சில்லித்தனமா இருக்கே.. ஆளை பார்த்து சோறு போடுறாங்க.. பிக் பாஸ் திவாகர் மேல குவியும் சப்போர்ட்கள்
சென்னை: பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது,. ஒரு வாரம் முடியும் முன்னே நந்தினி வெளியேறி சென்ற நிலையில், வெளியேறிவிட்ட நிலையில் முதல் வார இறுதியில் டைரக்டர் பிரவீன் காந்தி எலிமினேட் ஆகி சென்றுள்ளார்.. ஆனால், கடந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திவாகர், ஓட்டுக்களில் டாப்பில் இருந்து வருகிறாராம். இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த முறை பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் தேர்விலிருந்தே சலசலப்புகளும் சர்ச்சைகளும் வெடித்தன.. குறிப்பாக திவாகரை எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துள்ளார்கள்? யாரை வேண்டுமானாலும் விளையாட கூப்பிடுவதா? என்று இணையவாசிகள் கேள்விகளை எழுப்பினார்கள்..

பிசியோதெரபி டாக்டர்
அதேபோல பிசியோதெரபி டாக்டர் என்பதால் அது தொடர்பான கேள்விகளை கேட்டதற்கு திவாகர் சரியான பதில்களை சொன்னதாகவும், அந்த காரணத்துக்காகவும்தான் அவரை போட்டியாளராக தேர்ந்தெடுத்ததாக சொன்ன காரணத்தையும் பெரும்பாலானோர் ஏற்கவில்லை.. டாக்டருக்கு படித்தவர்களுக்கு பதில் தெரியாதா? என்றும் விமர்சித்திருந்தனர்.
இதுபோலவே பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் திவாகரை முதல் நாளே பலரும் டார்கெட் செய்தனர்.. எனவே இந்த வார நாமினேஷனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், ஆதிரை, வியானா, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன், மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன..
இதில், திவாகரை டார்கெட் செய்து இணைவாசிகளும், ஹவுஸ்மேட்ஸ்களும் ஒரேநேரத்தில் டார்கெட் செய்ததால் அவர்தான் முதல் ஆளாக வெளியேறுவார் என்று பலரும் கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் இதுவே திவாகருக்கு அனுதாப ஓட்டுகளாய் மாறி விடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. இந்த அனுதாப ஓட்டுகளால் திவாகர்தான் வாக்குகளில் டாப்பில் உள்ளாராம்,
விஜே பார்வதி
வீட்டில் திவாகருக்கு எதிராக யார் பேசினாலும் சரி, ஆரம்பத்திலிருந்தே விஜே பார்வதி மட்டும் அவருக்காக சப்போர்ட்டாக இருந்து வருகிறார். அந்தவகையில் இருவரும்தான் நண்பர்களாக, சகோதர சகோதரியாக இருந்து வருகிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதாவது மகாநதி சீரியல் நடிகர் கம்ருதின் திவாகரை பைத்தியக்காரன், லூசு, மெண்டல் என்று கடுமையாக திட்டுகிறார். பைத்தியகாரனையெல்லாம் கொண்டு வந்து சேத்து வச்சிருக்கானுங்க, டேய் பைத்தியக்காரா, லூசு, மெண்டல், உள்ளே போடா மெண்டல், ஹே லூசு என்றெல்லாம் கடுமையாக திட்டுகிறார்.
மெண்டல், லூசு
உடனே சபரி குறுக்கே புகுந்து இப்படியெல்லாம் பேசதே, தப்பு என்று சொல்கிறார். அப்போதும் கம்ருதின் அவர் சொல்வதை காதில் வாங்கவில்லை., என்ன வேணாலும் நடக்கட்டும். கேரியர் போனாலும் பரவாயில்ல, எனக்கு ஐடி வேலை இருக்கு, அதுக்கு போயிடுவேன் என்று சொல்கிறார்,.
அப்போதும் சரி இப்படியெல்லாம் பேசாதே உனக்குதான் கெட்ட பேர் வந்துடும் என்று அட்வைஸ் செய்கிறார், இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி விடவும் பலரும் திவாகருக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டார்கள். இப்படியா அநாகரீகமாக பேசுவது என்று கம்ருதீனை வெளுத்து வருகிறார்கள்.
ஆளை பார்த்து சாப்பாடு
அதேபோல திவாகரை வீட்டிலுள்ள திட்டுவது போல மற்றொரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது,. சபரியிடம் திவாகர், நியாயம்னு ஒன்னு இருக்கு.. நல்லா சாப்பிட்றவங்க கூட சாப்பிடமாட்டாங்க. என்ன மாதிரி எல்லாரும். வாயைத் திறந்து கேக்கமாட்டாங்க என்றார்.
அதற்கு வினோத், சாப்பாடு மீதியாகிவிட்டால் சாப்பிட்டுக் கொள்ளலாமா? என்றார். அதற்கு திவாகர் மீதமான பிறகு சாப்பிட்டு என்ன பிரயோஜனம்? பசி எடுக்கும்போதுதான் சாப்பிட வேண்டும் என்றார்.
உடனே சபரி இன்னும் 7 பேர் சாப்பிடல, நீ சாப்பிட்டியா? இல்லையா? என்று எஃப்.ஜே.விடம் கேட்க, அவங்க தனிப்பட்ட வஞ்சகத்தை சாப்பாட்டில் காட்டுகிறார்கள்.
கூடும் சப்போர்ட்
ஆளை பார்த்து சாப்பாடு வைக்குறாங்க என்று திவாகர் கொதிப்புடன் கூறுகிறார், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு திவாகர் மீதே மீண்டும் பரிதாபம் வந்துவிட்டது. ஆரம்பத்திலிருந்தே திவாகர் ஓரங்கட்டப்படுவதை பலரும் விரும்பவில்லை. மேலும் சாப்பாட்டு விஷயத்தில் இப்படியெல்லாம் சில்லியாக இருக்க கூடாது என்றெல்லாம் அனுதாபம் தெரிவித்து வருகிறார்கள்












Click it and Unblock the Notifications