பிக் பாஸ் 6: கேமரா முன்பு நெகிழ்ச்சியாக குடும்பத்தினரிடம் பேசிய ஜிபி முத்து..ஆனால் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: கையில் ஒரு செல்போன் கேமரா இருந்தாலே அதில் தன்னுடைய அட்ராசிட்டியை தொடங்கிவிடும் ஜிபி முத்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சுற்றி இருக்கும் கேமரா முன்பு பேசியதை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிற்கு ஜிபி முத்துவிற்கு கொடுத்து இருக்கும் மைக்கில் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படத்தை காட்டி குடும்ப உறுப்பினர்களிடம் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
என்னதான் இவர் செண்டிமெண்டாக பேசினாலும் தன்னுடைய வழக்கமான காமெடி தனத்தை அதில் அதிகமாகவே சேர்த்திருக்கிறார்.

ஆறாவது சீசன் தொடக்கம்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்போடு ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் மட்டுமல்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் அதில் சென்று லைவாக நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் வழக்கம் போல இரவு ஒளிபரப்பாகும் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோவை மட்டுமே பார்த்து வருகின்றனர். ஆறாவது சீசன் தொடங்கி இரண்டு நாட்கள் ஆகின்ற நிலையில் அதிகமான ப்ரோமோகளில் ஜி பி முத்து தான் இடம் பிடித்து வருகிறார்.

முதலாவது போட்டியாளர்
கடந்த சீசனில் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் தான் போன் இல்லாமலும் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து 100 நாட்கள் இருந்து விட மாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இந்த சீசனில் முதல் ஆளாக ஜிபி முத்து தான் கலந்து கொண்டிருக்கிறார். இது யோசிக்க வேண்டிய விஷயம் என்று ரசிகர்கள் கூறி வந்தாலும் ஜி பி முத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாலே அவருடைய ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருவதாக கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த் மற்றும் மணியை இங்கேயும் விடுவதில்லை
இந்த நிலையில் இவர் கொண்டு வந்த டிரஸ் எல்லாம் இன்னும் இவரிடம் வந்து சேரவில்லையாம். அதைக் குறித்து கேமரா முன்பு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய குழந்தைகளிடம் தான் மாட்டியிருக்கும் கேமராவில் அவருடைய புகைப்படம் ஒட்டப்பட்டு இருப்பதை காட்டியிருக்கிறார். "விஷ்ணு அப்பா போட்டோவ பாருமா என்ன கொஞ்சலாக பேசிய ஜி பி முத்து, ஏல தம்பி ஆனந்த், மணி அண்ணன் படத்தை பாரு! சந்தோசமா இருக்கீங்களா? முடிச்சுட்டு வாரேன். என் ஆட்டத்தை பாருங்க என்று கைகளை அங்கே இங்கே அசைத்து அவருடைய வழக்கமான செய்கையை செய்து இருக்கிறார்.

தொடங்கிய அட்ரா சிட்டி
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இந்த இரண்டு லைனில் மட்டுமே தெரிந்த இவருக்கு இதற்கு மேலே தெரியவில்லை சாரி என்று கூறிவிட்டு, பேப்பர் ஐடி...ஏலே பேப்பர் ஐடி ,செத்த பயலே எப்படி இருக்க? இன்னும் டிரஸ் வரல. என் டிரஸ் வந்தா ஏன் ரேஞ்ச் வேற. அப்படியே மாடல் மாடலா போட்டு டான்ஸ் பண்ணுவேன். இன்னும் டிரஸ் வரல சிலுக்கு சட்டை எல்லாமே இருக்கு. ஆனா இன்னும் வரல. இங்க வந்து மூணு நாளாச்சு நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன். ஒன்னும் வரல, இன்னைக்கு ஒரு டிரஸ் தந்து இருக்காங்க. சூப்பரா இருக்கு என்று ஒரு டி-ஷர்ட் ஓபன் பண்ணி காட்டுகிறார். அதில் பாத்திரம் பளக்குவது கலக்குவது என்று எழுதி இருக்கிறது. அதை என்ன...என்னது? பாத்திரம் கழுவுறதா என்று அவராகவே படித்து முடித்து இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து எங்க தலைவர் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று கொண்டாடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications