அமீர் - பாவனி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கலையே
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக அளவில் பாப்புலரான பாவனி மற்றும் அமீர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியால் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சூப்பர் ஜோடி வெளியிட்ட தகவலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறது.

பிக் பாஸில் உருவான காதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒவ்வொரு சீசனிலும் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்ற மாதிரி காட்சிகள் நடைபெற்ற விடுகிறது. அதுபோலத்தான் ஐந்தாவது சீசனில் சின்னத்திரை நடிகையான பாவனியை காதலிக்கும் செய்தியை அமீர் கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார். சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாவனி பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

அமீருடைய என்ட்ரி
பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அவருடைய ரசிகர்கள் அதிக அளவில் அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். அதுவும் ஆரம்பத்தில் அவருடைய சோக கதையை கேட்ட பல ரசிகர்கள் பாவனியின் மீது தீராத அன்பை பொழிய தொடங்கி விட்டார்கள். ஆனால் ஆரம்பத்தில் தாமரையோடு நட்பாக இருந்த பாவனி காயின் எடுக்கும் டாஸ்க்கில் தாமரையிடம் நடந்து கொண்டது சரியில்லை என்று கூறி பலர் பாவனிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அந்த நேரத்தில்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வையில்ட் கார்ட் என்ரியாக அமீர் என்று ஆனார்.

பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸில் வெற்றி
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆனதும் அமீர் பாவனியை அதிகமாக கேரிங் எடுத்துக்கொண்டு பார்த்ததை பார்த்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வந்தனர். இந்த நிகழ்ச்சியை நன்றாக பார்த்துவிட்டு அனுதாப ஓட்டுக்களை பெறுவதற்காக பாவனியின் பின்னாடி அமீர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கூறி வந்தனர். ஆனால் அமீர் தான் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார். அதற்கு பாவனி சம்மதம் தெரிவிக்காமல் அமீரை தம்பி என்று அழைத்து வந்தார். இந்த சீசன் முடிவடைந்த பிறகு மீண்டும் பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாவனி மற்றும் அமீர் வெற்றியும் பெற்றுள்ளனர்.

மகிழ்ச்சியான செய்தி
பிக் பாஸ் ஜோடி டான்ஸில் வெற்றி பெற்ற பிறகு பாவனி, அமீரின் காதலை ஏற்றுக் கொண்டு தன்னுடைய காதலை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது எங்கே சென்றாலும் இந்த ஜோடி ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அமீர் மற்றும் பாவனி சேர்ந்து புதியதாக ஆடி கார் வாங்கி இருக்கின்றனர். அமீர் மற்றும் பாவனி இருவரும் ஆடி கார் முன்பு இருக்கும் புகைப்படத்தை அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் பதிவிட்டு இருவருக்கும் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் அமீர் மற்றும் பாவனி இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications