Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: மிரட்டிய பேப்பர் ரவுடி பிரஜன்! மாஸ் காட்டும் விக்கல் விக்ரம்.. பிக் பாஸ்ஸை விட்டு வெளியே போவது இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வெற்றி பெறுவார் என்று யூகிக்க முடியாத வகையில் தான் போட்டியாளர்களின் விளையாட்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுகளே முதன்மையாக இருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பிறகு விளையாட்டு வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாங்களும் இதே தான் செய்யப் போகிறோம் என்று உள்ளே வந்த நான்கு வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

அதிலும் இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடக்காத ஒரு அதிசயம் தற்போதைய ஒன்பதாவது சீசனில் நடந்தது. அதாவது இந்த சீசனில் தான் கணவன் மனைவி போட்டியாளர்களாக இந்த வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்குள் வரும்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் கூட்டணியை உடைப்போம் அவர்களுடைய உண்மையான முகத்தை வெளியே கொண்டு வருவோம் உள்ளே இருக்கும் குப்பை எல்லாம் வெளியே அள்ள போறோம் என்றெல்லாம் டயலாக் பேசிய பிரஜன் மற்றும் சான்ட்ரா தம்பதி தான் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்கள். இருவரும் அதிகமாக ஆட்டிட்யூட் காட்டுகிறார்கள் என்பது பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அதாவது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக சுவாரசியம் ஏற்படுத்தாதவர்கள் என்று சான்ட்ரா மற்றும் பார்வதி இருவரையும் தேர்வு செய்திருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் தான் இந்த நாள் முழுக்க வேலையை செய்துவிட்டு அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார். அதை கவனிக்கும் பொறுப்பை விக்கல் விக்ரமுக்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சான்ட்ரா உடைத்த பூண்டின் தோல் கிச்சனுக்குள் கிடைக்கிறது என்று சான்ட்ராவிடம் விக்ரம், கிளீன் பண்ண சொல்ல அதற்கு சான்ட்ரா துடைப்பம் இல்லாமல் என்னால் கிளீன் பண்ண முடியாது என்று வாக்குவாதம் செய்கிறார்.

அதற்கு விக்ரம் கையால் உடைத்து போட்ட பூண்டு தோல் தானே கையாலே எடுக்கலாம் என்று சொல்ல, அதற்கு சான்ட்ரா கோபமாகி திட்டுகிறார். இந்த பஞ்சாயத்தை விக்ரம் பிரஜனிடம் வந்து சொல்கிறார் உடனே கோபமான பிரஜன் நீ இந்த விஷயத்தை எல்லாம் என்கிட்ட கொண்டுட்டு வரக்கூடாது. உனக்கு நானும் என் பொண்டாட்டியும் இங்கே இருக்கிறது வருத்தமா இருக்குன்னா நீ பிக் பாஸ் கிட்ட சொல்லிட்டு இப்பவே கதவை திறந்து வெளியே போய் உன் மனைவியை கூட்டிட்டு வந்து விளையாடு, நாங்க அதை தப்புன்னு சொல்ல மாட்டோம் என்று திமிராக பேசுகிறார்.

அதோடு அவர் லைவில் விக்ரமை அடித்து விடுவேன், மிதித்து விடுவேன் என்பது போன்று மிரட்டும் தோணியில் பேசுகிறார் இதனால் ரசிகர்கள் பலரும் பிரஜன் பேப்பர் ரௌடி என்று அவரை கிண்டல் செய்து வருகின்றனர். அதோடு விக்கல் விக்ரமுக்கு இப்போது ஆதரவு அமோகமாக இருக்கிறது. இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் பிரஜன் வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் என்னதான் பிரச்சனை செய்து கொண்டு இருந்தாலும் இவர்கள் இருவரும் அதிகம் நாட்கள் இருந்தால் கண்டன்ட் அதிகமாக கிடைக்கும் அதே போல ஃபேமிலி டாஸ்க்கில் இவர்களுடைய குழந்தைகள் வரும்போது அதிகமான எதிர்பார்ப்பும் இருக்கும், என்பதற்காக இவர்கள் இருவரும் உள்ளே வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது பிரஜன் செய்யும் செயலால் அவருக்கு நெகட்டிவ் அதிகரித்து வரும் நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரஜனுடைய விளையாட்டு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+