விஜய் சேதுபதி கை, காலை கட்டி போட்டு பார்க்க சொல்லணும்..பிக் பாஸை இதோடு நிறுத்திக்கோங்க! பிரபலம் குமுறல்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடர்பான எதிர்பார்ப்புகள் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே குறைந்து விட்டது என்பதுதான் யதார்த்தம். கடந்த 8 சீசன்களாக பிக்பாஸை வெறித்தனமாகப் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் பலருமே இந்தச் சீசனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும், பிக் பாஸ் விமர்சகருமான ஃபேட் மேன் ரவீந்தர் இந்த சீசனை கலாய்த்தும், விமர்சித்தும் பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களின் மனக்குமுறலின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

ரவீந்தரின் கலாய்
ஃபேட் மேன் ரவீந்தர் இந்த வார பிக்பாஸ் காட்சிகளைப் பார்த்துத் தன்னுடைய விமர்சனத்தைப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த விமர்சனம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் கூறும்போது, "யாரு சாமி இவர்கள் எல்லாம், எங்கிருந்து இந்தப் போட்டியாளர்களைக் கண்டுபிடித்தீர்கள்" என்று கேலிப் பேசியுள்ளார்.
ஏதோ ஒரு இடத்தில் நாம் செய்வது நமக்கே அசிங்கமாக இருக்கும், ஆனால் அனைத்துப் போட்டியாளர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்" என்று சாடியுள்ளார். நிகழ்ச்சிக்கு "ஹாட்ஸ்டார் பணம் கட்டிப் பார்ப்பதற்கு பதிவு செய்தவர்களுக்கு எல்லாம் 5 கிலோ பாசுமதி அரிசி, 10 தலைவலி தைலம், காதுக்கு வைக்க பஞ்சு உள்ளிட்டவற்றைப் பிக்பாஸ் தரப்பில் இருந்து கொடுக்க வேண்டும்" என்று நிகழ்ச்சியைக் கடும் நகைச்சுவையுடன் கலாய்த்துள்ளார்.
ரவீந்தர் தொடர்ந்து பேசும்போது, தொகுப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் முன்னாள் தொகுப்பாளர் கமல் ஹாசன் பற்றியும் சில சுவாரசியமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பது அவ்வளவு சவாலாக உள்ளது. விஜய் சேதுபதியை கை, காலை கட்டிப் போட்டு, இடைவெளி விடாமல் நேரலையை பார்க்க வைத்திருக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.
இந்தச் சீசனுடன் விஜய் சேதுபதி ஓய்வு பெறுகிறாரோ இல்லையோ, இந்தச் சீசனுடன் நாம் ஓய்வு ஆகிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன் என்று ரசிகர்களின் மன நிலையைத் தெரிவித்துள்ளார். அதோடு நல்ல வேளை கமல் ஹாசன் சார் எல்லாம் தப்பித்துக் கொண்டார். அவர் இதுபோல எல்லாம் நடக்கும் என்று தெரிந்து கொண்டுதான் முன்னரே வெளியேறிவிட்டார் என்று ரசிகர்களின் மனக்குமுறலையும் பதிவு செய்து இருக்கிறார்.
இந்தச் சீசனில் ஆரம்பத்தில் களமிறக்கப்பட்ட போட்டியாளர்கள், வைல்டு கார்டு போட்டியாளர்கள், அதன் பின்னர் வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பபட்ட ஆதிரை என மொத்தப் போட்டியாளர்களும் ரசிகர்களைத் தொடர்ந்து ஏமாற்றமடையச் செய்து வருகிறார்கள். ஆதிரையை உள்ளே அனுப்பி இரண்டாவது வாய்ப்பு கொடுத்ததற்குப் பதிலாக வெளியேறிய பிரவீன் ராஜுக்கு அந்த இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
இந்த சீசன் சரியாக இல்லாததற்குப் போட்டியாளர்களின் தரம் சரியில்லாததுதான் காரணம் என்று ஒரு தரப்பினரும், சேனல் மீதுதான் முதல் தவறு என்று சிலரும், பிக்பாஸ் அதிகமான விதிமுறைகளை கடுமையாக்காதது தான் தவறு என்று ஒரு சாராரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications