Bigg Boss: அத்துமீறிய பார்வதி- கம்ருதீன்! பிக் பாஸ் கொடுத்த தண்டனை? விஜய் சேதுபதியை இப்படி கிழிக்கிறாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் ரூல்ஸை மீறி நடந்து கொண்ட செயலை வைத்து தான் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதிகமான ட்ரோல் வருவதை பார்த்ததும் காண்டான பிக் பாஸ் தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே பார்வதி தான் ஒவ்வொரு ப்ரோமோவிலும் முகத்தை காட்டும் நபராக இருக்கிறார். பார்வதி இல்லாத ப்ரோமோ இருக்கிறதா? என்றால் விரல் விட்டு என்னும் வகையில் தான் இருக்கிறது. அதனால் பார்வதி என்ன செய்தாலும் அவரை வீட்டிற்குள்ளே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகிவிடுவார்கள். ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் முக்கோண காதலாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பார்வதி, அரோரா மற்றும் கம்ருதீன் மூவரும் ஒரு பக்கமாக ஒரு டிராக்கில் பயணிக்கிறார்கள். அதுபோல எஃப்ஜே, ஆதிரை, அரோரா என்று இன்னொரு பக்கமும் ஒரு காதல் சுற்றிக் கொண்டிருந்தது.
அதில் ஆதிரை வெளியேற்றப்பட்டதும் இப்போது அலர்ட் ஆகிவிட்டார். அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து நான் எஃப்ஜேவை பழிவாங்கியே ஆவேன் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் பலர் ரூல்ஸை மதிப்பதே இல்லை.
அதிலும் பார்வதியை சொல்லவே வேண்டாம், என்ன வேணாலும் செய்து கொண்டு விஜய் சேதுபதி முன்பு ஐயோ பாவம் என்பது போலவே சிரித்து சமாளித்துக் கொள்வார். ஆனால் விஜய் சேதுபதி என்னதான் திட்டிக் கொண்டிருந்தாலும் பார்வதி தன் கேரக்டரை கொஞ்சம் கூட மாற்றுவது போல இல்லை. பிக் பாஸ் கூட பல நேரங்களில் இவர்களிடம் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக தான் ரூல்ஸை மதிக்கும்படி கெஞ்சி கொண்டிருக்கிறார்.
சில நேரங்களில் தன்னுடைய அதிருப்தியையும் தெரிவிக்கிறார். ஆனாலும் எல்லோரும் அப்போதைக்கு தலையை குனிகிறார்கள் தவிர அதற்கு பிறகு தங்களுடைய வழக்கமான வேலைதான் தொடர்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே பார்வதி கம்ருதீன் இருவரும் மைக்கை மறைத்து பேசுவது, மைக்கை கழட்டி வைத்து பேசுவது போன்றவற்றை செய்து வருகிறார்கள் இதனால் பிக் பாஸ் வார்னிங் கொடுத்த கொடுத்திருந்தார். ஆனாலும் இவர்கள் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார்கள்.
நேற்று இரவு கூட பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதியிடம் கம்ருதீன் நீ வெளியே போன பிறகு என்கிட்ட பேசுவியா? இல்ல ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுவிடுவியா என்று கேட்க அதற்கு பார்வதி மைக்கை கழட்டி கீழே விட்டு விட்டு நீயும் மைக்கை ஆஃப் பண்ணு என்பது போல சைகை காட்டுகிறார்.
பிறகு கம்ரூத்தின் பேச, அதற்கு பிக் பாஸ் பார்வதி உங்களுடைய மைக்கை சரியாக மாட்டுங்க என்று வார்னிங் கொடுக்க உடனே சிரித்து சமாளிக்கிறார் பார்வதி. ஆனாலும் இன்று கூட இவர்கள் இதையே திரும்ப செய்திருக்கிறார்கள். இதனால் கடுப்பான பிக் பாஸ் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் மீண்டும் மைக்கை மூடி பேசுவது மைக்கை கழட்டி வைத்து பேசுவதாக செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தண்டனை கொடுக்க போகிறேன் என்று வீட்டில் இருக்கும் பால், முட்டை, காபி பவுடர் போன்ற எல்லாவற்றையும் கிச்சனிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.
இதை பார்க்கும் ரசிகர்கள் இவர்கள் செய்யும் செயலுக்கு நேரடியாக அவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் இது என்ன மற்ற போட்டியாளர்களுக்கு சேர்த்து கொடுக்கிறார்கள். விஜய் சேதுபதி ஒவ்வொரு விஷயத்தையும் அடையாளப்படுத்துகிறார் ஆனால் இவர்கள் இப்படி மைக்கை மறைத்து பேசுவதை பேசுவதற்கு ஏன் பயப்படுகிறார்? முதுகு எலும்பு இல்லாமல் செயல்படுகிறார் என்றெல்லாம் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications