அந்த இரவு அப்படி பண்ணிருக்க கூடாது.. நானும் நிக்ஸனும் இப்படித்தான் நினைத்தோம்! ஐசு ஓப்பன் அப்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஐசு சமீபத்தில் பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் நடந்து கொண்ட விதம் குறித்து பீல் பண்ணி பேசி இருக்கிறார். அதிலும் நிக்ஸனோடு தான் நடந்து கொண்ட விதத்தை வெளியே வந்து பார்த்த பிறகுதான் தான் செய்த தவறு தனக்கு புரிந்தது என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்ஸன் மற்றும் ஐசு இருவரும் நெருக்கமாக இருந்தது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அதிலும் கண்ணாடியில் இவர்கள் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொண்டது .அதற்கு பிறகு நிக்ஸன் ஐசுவின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தது போன்றவை குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் முதல் முறையாக அது குறித்து ஐசு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு சீசன்களாக உலகமெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த ஏழாவது சீசனில் ஹார்ட் டாபிக்காக இருந்தது ஐசு மற்றும் நிக்ஸன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நார்மலாக இருந்த நிலையில் நாட்கள் போகப்போக ஐசு விடம் நிக்சன் வரம்பு மீறி நடந்து கொண்டது மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்திருந்தது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் கழித்த பிறகு ஐசு ஒரு தனியார் சேனலுக்கு தன்னுடைய அனுபவங்களை விளக்கி இருக்கிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கலந்து கொள்ள போகிறேன் என்று சொன்னதும் என்னுடைய பெற்றோர் ரொம்பவே எதிர்த்தார்கள். ஆனால் அப்போது எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்த பிறகு அந்த நிகழ்ச்சியை பற்றி நன்றாக புரிந்து கொண்டேன்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும்போது நிக்ஸனோடு விளையாடியது எனக்கு தவறாக எந்த இடத்திலும் தெரியவில்லை. காரணம் நிக்ஸனை பொருத்தவரையில் அவருக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது போல நிக்ஸன் மிகவும் திறமையான மனிதர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நானும் சரி நிக்ஸனும் சரி ஒருவரை ஒருவர் எங்கள் விளையாட்டை கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நான் எவிடிட்டாகி வெளியே வந்த பிறகு சில எபிசோடுகளை பார்த்த பிறகு தான் புரிந்தது.
இனிமேல் அந்த ஒரு விபரீதம் எங்கள் வாழ்க்கையில் நடக்காது என்று நிக்ஸன் பற்றிய வதந்திகளுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்றும் தெளிவாக ஐசு கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எனக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நடந்த ஒரு சண்டையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நாள் இரவு அந்த சண்டை நடந்தது. அதில் நான் என்னுடைய வாய்ஸை ஓவராக உயர்த்தி சத்தம் போட்டு பேசினேன்.
பொதுவாக நான் சத்தமா பேசினால் எங்க அம்மாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அங்கு நான் அப்படி பேசி விட்டேன். இதையும் டிவியில் பார்க்கும்போது எனக்கே என்னை பிடிக்கவில்லை. அதனால் எனக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்தால் நான் அந்த இரவில் நடந்ததை கண்டிப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என அந்த பேட்டியில் ஐசு பேசியிருக்கிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications