பிக் பாஸ் ஷாரிக் மனைவி போட்ட போஸ்ட்.. “மிஞ்சி போனால் மரணம்..! உருக்கமான கேப்ஷன்! இதுதான் காரணமா?
சென்னை: தமிழ் திரையுலக பிரபலங்களான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியரின் மகனும், 'பிக் பாஸ்' போட்டியாளருமான ஷாரிக் ஹாசன், தன்னைவிட மூத்தவரும், ஏற்கெனவேத் திருமணமாகி ஒரு மகளுக்குத் தாயாக இருந்தவருமான மரியா ஜெனிஃபரை மணந்தது கோலிவுட்டில் அப்போது பெரிய பேசுபொருளாக இருந்தது. விமர்சனங்களைப் புறந்தள்ளி, காதல் தான் முக்கியம் என்று நிரூபித்துவரும் இந்தத் தம்பதியினர், தற்போது நெருக்கமானப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

ஷாரிக் - மரியா: காதல் ஒரு விவாதம்
ஷாரிக் ஹாசன் சிலப் படங்களில் நடித்திருந்தாலும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் இவருக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. தன்னைவிட மூன்று வயது மூத்தவரான மரியாவை, ஒரு வருடத்திற்கும் மேலாகத் துரத்தித் துரத்திக் காதலித்து ஷாரிக் திருமணம் செய்தார். மரியாவுக்கு ஏற்கெனவேத் திருமணமாகி, ஒன்பது வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையிலும், ஷாரிக் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் மரியாவை மணந்தார்.
விமர்சனங்கள்
இந்தக் காதல், ஒருபுறம் 'காதலுக்குக் கண் இல்லை' என்றுப் பாராட்டுகளைப் பெற்றாலும், "ஷாரிக்குக்குத் திருமணம் ஆகாதப் பெண் கிடைக்கவில்லையா?" என்றும், வரதட்சணைக்காகவே திருமணம் செய்ததாகவும் சில தரப்பினர் விமர்சனங்களை எழுப்பினர். ஆனால், இந்தப் பெரிய விவாதங்களுக்கு நடுவே, ஷாரிக்கின் பெற்றோர்களான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் ஆகியோர் முன்னின்று, இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணத்தைச் சென்னையில் பிரம்மாண்டமாகக் கோலாகலமாக நடத்தி வைத்தனர்.
திருமணத்திற்கு பின் தொடரும் பாசம்
திருமணத்திற்குப் பிறகு ஷாரிக் அளித்தப் பேட்டியில், தனதுத் திருமணம் எளிமையாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகவும், ஆனால் தனதுப் பெற்றோர்கள் அதை மிகவும் பிரம்மாண்டமாக்கிவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் தொடர்ச்சியானத் தேனிலவுப் பயணங்களை மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
தத்துவமான கேப்ஷன்
இந்நிலையில், கணவர் ஷாரிக் உடன் இணைந்து நெருக்கமானப் புகைப்படங்களை வெளியிட்டு மரியா போட்டுள்ளப் போஸ்ட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. "வாழ்க்கை வாழ வெட்கப்படலாமா": ஷாரிக் மற்றும் மரியா கூட்டாகச் சேர்ந்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "ஆனால் மிஞ்சிப் போனால் மரணம் என்ற போது... வாழ்க்கை வாழ வெட்கப்படலாமா...!" என்ற செமத் தத்துவமானக் கேப்ஷனைப் பதிவிட்டுள்ளனர்.
குடும்பப் பாசம்
முன்னதாக, ஷாரிக் தனது முதல் மகள் தன்னுடைய உயரத்துக்கு வளர்ந்துவிட்டதாகச் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்தத் தம்பதி, விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், திருமணத்திற்கு முன்னும் பின்னும் தங்களுக்குக் காதல் தான் முக்கியம் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
காதலுக்கும், பாசத்திற்கும் வயது, உறவுச் சிக்கல்கள் தடை இல்லை என்பதைத் தொடர்ந்து நிரூபித்துவரும் ஷாரிக்-மரியா தம்பதிக்கு ரசிகர்கள் லைக்குகளையும், ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications