ரெட் கார்ட் கொடுக்கப்படும் போட்டியாளர்! எச்சரிக்கை கொடுத்த பிக் பாஸ்.. இணையத்தில் லீக்கான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று அமுதவாணன் பற்றிய ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

24 மணி நேர எபிசோட்டில் அமுதவாணன் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் அதிர்ச்சியாக இருக்கின்றனர்.

பல கேமரா இருக்கும் நிலையிலும் குளியலறையில் அமுதவாணன் நடந்து கொண்ட விதத்தை பார்த்து ரசிகர்கள் பலர் நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மாறிப்போனது கேரக்டர்

மாறிப்போனது கேரக்டர்

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் அமுதவாணன பாத்ரூம் உள்ளே கதவின் இடுக்கின் வழியாக பார்த்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் எச்சரித்ததும் அமுதவாணனின் நடவடிக்கை மாறி போனதை வைத்து இவர் இவ்வளவு மோசமானவரா என்று பலர் கலாய்த்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இதுவரைக்கும் ஆரம்ப காலகட்டத்தில் அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமெடி செய்து கொண்டு ஜாலியாக இருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய உண்மை முகம் தெரிய வந்துவிட்டது என்று ஒரு சில வாரங்களாகவே அவருக்கு நெகட்டிவ் கருத்துக்கள் அதிகரித்து வருகிறது.

நினைத்தது நடக்காது போல

நினைத்தது நடக்காது போல

ஒரு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பிரபலமாகவும் இருக்கும் அமுதவாணன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் இந்த நிகழ்ச்சியில் காமெடியாக கொண்டு சென்று கடந்த சீசனில் ராஜு டைட்டில் ஜெயித்தது போல இவர் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஆரம்பத்தில் பலரும் கூறி வந்தனர். அதுவும் ஜிபி முத்துவும் இவரும் செய்து வந்த காமெடி பல நேரங்களில் ரசிக்க வைத்தது என்று அனைவரும் கூறி வந்த நிலையில் ஜிபி முத்து வெளியே சென்ற பிறகு இவருடைய நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.குறிப்பாக ஜனனியோடு அதிகமாக பழகி வருகிறார் .அடிக்கடி எதற்கெடுத்தாலும் அசீம் மற்றும் விக்ரமனை குறை கூறி கொண்டிருக்கிறார்.

குற்றசாட்டுகளும் எச்சரிக்கையும்

குற்றசாட்டுகளும் எச்சரிக்கையும்

ஆரம்பத்தில் விக்ரமுடன் ஒரே அணியாக இருந்த அமுதவாணன் பின்பு அவரிடம் இருந்து பிரிந்து இப்போது எதை செய்தாலும் அதற்கு காரணம் விக்ரமன் தான் என்று குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்து வருகிறார். சக போட்டியாளர்கள் அவரோடு சண்டையிட்டு வந்தாலும் அதற்கு காரணம் விக்ரமன் தான் என்று அவர் கூறி வருவது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய 24 மணி நேர எபிசோட் பாத்ரூம் உள்ளே யாரோ குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வாசலில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் அமுதவாணன் திடீரென கதவின் இடுக்கின் வழியாக எட்டிப் பார்க்கிறார். அப்போது பிக் பாஸ் அமுதவாணன் உங்களுடைய மைக்கை மாட்டிக் கொண்டு வரவும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

இரு வேறுபட்ட கருத்துக்கள்

இரு வேறுபட்ட கருத்துக்கள்

பிக் பாஸ் எச்சரித்ததும் ஆடி போன அமுதவாணனை அந்த இடத்தில் இருந்து ஓடுகிறார். அப்போது அடுத்த அரையில் இருந்து ஷிவின் வெளியே வருகிறார். ஷிவின் என்ன நடந்தது தெரியாமல் அமுதவாணனை ஒரு மாதிரி பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்து பலரும் பல விதமான கருத்து தெரிவித்து வரும் நிலையில அமுதவாணன் பல கேமராக்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும் இப்படி செய்ய மாட்டார் ஆனால் வேண்டுமென்றே ஒரு சிலர் இப்படி ஒரு வதந்தியான வீடியோக்களை பரப்பி வருகிறார்கள் உள்ளே இருப்பவரோடு அவர் பேசிக்கொண்டு இருக்கிறார் பேசுவது சரியாக கேட்க வேண்டும் என்பதற்காக கூட கதவின் பக்கத்தில் வாயை வைத்து அமுதவாணன் பேசியிருக்கலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த வீடியோவை அப்படியே நம்பிய ரசிகர்கள் பலர் அமுதவாணனுக்கு இந்த வாரம் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசனையும், விஜய் டிவியையும் டேக் செய்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இந்த வாரம் அமுதவாணன் வெளியேறிவிட்டால் எலிமினேஷன் இருக்காது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+