பிக் பாஸில் டிடிஎஃப் வாசன் சொன்ன ஒரு வார்த்தை.. அரங்கத்தில் நடந்த சம்பவம்! கடுப்பான ரம்யா கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக தொகுப்பாளராக ரம்யா கிருஷ்ணன் வந்திருக்கிறார். அவர் டிடிஎஃப் வாசனிடம் கேட்ட கேள்விக்கு அரங்கத்தில் இருந்தவர்கள் செய்த செயலை பார்த்து ரம்யா கிருஷ்ணனே கடுப்பாகி இருக்கிறார். கெஸ்ட் ஆக வந்த ரம்யா கிருஷ்ணன் இந்த அளவிற்கு கடுப்பானது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த வார இறுதியில் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. காரணம் டிடிஎஃப் வாசன் செய்த சம்பவம் அப்படி. போனவாரம் டைமண்ட் டாஸ்க்கில் டைமண்ட்டை திருடி மாஸ் காட்டிவிட்டார். ஆனால் இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் திடீரென முகேஷை தள்ளி அடிக்க பாயந்துவிட்டார், அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து சமாதானம் செய்திருந்தனர். அதற்கு அவருக்கு சில போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அதிலும் லட்சுமி பிரியா இவர் இந்த நிகழ்ச்சியில் இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது, அவருக்கு கோபம் வந்துவிட்டால் யார் என்னவென்று பார்க்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் என்று பேசி இருந்தார்.

இதனால் இதற்கு முன்பு பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது போல டிடிஎஃப் வாசனுக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார்களா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே டிடிஎஃப் வாசன் விளையாட்டு தான் நிகழ்ச்சியையே சுவாரசியமாக மாற்றி இருந்தது. அதனால் இந்த வாரம் விஜய் சேதுபதி எப்படியும் இவருக்கு டோஸ் கொடுப்பார், இல்லை என்றால் மஞ்சள் அட்டை (yellow card) கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனார்.

Bigg Boss Vijay Sethupathi Ramya Krishnan

ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி

ஆனால் விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் வந்திருக்கிறார். இவரை பார்த்தாலும் இவர் என்ன மாதிரி இந்த நிகழ்ச்சியை கொண்டு போவார்? ஒருவேளை நாமே கெஸ்ட் ஆக தானே வந்து இருக்கிறோம் என்று போட்டியாளர்கள் மனம் கோணதபடி பேசப்போகிறாரா? அல்லது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வாசனுக்கு ரோஸ்ட் விடப் போகிறாரா என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தான் இப்போது மூன்று ப்ரோமா வந்திருக்கிறது.

பிக் பாஸ் ப்ரோமோ

முதல் இரண்டு ப்ரோமோவில் உப்புசப்பு இல்லை. முதல் ப்ரோமோவில் பார்த்தால் ரம்யா கிருஷ்ணனின் புடவையையும், அவருடைய கை நகங்களையும், காதனியையும் காட்டி இருந்தார்கள். இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதியின் குரலாக நான் வந்திருக்கிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் பேசுவது மட்டும் இருந்தது. 3வது ப்ரோமோவில் தான் உருப்படியாக பேசி இருக்கிறார். அதில் உள்ளிருந்த போட்டியாளர்களிடம் இந்த வாரம் நிகழ்ச்சி எப்படி இருந்தது? நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு என்ன கொடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார்.

Bigg Boss Vijay Sethupathi Ramya Krishnan

டிடிஎஃப் வாசன் சொன்ன பதில்

பிறகு டிடிஎஃப் வாசனிடம் இதே கேள்வியை கேட்டதும் அவர் எழுந்ததுமே அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டார்கள், உடனே குஷியான வாசன், நான் என்னையே இந்த நிகழ்ச்சிக்கு கொடுத்தது தான் சிறப்பு என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் சற்று கடுப்பாகுகிறார். ஆனாலும் சிரித்தபடியே நீங்க இந்த வீட்டுக்கு கிடைத்த வரம் என்று சொல்லுறீங்களா? என்று கேட்க, அதற்கு டிடிஎஃப் வாசன் கட்டியபடி ஆமாம் என்று சிரித்தபடியே, பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு கிடைத்த வரம்.. அந்த நிகழ்ச்சிக்கு நான் சின்ன வரம் என்று சொன்னதும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

பிக் பாஸ் வரலாற்றையே மாற்றிய டிடிஎஃப் வாசன்.. விஜய் சேதுபதியின் தரமான செய்கை.. இது பலருக்கு பாடம்
உடனே மொத்த கோபத்தையும் மக்களிடம் காட்டிய ரம்யா கிருஷ்ணன், நீங்க நல்லா விளையாடிட்டு இருக்குறவங்களையும் கைதட்டி குழப்பிடுறீங்க என்று சொல்கிறார். அதனால் சும்மா சும்மா கைதட்டி இவரை உசுப்பேத்தி விடாதீர்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இதனால் இன்று எபிசோடில் என்னவெல்லாம் பஞ்சாயத்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இப்போ ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+