பிக் பாஸ் வரலாற்றையே மாற்றிய டிடிஎஃப் வாசன்.. விஜய் சேதுபதியின் தரமான செய்கை.. இது பலருக்கு பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி 20வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இதுவரைக்கும் ஒளிபரப்பான எந்த சீசனிலும் நடக்காத ஒரு மாஸான சம்பவம் தான் தற்போதைய சீசனில் நடந்தது. அது டிடிஎப் வாசன் டைமண்ட் டாஸ்க்கில் விளையாடிய விளையாட்டு தான். ஆனால் நேற்று நடந்த சில விஷயம் மட்டும் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது.

ஏற்கனவே போன வாரம் விஜய் சேதுபதி டிடிஎஃப் வாசனை அசிங்கப்படுத்துவது போலவே பேசிக் கொண்டிருந்தார். லெட்டர் டாஸ்க் கூட வாசனுக்காக யாருமே லெட்டர் போடவில்லை. அது பற்றி வாசன் சொல்லும்போது கூட யாராவது ஒருவராவது எனக்காக லெட்டர் எழுதுவார்கள் என்று நினைத்தேன் என அவர் பீல் பண்ணி பேசிய போது விஜய் சேதுபதி நான் உங்களுக்கு அடுத்த வாரம் லெட்டர் எழுதுறேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல வாசன் பெயரை சொன்னதும் நிகழ்ச்சியை பார்க்க வந்த பார்வையாளர்கள் கைதட்டியதை பார்த்து கடுப்பானது போல அவர் நடந்து கொண்டார்.

TTF Vasan

பிக் பாஸ் எபிசோடு

அதனால் இந்த வாரம் விஜய் சேதுபதி வாசன் விளையாட்டை பற்றி பாராட்டுவாரா? அல்லது அதிலும் குறை கண்டுபிடித்து பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி நேற்று மாஸ் காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். டிடிஎஃப் வாசனை பாராட்டி மற்ற போட்டியாளர்களுக்கு சரியாக குட்டு வைத்திருந்தார். இது ஒரு பக்கம் என்றால் இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் டிடிஎப் வாசனிடம் அன்பாக கட்டிபிடித்து, முத்தம் கொடுத்து, கொஞ்சி வந்த ஜேசன் ரியாக்சன் தான் இப்போ இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பும் ஜேசன் இதுபோலத்தான் ஷமா எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வாங்கும் போதும் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு வேண்டாத வெறுப்பாக நின்று கொண்டிருந்தார். அதேபோல இப்போது டிடிஎஃப் வாசனுக்காக குறும்படம் போடப்பட்ட போதும் சரி, அவருக்கு நாமினேஷன் ப்ரீ டிக்கெட் கொடுக்கப்பட்ட போதும் சரி முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு கடுப்பாகவே உட்கார்ந்து இருந்தார். இதை சரியாக கவனிக்க விஜய் சேதுபதி நீங்க வாசனுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லலையே? சொல்லலாமே.. என்று கேட்க, அதற்கு ஜேசன் சொல்லிட்டா போச்சு என்று சமாளித்தபடி தான் ரியாக்சன் கொடுத்திருந்தார்.

TTF Vasan

பதட்டத்தில் ரசிகர்கள்

இந்த வாரம் டைமண்ட் டாஸ்க்கில் வாசன் விளையாட்டை ரிவைண்ட் செய்து பார்த்தவர்கள் ஏராளம். ஒரு திரில்லர் மூவியை பார்ப்பது போல தான் இருந்தது. அவர் மாட்டிவிடுவாரா...? மாட்டி விடுவாரா...? என்று பதட்டத்தோடு பார்த்தவர்கள் பலர். அதை பற்றி நடிகர் விமல் கூட பிக் பாஸ் மேடையிலேயே சொல்லியிருந்தார். நேற்று எபிசோடு ஆரம்பத்தில் இருந்தே வாசன் முகத்தை ஸ்கிரீனில் காட்டும் போதெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

பலருக்கு பாடம்

அதை விஜய் சேதுபதியும் கவனித்துக் கொண்டிருந்தார் ஒருவேளை அடுத்த வாரத்தில் வாசன் ஏதாவது சொதப்பினால் இதை வைத்தே அவரை கலாய்ப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இதுவரைக்கும் வாசனுக்கு எதுவுமே தெரியாது புரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் நேற்று அவருடைய ஆட்டத்தை பார்த்து ஆடி போய்விட்டார்கள். வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்த வாசன் விளையாட்டு வேற லெவல் என்று உள்ளிருந்த போட்டியாளர்களே தங்களுடைய தவறை உணர்ந்து வாசனிடம் மன்னிப்பு கேட்டிருந்தனர்.

அதிலும் அக்ஷிதா தன்னுடைய தவறை உணர்ந்து காலில் விழுவது போல வாசனிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அஸ்மிதா, லட்சுமி பிரியா, ஜெய் சன் மூன்று பேருடைய முகமும் தான் இருள் அடித்தது போல இருந்தது. ஒருவரை பார்த்தவுடன் இவருக்கு எதுவும் தெரியாது, இவர் இப்படித்தான்.. என்று நாமாக யார் மீதும் முத்திரை குத்த கூடாது என்பதுதான் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கு பாடமாக அமைந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+