அசீம் பேசிய வார்த்தைக்கு ரசிகர்கள் வெளியிட்ட குறும்படம்... சூட்டிங் ஸ்பாட்டிலும் இப்படி தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்பு நான் பிக்பாஸ் வீட்டிற்குள் தான் கோவக்காரனாக இருக்கிறேன் வெளியே இப்படியெல்லாம் யாரையும் பேசியது இல்லை என்று கூறி இருக்கிறார்.

அசீம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார் என்று பலரும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அசீம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் ப்ராக் ஆக வந்த போலீஸிடம் மரியாதை குறைவாக அவர் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதில் ஆரம்பத்தில் இருந்து அசீம் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் மரியாதை குறைவாக பேசுகிறார் என்று அவருக்கு எதிராக கருது நிலவி வந்தது. அவருடைய ரசிகர்கள் அவர் உண்மையாக இருக்கிறார் நடிக்காமல் பேசுகிறார் என்றெல்லாம் அவருக்கு ஆதரவு கூறி வந்தாலும் பெட்டிசன்கள் இது ஒரு மோசமான செயல் ரியாலிட்டி ஷோவில் இதை பார்க்கும் ரசிகர்களும் இதே முறையை பின்பற்ற வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து கூறி வந்தனர்.

கட்ட பஞ்சாயத்து

கட்ட பஞ்சாயத்து

கனா காணும் காலங்கள் டாஸ்க் முடிவடைந்தது ரேங்கிங் டாஸ்க் தொடங்கி உள்ளது. அதில் அசீம் முதலாவது இடத்தில் தனக்கு பொருத்தமானது என்று நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஷிவின் மற்றும் விக்ரமன் எங்களுக்கு இந்த இடம் சரியானது என்று தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்தனர். உடனே விக்ரம் இருக்கும் அசீமுக்கும் தரமான சண்டை தொடங்கியது இந்த இடத்தை நான் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அமுதவாணன், மணிகண்டன், ஏடிகே போன்றவர்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன் என்று சொல்ல ஷிவினுக்கும் அசீமிற்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் விக்ரமன் அசீமோடு பேசிக் கொண்டிருக்கும் போது நீங்க கட்டப்பஞ்சாயத்து செய்யாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.

மரியாதை குறைவான பேச்சு

மரியாதை குறைவான பேச்சு

அடுத்ததாக ஷிவின் பேசிக் கொண்டிருக்கும் இப்போது அசீம், நீ என்ன பேசினாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்ன வேண்டுமானாலும் பேசு என சொல்ல, ஷிவின் உங்களுக்கு பேச தைரியம் இல்லை எனக் கூறியதும் இருவருக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. அசீம் எண்ண தைரியம் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் உனக்கு மரியாதை கெட்டுவிடும் என்று விவாதிக்க தொடங்கினார். அது மட்டுமில்லாமல் தைரியம் இல்லை என்றெல்லாம் சொல்லாத, மூஞ்சிய பாரு ஆமை குஞ்சு அவிச்சு வச்ச மாதிரி இருந்துட்டு பேசுற என்று கூற மணிகண்டன் அசீமை சமாதானப்படுத்தினார். பிறகு சண்டை ஓரளவு குறையவே அசீம் ஒன்பதாவது இடத்திற்கும், விக்ரமன் பத்தாவது இடத்திற்கும் சென்று நின்றனர். ஆனால் இப்படி மரியாதை குறைவாக அசீம் பேசியதை ஒரு மணி நேர எபிசோட்டில் காட்டவில்லை.

சூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனை

சூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனை

ஒவ்வொரு வாரமும் மற்ற போட்டியாளர்களை தொடர்ந்து தரகுறைவாக பேசி வரும் அசீமை வார கடைசியில் கமல் வறுத்தெடுப்பது ஒவ்வொரு வாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த நேரத்தில் தலையை ஆட்டிக் கொண்டு பின்பு மீண்டும் தன்னுடைய அதே பாணியை பின்தொடர்வது அசீமின் வாடிக்கையாக தான் இருக்கிறது. இந்த நிலையில் சனிக்கிழமை எபிசோட்டில் கமல் அசீமை கண்டித்து இருந்தார். ஆனாலும் தான் செய்வது தவறில்லை என்பது போலத்தான் அசீம் இருந்தார். அது மட்டுமல்லாமல் நான் வெளியே இப்படி இருந்தது கிடையாது. ஏதாவது பிரச்சனை என்றால் கூட விலகி சென்று விடுவேன். இவ்வளவு வாதிட மாட்டேன் என்று திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஏற்கனவே அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசுவது போல தான் சூட்டிங் ஸ்பாட்டில் பேசுவார் என்று அவரோடு நடித்த சக நடிகர்கள் பலர் சேனல்களுக்கு பேட்டி கொண்டு கொடுத்து கொண்டிருக்கும் வீடியோக்களை பகிர்ந்து அசீமை கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் பூவே உனக்காக சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் பிராங்காக போலீஸ் என்று ஒரு சில நபர்கள் சூட்டிங் ஸ்பாட்டிற்குள் வந்து பிரச்சனை செய்திருக்கின்றனர். அப்போது அசீம் பேசிய வீடியோவையும் ரசிகர்கள் இப்போது பகிர்ந்து வருகிறார்கள். போலீஸ் என்று சொன்ன பிறகும் எவ்வளவு திமிராக பேசுகிறார். ஆனால் கமல் முன்பு எனக்கு கோபப்படவே தெரியாது என்பது போல பேசுகிறாரே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அசீமிற்க்கு போலீஸ்காரர்கள் என்று அவர்கள் பேசியது பிராங்க் என்பது ஆரம்பத்தில் தெரியவே செய்யாதாம்? தெரியாமலே இவ்வளவு பேசியிருக்கிறாரே என்று இப்போது கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+