சிங்கிள் அம்மாவா போராடி குழந்தையை வளர்க்குறாங்க.. பிக் பாஸில் கஷ்டம்! மஞ்சரியின் குடும்பம் உருக்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த மஞ்சரியிடம் சிலர் கடுமையாக நடந்து கொள்வது குறித்து அவருடைய சகோதரி வருத்தமாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதனால் ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே இறக்கப்பட்டனர்.

அவர்களும் விஜய் டிவியை சார்ந்தவர்கள் தான். ஆனாலும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு டப் போட்டியாளர்களை இறக்க வேண்டும் என்று ஆறு பேரை களம் இறக்கி இருந்தனர். ஆனால் வைல்ட் கார்டில் வந்த மூன்று போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியே சென்று விட்டனர். அதில் வைல்ட் கார்டில் வந்து உள்ளிருக்கும் போட்டியாளர்களுடன் அதிகமாக வாக்குவாதத்தில் மஞ்சரி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
மஞ்சரி முத்துக்குமரனுக்கு போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் கடந்த வாரத்தில் மஞ்சரியிடம் நடந்து கொண்ட விதம் குறித்து இணையத்தில் பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். விஜய் சேதுபதி கூட சௌந்தர்யாவை திட்டி இருந்தார்.
பிக் பாஸ் 8: இரண்டாவது முறையாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனா.. இத்தனை லட்சம் சம்பளமா?
அதுபோல மஞ்சரிக்கு எதிராக சில போட்டியாளர்கள் நடந்து கொள்வது குறித்து அவருடைய சகோதரி பேசுகையில், எங்க வீட்டில் மூத்த பொண்ணு மஞ்சரி அக்கா தான். எங்க அம்மா ஸ்கூல் டீச்சர். அதுபோல அப்பாவுக்கும் தமிழில் நல்ல ஆர்வம் இருந்ததால் அக்கா படிக்கிறப்பவே கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் என்று பலவற்றில் கலந்து கொண்டார்.

அதனால் பிடெக் ஐ டி படிச்சாலும் மீடியா பக்கம் வந்து சேர்ந்தார். ஆரம்பத்தில் கேப்டன் நியூஸ் சேனலில் நியூஸ் ரீடராக கொஞ்சம் நாட்கள் வேலை பார்த்து பிறகு ஐடிக்கு போயிருந்தார். ஆனால் மீண்டும் மீடியாவில் வரவேண்டும் என்று யோசித்த போது தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் திரு. ஞானசம்பந்தன், ராஜா அவர்களின் பட்டிமன்றத்தில் பேசிக் கொண்டிருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு தானாக கிடைத்தது. முத்துக்குமரனுக்கு டப் கொடுக்கிற மாதிரி ஒரு ஆள் வேணும்னு எங்க அக்காவ செலக்ட் பண்ணுனதா தான் சொன்னாங்க.
அதுபோல எங்க அக்கா வீட்டில் மூத்த பொண்ணு எங்கறதால இயல்பாகவே அவங்க கிட்ட ஒரு பொறுப்புணர்வு இருக்கும். அது தவிர விவாகரத்து ஆகிட்ட பிறகு சிங்கிள் மதரா குழந்தையை வளர்த்து வர்ற சூழலில் அவங்க போல்டா பேசுறது சிலர் திமிருன்னு நினைச்சுட்டு இருக்காங்க.

மஞ்சரி வெளியில இருக்கிற மாதிரி தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். ஸ்ட்ராங்கான போட்டியாளரா இருக்கிறாங்க. இவங்கள பார்த்து பயம் உருவான போட்டியாளர்கள் தான் இவங்களை ஒரு போட்டியா பாக்குறாங்க என்று பேசி இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications