கண்கலங்க வைத்த தனலட்சுமி இன்று சோக கதையை கேட்டு ஜி பி முத்து அழுதது அவருடைய ரசிகர்களால் தாங்க முடியாமல் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

தனலட்சுமி இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகுதான் தான் எவ்வளவு தனது குடும்பத்தை கஷ்டப்படுத்தி இருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

கதை சொல்வதற்கான விதிமுறை

கதை சொல்வதற்கான விதிமுறை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் அனைவரும் தங்களுடைய கதைகளை சொல்லி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். போட்டியாளர்கள் 21 பேருக்கும் குறிப்பிட்ட டைம் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கதைகளை 60 நிமிடங்களுக்குள் போட்டியாளர்களை கவரும் விதத்தில் சொல்ல வேண்டும். அப்படி போட்டியாளர்கள் கவரவில்லை என்றால் மூன்று பட்டன்களை அழுத்தினால் போட்டியாளர் கதை சொல்வதை நிறுத்தி விட வேண்டும்.

வில்லத்தனம் மாறி போச்சு

வில்லத்தனம் மாறி போச்சு

இன்றைய நிகழ்ச்சியில் முதல் ஆளாக அசீம் தன்னுடைய கதையை தொடங்கியிருந்தார். அவர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலே போட்டியாளர்கள் அவரை பேசவிடாமல் பட்டனை அழுத்தி அவர் கதையை நிறுத்திவிட்டனர். அதனை தொடர்ந்து ஜனனி கதையை பேசிக்கொண்டிருந்தார். அவரையும் அதேபோல செய்து விட்டனர். ஆனால் தனலட்சுமி பேசும்போது போட்டியாளர்கள் அனைவரும் தங்களை அறியாமல் தனலட்சுமியின் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கின்றனர் .கடந்த வாரம் முழுக்க வில்லி அவதாரத்தோடு வலம் வந்து கொண்டிருந்த தனலட்சுமிக்கு தற்போது கண்ணீரோடு சொல்லிய கதை போட்டியாளர்களையும் கவர்ந்து விட்டது.

அம்மா சொன்ன வார்த்தை

அம்மா சொன்ன வார்த்தை

தனலட்சுமி டிக் டாக் செய்ய வேண்டும் என்பதற்காக விடிய விடிய வீடியோ பண்ணுவாராம். இவர் வீடியோ பண்ணுவதற்கு வீடியோ எடுப்பது இவருடைய அம்மாதானாம்.அப்படி வீடியோ எடுக்காமல் எப்போதாவது இருந்தால் அவரோட அம்மாவை அசிங்கமாக திட்டி இருக்கிறாராம். கேமராவை பிடிக்கவில்லை என்றால் அம்மாவை பயங்கரமான வார்த்தைகளால் இவர் திட்டி இருக்கிறாராம். குடும்பத்தை பற்றி எப்போதுமே இவர் யோசித்ததே இல்லை என்று கூறி இருக்கிறார். இங்கே வந்து தான் ஒவ்வொரு முறை பேசும் போதும் அது தப்பாக இருப்பதை பார்த்து தான் தன்னுடைய தப்பு தெரிந்திருக்கிறதாம் .இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது உன்னுடைய பிள்ளையை நீ எப்படி வளர்த்திருக்க பாரு என்று பலரும் என்னை பார்த்து கேட்பார்கள் என்று சொல்லி தான் என்னுடைய அம்மா இங்கே அனுப்பி இருக்கிறார் என்று கண் கலங்கியபடியே கூறுகிறார்.

இளகிய மனசுதான்

இளகிய மனசுதான்

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு தான் என்னுடைய அம்மாவை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன், அம்மாவுடைய அருமை இப்போதுதான் எனக்கு தெரிகிறது. குடும்பத்தோடு இருக்கும்போது அவர்களுடைய அருமை எனக்கு தெரியவில்லை என்று கதறி அழுகிறார் .இதைப்பார்த்து சக போட்டியாளர்களும் அழுது கொண்டிருக்கின்றனர்.குறிப்பாக ஜிபி முத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்களும், ரசிகர்களும் தாங்கிக் கொள்ள முடியாமல் ஜிபி முத்துவுக்கு ஆதரவாகவும் ,ஜி பி முத்துவின் இளகிய மனதை குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+