Bigg Boss Julie: பிக் பாஸ் ஜூலியின் கணவர் இவர்தானா? போஸ்டால் கசிந்த ரகசியம்! இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் நெகட்டிவ் பிரபலம் அடைந்த ஜூலியை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்களால் மறந்திருக்க முடியாது. இப்போது ஒன்பதாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் ஜூலி பெயரை கேட்டதுமே பிக் பாஸ் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும் அளவிற்கு தான் அவர் பிரபலமாக இருந்தார். அதற்கு முன்பு அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அடைந்த பிரபலத்தை விடவும் பிக் பாஸ் இவருக்கு வேற லெவலில் பிரபலம் கொடுத்து விட்டது.
சோசியல் மீடியா ஒருவரை வாழவைக்கும், சிலரை தாழவும் வைக்கும். அதேபோல ஜூலியை ஆரம்பத்தில் அதிகமாக ரவுண்டு கட்டி அடித்து வந்த ரசிகர்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை ஐயோ பாவம் என்று பரிதாப பட வைத்து விட்டார்கள். செவிலியரான ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இப்போது இருக்கிற மாதிரி அப்போது சோசியல் மீடியா பயன்பாடு இல்லை என்றாலும் செய்தி சேனல்களில் இவருடைய முகம் தான் பிரதிபலித்தது. அதன் பயனாகவே அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீசனில் தான் முதல் முறையாக தமிழில் நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களுமே நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்கள் என்று ரசிகர்களுக்கு தெரிந்தவர்கள். ஆனால் சினிமா பின்புலமும், நடிப்பும் எதுவும் இல்லாத ஜூலி முதல் சீசனில் ஓவியாவோடு நடந்த சண்டை பிரச்சனைகள் காரணமாக அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார்.
தன் பெயர் நெகட்டிவ்வான இடத்திலேயே மீண்டும் தன்னுடைய பெயரை சரி செய்து கொள்வதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு ஐயோ பாவம் ஜூலி ரொம்ப மாறிட்டாங்க என்று சொல்ல வைத்து விட்டார். அதற்கு பிறகு சோசியல் மீடியாவில் போட்டோ சூட் மூலமாக இளம் கதாநாயகி போல வளம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு ஒரு சில திரைப்படங்களிலும் விஜய் டிவியில் ஒரு சில சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சமீபத்தில் அவர் எதிலும் தலைகாட்டாமல் இருந்த நேரத்தில் தான் தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் தன்னிடம் பணம் மோசடி செய்து விட்டதாக போலீஸ் புகார் கொடுத்து இருந்தார்.
அதற்கு பிறகு சிங்கிளாகவே வலம் வந்த ஜூலி இப்போது தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை பகிர்ந்து "என் முழு உலகையும் அர்த்தமுள்ளதாக்கும் மனிதன் மீது அதிகபற்று இருக்க முடியாது. நான் பிரார்த்தித்த அனைத்தும் அவன் தான். இப்போது அவன் எப்போதும் என்னுடையவன்.. மோதிரம் பாதுகாக்கப்பட்டது! மனம் நிறைந்தது, அவரைப் பார்க்கும்போது வரை காத்திருங்கள்!" என்று குறிப்பிட்டு தன்னுடைய வருங்கால கணவரின் முகத்தையும், பெயரையும் வெளி காட்டாமல் போஸ்ட் போட்டு இருந்தார்.
எதற்காக இவர் தன்னுடைய எங்கேஜ்மென்ட்டை இப்படி ரகசியமாக வைத்திருக்கிறார்? ஒருவேளை இவருக்கு எங்கேஜ்மென்ட் முடிந்து விட்டதா? அல்லது இவர் ஏதேனும் சூட்டிங்கில் இருக்கிறாரா? என்று கூட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் திரை பிரபலங்கள் பலரும் ஜூலிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் ஜூலியின் வருங்கால கணவர் பெயர் மாலிக் அல்லது முகமது என்ற பெயரில் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் ஜுலி வெட்டிய கேக்கில் எம்ஜே (MJ) என்று எழுத்து பதிக்கப்பட்டிரக்கிறது அதில் ஜூலிக்கு J என்ற முதல் எழுத்தும், M என்பது அவருடைய வருங்கால கணவரின் பெயராக கூட இருக்கலாம் என்பது பலருடைய கெஸ் ஆக இருக்கிறது.
அதோடு அந்த போஸ்டுக்கு நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் இடம்பெற்ற மெஹரசைலா என்ற பாடலை வைத்திருக்கிறார். அதனால் மாநாடு படத்தில் சிம்புவின் பெயர் மாலிக் என்பதால் ரசிகர்கள் இதுதான் ஜூலியின் கணவரின் பெயராக இருக்கும் என்று கெஸ் பண்ணி இருக்கிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications