பிக் பாஸ் 8: ராணவிற்கு கையில் வலி ஏற்பட காரணம் இதுதானா? அப்போ ஜெஃப்ரி? ஆனாலும் இவ்வளவு அலட்சியமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் கையில் அடிபட்டு வலியில் துடிக்கிறார். அவருக்கு என்ன நடந்தது? அவர் பக்கத்தில் இருந்த சிலர் கூட அவருக்காக உதவாத காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ராணவ் மருத்துவமனையில் சேர்த்து இருக்கும் செய்தி தான் இணையத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது. காரணம் 4 வருடங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ராணவ் பெரிய முயற்சி செய்திருந்தார்.

அதிலும் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் இவர் தேர்வாகி இருந்தாராம். இவரிடம் பயோ வீடியோ எல்லாம் ஷூட் செய்த பிறகு இவர் சில காரணங்களால் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது. அதற்கு பிறகு தன்னுடைய விடாமுயற்சியால் இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக ராணவ் அறிமுகமாகி இருந்தார்.
ஆனால் உள்ளிருந்த போட்டியாளர்கள் பலர் ராணவை ஒதுக்கி வைத்து தான் விளையாடி வருகிறார்கள். ராணவ்க்கு எது சொன்னாலும் புரியவில்லை, அவர் கூமுட்டை என்றெல்லாம் சௌந்தர்யா உட்பட ஒரு சிலர் ராணவ் முகத்துக்கு நேராகவே திட்டி அவமானம் செய்கிறார்கள்.
ஆனாலும் எனக்காக நான் தான் விளையாடனும், எனக்காக நான் தான் குரல் கொடுக்கணும் என்று ஒவ்வொரு இடத்திலும் ராணவ் விளையாடிக் கொண்டிருக்கிறார். சில இடங்களில் அவர் பேசுவது சொதப்பலாக முடிந்தாலும் பல இடங்களில் அவருடைய தன்னம்பிக்கை பாராட்டும் வகையில் தான் இருக்கிறது.
தற்போது வெளியான ப்ரோமோவில் ராணவ் வலியில் துடிப்பதை பார்த்து பலரும் பீல் பண்ணி வருகிறார்கள். இந்த காட்சிகள் இன்னும் 24 மணி நேர எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. ஆனால் சம்பவம் நேற்று இரவே நடைபெற்று இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த காட்சிகள் இன்று மதியத்திற்கு மேலே தான் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறது. இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்கில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை வழக்கம் போல ராணவ் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு டாஸ்க்குகாக ரெடியாகி கொண்டிருக்கிறார்.
சௌந்தர்யா அப்படி பேசலாமா? நெஞ்சு வலியே வந்துடுச்சு! பிக் பாஸிடம் போன் பண்ணி.. ராணவ் அம்மா ஓபன்
கார்டன் ஏரியாவில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கொடுக்கப்பட்ட கற்களை போட்டியாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க் போல தெரிகிறது. அதில் பவித்ராவிடம் இருக்கும் கற்களை எடுப்பதற்காக ராணவ் முயற்சி செய்கிறார். அப்போது ராணவை ஜெஃப்ரி பிடித்து கீழே தள்ளுகிறார்.
அதில் ராணவின் சோல்டரில் அடிபட்டு இருக்கிறது. அதை பார்க்கும்போது ராணவ் தோள்பட்டை இறங்கி இருப்பது போல தான் தெரிகிறது. பொதுவாக விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு இதுபோல கை தோள்பட்டை பகுதி இறங்குவது தெரிந்திருக்கும். அதிலும் கபடி போன்ற விளையாட்டுகளில் விளையாடுபவர்களுக்கு இந்த வலி அடிக்கடி வந்திருக்கும். சோல்டர் இறங்கிவிட்டது என்று சொல்வார்கள்.
அது போல தான் ராணவிற்கு நடந்திருப்பது போல தெரிகிறது. ஆனாலும் ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த எல்லோரும் ராணவ் ஏமாற்றுகிறார், நடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் கதறுவதைக் கூட அவர்கள் கண்டு கொள்ளவில்லை
ஒருவேளை ஜெஃப்ரி ராணவை அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை என்றாலும் கூட ஒருவர் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது சுற்றி இருந்த எல்லா போட்டியாளர்களுக்கும் விளையாட்டு மட்டும்தான் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அதனால் தான் யாரும் ராணவை கண்டுகொள்ளவில்லை.
பிறகு வெளியில் இருந்து அருண் ஓடி வந்து ராணவை தூக்குகிறார். அவரோடு சேர்ந்து விஜே விஷாலும் உதவிக்கு வந்து இருக்கிறார். அப்போது கூட பக்கத்தில் இருந்த பவித்ரா, சௌந்தர்யா, அன்ஷிதா என யாரும் உதவி செய்யவில்லை. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications